கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

ஹை அனைத்து அருசுவை தோழிகளுக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்(11/12/08)

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்(11/12/08)

தோழிகள் அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

ஹாய் எல்லாருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்(11/12/08)

தோழிகள் அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

தீபத் திருநாள் வாழ்த்துக்கள்
அனைத்து தீபத்திருநாளைக் கொண்டாடும் தோழிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

நாங்கள் இதனை "விளக்கீடு" என்றுதான் சொல்வோம். அடுத்தநாள் கோயிலில் சொக்கப்பன் என்று சொல்வார்கள் என நினைக்கிறேன் நடக்கும். சரியாக நினைவில்லை, மறந்துவிட்டது. அதெல்லாம் ஒரு காலம். தடிகள் வெட்டி பந்தம் சுத்தி, எப்போ இருட்டு வரும் எனக் காவல் இருந்து, எனக்கு தாங்கோ நான் தான் கிணற்றுக்குக் குத்துவேன், கேற்றுக்கும் நான் தான் இப்படி அப்பாவிடம் சண்டைப் பிடித்து வாங்கிக்கொண்டுபோய் கொழுத்தியதெல்லாம் கனவுபோல் தெரிகிறது.

வாசலில் வாழைத் தண்டு நட்டு அதில் தேங்காய்ப்பாதியை வைத்து அதில் கொழுத்துவது அதெல்லாம் ஒரு காலம்... பின்னர் சுட்டி கொழுத்தினோம்... இப்போ சிலர் மெழுகுவர்த்தி கொழுத்துகிறார்கள்.

ஆனால் பிள்ளைகளுக்கு எதுவுமே புரியாது... "வட் இஸ் தட்?" என்று கேட்க மட்டும்தான் தெரிகிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தோழிகள் அனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
அதிரா 'சொக்கப்பனை கொளுத்துவது' என்று சொல்வார்கள். பனை ஒலைகளால் கூம்பு வடிவத்தில் செய்து கொளுத்துவார்கள். நானும் சின்ன வயதில் மைலாப்பூரில் பார்த்தது. ம் அது ஒரு கனாக்காலம். இப்ப எல்லாம் போச்சு.

நன்றி பழைய நினைவுகளைக் கிளறி விட்டதற்கு.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்