சமைத்து அசத்தலாம் -3, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 2, எதிர்பார்த்ததை விட அதிகமாக எல்லோருமே ஒன்றிணைந்து வெற்றியும் கண்டுவிட்டோம். அதேபோல் இது பகுதி - 3 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை சரஸ்வதியக்காவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) முடிவடையும். புதன்கிழமை(17/12), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

போன தடவை எல்லோரும் வந்து மிகவும் திறமையாக எம்மை ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டார்கள். ஆரம்பிக்கும் போது பயத்தோடுதான் ஆரம்பித்தேன், யார் யார் இணைகிறார்களோ அல்லது இணைய மாட்டார்களோ என்று, அத்துடன் திடீரென ஆரம்பித்ததாலும்... ஜலீலாக்காவின் குறிப்புக்கள் அதிகமாக செய்யப்படவில்லை... இருப்பினும் கன்னி முயற்சி என்பதால்... அதுவும் பெரிய வெற்றியே.

அடுத்து செல்வியக்காவினுடையது... மிகவும் அருமையான வெற்றியையும் உற்சாகத்தையும் தந்துள்ளது.

விஜிமலை, துஷியந்தி, வனிதா.... மிகவும் ஆர்வமாக அசத்திவிட்டீங்கள் மீண்டும் உங்களுக்கு ரேணுகாவுடைய , என்னுடைய சார்பில் நன்றிகள். மற்றும் அன்போடு கலந்து கொண்ட... ரஸியா, சந்தோ,சுரேஜினி, இலா, இந்திரா, ஜெயலஸ்மி, ரேணுகா, விஜிமலை, வனிதா, கவி எஸ், வத்சலா, தனு,மேனகா, ஆசியா உமர், ஆயிஸ்ரீ, ஹாசினி, ஸ்ரீ, சுஹைனா, சீதாக்கா, கவிசிவா, பபி, அருண்பாலா, மனோகரி அக்கா, குயிலா, மனோ அக்கா, மர்ழியா, கவின், விஜி சத்தியா, ஸாதிகா அக்கா,அரசி, ஜலீலாக்கா, பர்வீன் பானு, வின்னி, அம்முலு, பாலம்மு, ஜூலைகா, இமா, துஷியந்தி, சுஜாதா, ஷராபுபதி, மாலி, நர்மதா, சங்கீதா....மற்றும் செல்வியக்கா.. அனைவருக்கும் மிக்க நன்றி!!! நன்றி....

போனதடவை கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள் இத்தடவையாவது வந்து கலந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கணக்கெடுப்பாளர் ரேணுகாவிற்கு பெரிய நன்றி. இத்தடவை சொல்லிட்டீங்கதானே... இனி நான் தேடமாட்டேன் உஷாராக இருக்கிறேன்... நீங்கள் கரெக்டா கணக்கெடுங்கோ.... ஓகே ரேணுகா....

எல்லோரும் வாங்கோ வாங்கோ.... இன்றல்ல... திங்கட்கிழமை 8 ம் திகதி ஆரம்பியுங்கோ... இங்கேயும் தெரிவியுங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வெண்டைக்காய் புளிகுழம்பு, கேரட் கோஸ் பொரியல்.

இப்படிக்கு
இந்திரா

indira

அன்பு தோழி, சரஸ்வதி, அதிரா, ரேணுகா

நெய் காய்ச்சும் முறை

நெய்ல்- ஜீரகம் வரமிளகாய் சேர்த்து செய்தால் புதுமையாக இருக்கிறது. வித்யாசமாக கமகமக்கிறது.முருங்கக்கீரை போட்டதால் நெய் வாசமானதாக இருக்கிறது.

இன்றைய சமையல்,

ஈஸி சுரைக்காய் கூட்டு,மணத்தக்காளி வற்றல் குழம்பு,இட்லி மாவு,

அன்பு தோழிகளே,

ஹாய் அதிரா, ரேணுகா, சரஸ்வதி,
நான் இன்னும் சமையல் ஆரம்பிக்கவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் பிசியாக இருப்பேன். வியாழனன்றுதான் சமைக்க ஆரம்பிக்கலாம். ஆனால் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இன்னைக்கு கத்தரிக்காய் மசாலா செய்தேன் நல்லா வந்தது சோம்பு,கசகசா, மசாலவெல்லாம் போட்டு வித்தியாசமா இருந்தது.

ஆ... மிகவும் நன்றிகள்...
இந்திரா... சமையலோடு முதலாவதாக ஆரம்பித்து வைத்திருக்கிறீங்கள்.
விஜிமலை... அதே உற்சாகத்தோடு ஆரம்பித்திருக்கிறீங்கள்.
மிக்க நன்றி இமா... உங்கள் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

கவி எஸ்... சமையல் அபாரமாக இருக்கிறதே....

அனைவருக்கும் மிக்க நன்றி. இனித்தான் நான் குறிப்புத் தேடப்போகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இன்று காலைக்கு தேங்காய் சட்னி சூப்பர்.

இட்லி மாவும் செஞ்சாச்சு

நன்றி, சரஸ்வதி மேடம்

அன்புடன்

சீதாலஷ்மி

இன்று மாலை சர்க்கரைவள்ளி கிழங்கு போண்டொ சிற்றுண்டி. வித்யாசமான ரெசிப்பி.

இப்படிக்கு
இந்திரா

indira

சீதா அக்கா, இந்திரா... வாங்கோ இன்னும் முடிந்தால் செய்யுங்கோ...

என்ன எல்லோரும் அமைதியாக இருக்கிறார்களே.... ஹஜ் பெருநாள் என்பதால் நிறையப்பேர் லீவில் இருக்கிறார்கள். எங்கள் மற்ற உடன் பிறப்புக்கள் என்ன ஆனார்கள்.... வாங்கோ... வாங்கோ... இன்னும் நாட்கள் இருக்கிறதுதானே.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கடவுளே நான் அந்தப்பக்கமா சமைக்கிறதுக்காக அதென்றால் என்ன இதென்றால் என்ன என்று பெரிய யுத்தம் நடத்திக்கொண்டிருக்க இங்க எல்லாம் சமைக்க தொடங்கீட்டீங்களோ?
விடவே மாட்டன்.
எண்ணிக்கோங்கோ மை டியர் ரே
தக்காளி சூப்,ஆப்பம்,காளான்சாப்ஸ்,
கத்தரிக்காய்பச்சடி
சுரேஜினி

மேலும் சில பதிவுகள்