ப்ரெட் பக்கோடா

தேதி: December 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

1. ப்ரெட் துண்டுகள் - 2 (ஓரம் நீக்கியது)
2. கடலை மாவு - 3/4 கப்
3. இஞ்சி - 1 துண்டு
4. பச்சை மிளகாய் - 3
5. பூண்டு - 4 பல்
6. வெங்காயம் - 1
7. கறிவேப்பிலை - கொஞ்சம்
8. உப்பு


 

வெங்காயம், ப்ரெட், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
மாவுடன், எல்லாம் சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு கெட்டியாக பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை சிறு துண்டுகளாக போட்டு எடுக்கவும்.


விரும்பினா கொஞ்சம் அரிசி மாவு கலந்துகங்க, மொறுமொறுப்பா இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா,
ப்ரெட் வாங்கி வந்து இருக்கேன். நாளை விருந்தினர்கள் வருகின்றாங்க. செய்யலாம் என்று உள்ளேன். எனக்கு ஒரு சந்தேகம்.
ப்ரெடினை சிறிய துண்டுகளாக போட்டால் நிறைய எண்ணெய் இழுக்குமா?
ப்ரெடினை பொடித்து போடலாமா?
அன்புடன்,
கீதா ஆச்சல்

எண்ணெய் குடிக்காது கீதா... நீங்க பொடியா நறுக்கி பிசையும்போதே ப்ரெட் பொடியாகிடும். கவலையே வேண்டாம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ஈஸியான குறிப்பு.நல்லாயிருந்த்து வனி.

மிக்க நன்றி மேனகா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா