இராசவள்ளிக் கிழங்கு புடிங்

தேதி: December 5, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

இராசவள்ளிக் கிழங்கு - ஒன்று (பெரியது)
தேங்காய் - 1/2 மூடி
சீனி - ஒரு கப்
உப்பு - ஒரு சிட்டிகை


 

king yam என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ராசாவள்ளிக்கிழங்கு அளவில் பெரியதாக இருக்கும். கிழங்கின் உட்புறம் இளம் ஊதா வண்ணத்தில் இருக்கும். இளம் மஞ்சள் வர்ணத்திலும் ஒரு வகை உண்டு. இந்த கிழங்கினை உப்பிட்டு அவித்து சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும். இலங்கை வாழ் மக்கள் இதனை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
இராசவள்ளிக்கிழங்கை தோல் சீவி சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் பிழிந்து முதல் பால் மற்றும் இரண்டாவது, மூன்றாவது பாலை தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டாம் மூன்றாம் பாலை ஊற்றி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பால் கொதித்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள இராசவள்ளிக் கிழங்கை போட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேக விடவும்.
கிழங்கு வெந்ததும் அதில் சீனியை சேர்க்கவும். தீயின் அளவை குறைத்து வைத்து அடிக்கடி கிளறி விடவும்.
சீனி கரைந்து சற்று கெட்டியானதும் அதனுடன் பிழிந்து வைத்திருக்கும் முதற் பாலை ஊற்றவும்.
பின்னர் கிழங்கை கரண்டியால் நன்கு மசித்து விடவும். தண்ணீர் சுண்டியதும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
சுவையான இராசவள்ளிக் கிழங்கு புடிங் தயார். இதை சூடாகவும் சாப்பிடலாம், அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பின்னர் ஜில்லென்றும் சாப்பிடலாம்.
அறுசுவை நேயர்களுக்காக இந்த சுவையான இராசவள்ளி கிழங்கு புடிங்கை செய்து காட்டியவர் <b> திருமதி. வத்சலா நற்குணம் </b> அவர்கள். இலங்கை சமையல் செய்முறைகள் பலவற்றை நேயர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றார். இதனை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இப்ப தான் எனக்கு இராச வள்ளிகிழங்கு இருப்பது தெரியும்.நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வத்சலா செஞ்சுட்டேன். எனக்கு வடிவா செய்யத்தெரியாது ஆனா தெரியா எண்டு சொல்ல வெக்கத்தில கிழங்கை தன்ணிய ஊத்தி வேகவிடுவ்விட்டு கிரைண்டரில போட்டு அடிச்சு பசும்பாலையும் சுகரையும் சேர்த்து கொதிக்கவிடுவேன்.எப்டி உவ்வேக் ஆ இருந்திருக்கும் எண்டு யோச்சு பாக்கவும்.அதுக்குள்ள அம்மா செய்றது நல்லா வித்தியாசமே இருக்குமே எண்டு ஹஸ் சொல்றதுக்கு இங்குள்ள கிழங்குகள் சரியில்லை என்று சொல்லிவிடுவேன்.
ஆனா நீங்கள் சொன்னமாதிரி செய்ய நல்ல சுவையா இருந்தது நானே நிறைய சாப்பிட்டனான். உங்களால் என்னுடைய குட்டு வெளிப்பட்டுவிட்டது.இப்பதான் அம்மா செய்றமாதிரி இருக்கு எண்டு சொல்லியாச்சு.
அறுசுவைல போனவருசத்தில இருந்து தேடினனான் குறிப்பு கிடைக்கவில்லை.
மிஞ்சினாத்தானெ வத்சலா அடுத்தநாள் வச்சு சாப்பிடலாம்?
கொதிக்கும் போது வாசமும் பாக்க வடிவாயும் இருந்தது.மிக்க மிக்க நன்றி.
போட்டோவில வடிவா இருக்கிறீங்கள். இனி கதைக்கும் போது முகத்தை யாபகம் வச்சு கதைக்கலாம்.
சுரேஜினி

சுரேஜினி, நீங்கள் செய்து நன்றாக வந்துள்ளது என்று
சொல்லும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

மீதம் இருந்தால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நாளை சாப்பிடலாம்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

its very nice receipe.. i cook it.. taste nice. thank you

Love is Best, so PLS dont test

You are flowing my receipe, so i am very happy.
thank you

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

I hav tried ur pudding..very very tasty & now it's my favourite one.
During my school days,i tasted this pudding 4m my friend.
Since that time i am longing 2 taste that again.
It's u who hav fullfilled it.myself tried it!!It came out very tasty.
Thank u very much.

Jasmin

Hi Vathsala, Tnx for sharing this delicious recipe.