கீரை கூட்டு

தேதி: December 8, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சின்ன வெங்காயம்-8
பொடியாக அரிந்த தக்காளி- 1 கப்
கீரை - ஒரு கட்டு
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்
தேங்காய்த்துருவல்- ஒரு கைப்பிடி
சோம்பு-அரை ஸ்பூன்
தேவையான உப்பு
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
வெந்த துவரம்பருப்பு- அரை கப்


 

கீரையைக்கழுவி பொடியாக அரிந்து கொள்ளவும். எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி சூடு செய்யவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, மஞ்சள் தூளைச் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு குழைந்ததும் கீரையை சேர்த்து தண்ணீர் தெளித்து வேக விடவும். முக்கால் வாசி வெந்ததும் தேங்காயை சோம்புடன் அரைத்துச் சேர்த்து, வெந்த பருப்பு, உப்பு சேர்த்க் கலந்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோ மேடம், இந்த கூட்டை செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. நெய் விட்டு சாப்பிட, பிள்ளைகளுக்கும் பக்குவமாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

அன்புள்ள வானதி!

கீரைக்கூட்டு, வெண்டைக்காய் வதக்கல் இரண்டும் செய்து பார்த்து சுவையாக இருந்ததென்று எழுதிய அன்பான பின்னூட்டம் மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. அதிலும் கீரைக்கூட்டு எங்கள் இல்லத்திலும் ஒரு ஸ்பெஷல் ஐட்டம் எப்போதுமே. அடிக்கடி செய்வதுண்டு.
உங்களுக்கு என் அன்பு நன்றிகள்!!

அன்பு சகோதரி மனோ அவர்களுக்கு,

நேற்று கீரை கூட்டு செய்தேன் மிகவும் அருமை. நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்புள்ள சகோதர் ஹைஷ்!

உங்களின் அறிவார்த்தமான இழைகளின் பதிவுகளை ஏற்கனவே படித்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். பதிவுகள் இடும் சுறுசுறுப்பிற்கு இடையே ஆர்வத்துடன் சமையலிலும்கூட முயற்சி செய்து இந்த கீரைக்கூட்டும் வெண்டைக்காய் வதக்கலும் செய்து பார்த்து அதற்கு பின்னூட்டமும் கொடுத்திருக்கும் உங்களுக்கு என் அன்பான நன்றிகள்!

அன்பு சகோதரி மனோ அவர்களுக்கு,

பாரட்டுதலுக்கு மிகவும் நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126