ரின் மீன் வறை

தேதி: December 10, 2008

பரிமாறும் அளவு: 3நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரின் மீன் - 1
காரட் - 2
வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
ரின் மீனில் உள்ள நீரை வடித்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின்பு மீனை சேர்த்து கிளறி, காரட் துருவலையும், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வறுக்கவும்.
சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.


இது சுடு சோறு, புட்டுடன் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இது வரை இந்த முறையில் வீட்டில் செய்தது இல்லை மிகவும் நன்றாக இருந்தது நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

சகோதரர் ஹைஷ், நீங்கள் ரின் மீன் வறை செய்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"