வெஜ் சாகு

தேதி: December 9, 2008

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளை - 1
கேரட் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
பீன்ஸ் - கொஞ்சம்
அரைக்க:
தேங்காய் - 1/4 கப்
பொட்டுகடலை - 2 தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
பச்சைமிளாகாய் - 2
மிளகு - 1/4 தேக்கரண்டி
இஞ்சி - கொஞ்சம்
சீரகம் - 1 தேக்கரண்டி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
புளி - கொஞ்சம்
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவைகேற்ப


 

காய்கறிகளை உப்பு போட்டு வேக வைக்கவும். அரைக்க கூறியுள்ளதை நல்ல பேஸ்டாக அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் தாளிக்கயுள்ளதை போட்டு தாளித்து அதில் அரைத்த பேஸ்ட், மஞ்சள் தூளையும் போட்டு நன்றாக கிளறி மூடி போட்டு மூடி ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.
அந்த பேஸ்ட் நல்ல கெட்டியாக வந்தவுடன் வெந்த காய்கறிகளையும் போட்டு 1 கப் தண்ணீர் சேர்த்து வேண்டுமென்றால் கொஞ்சம் உப்பையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
மேலே கொத்தமல்லி இலை போடவும். இப்போது வெஜ்சாகு ரெடி


இது கோவாவில் செய்யக் கூடிய சைட் டிஷ்.
இது சப்பாத்தி, பூரி தோசைக்கும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நேற்று இரவு சப்பாத்திக்கு இந்த வெஜ் சாகு செய்தேன். மிக அருமை நன்றி.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126