முட்டை வெங்காய மசாலா

தேதி: December 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

1. முட்டை - 6
2. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
3. பச்சை மிளகாய் - 4
4. இஞ்சி - 1 இன்ச்
5. வெங்காயம் - 2
6. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
7. உப்பு
8. நெய் (அ) எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
9. பால் - 1 கப்
10. கடுகு, சீரகம், கருவேப்பிலை - தாளிக்க


 

முட்டை வேக வைத்து உறித்து பாதி பாதியாக வெட்டி வைக்கவும்.
வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் நன்றாக அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கருவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த மசாலா சேர்த்து வெங்காயம் வதங்கும்வரை வதக்கவும்.
முட்டை சேர்த்து வெங்காயம் கலர் மாறும் வரை வதக்கவும்.
இதில் பாலும், உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, கொத்தமல்லி இலை தூவி, கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கிவிடவும்.


பரோட்டா, சப்பாத்தி, சாதத்துக்கு பக்க உணவாக சுவை சேர்க்கும். பால் சேர்த்து செய்வதால் வித்தியாசமான சுவை தரும்.

மேலும் சில குறிப்புகள்