தேதி: April 2, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
உளுத்தம் பருப்பு - 2 கிலோ
சீரகம் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
அரிசி மாவு - 250 கிராம்
வெண்டைக்காய் - 2
பிரண்டை - 6 அடி நீளம்
விளக்கெண்ணெய் - 125 கிராம்
உப்பு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பை நீர் விட்டு ஊற வைக்கவேண்டும். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு நீரை வடிகட்டி உளுத்தம் பருப்பை வெயிலில் காய விடவேண்டும்.
உளுத்தம் பருப்பு நன்கு உலர்ந்ததும் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
பிரண்டையைச் சிறுசிறுத் துண்டுகளாக்கி அத்துடன் ஒரு வெண்டைக்காயையும், உப்பையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு சட்டியில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு, பிரண்டை விழுதைப் போட்டு கலக்கி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
கொதி வந்ததும் இறக்கி ஆறவிட்டு வடிகட்டிக் கொள்ளவும்.
உளுத்தம்பருப்பு மாவில் பெருங்காயத்தைச் சிறிது நீரில் கரைத்து ஊற்றி சீரகத்தை கலந்து பிரண்டை, உப்பு சேர்ந்த நீரைத் தெளித்து நான்கு அல்லது ஐந்து பெரும் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
மாவு உருண்டைமீது லேசாக எண்ணெய் தடவி மாவை அம்மியில் வைத்து நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளவும்.
இடிக்கப்பட்ட மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அரிசிமாவில் தோய்த்து, அப்பளக் கட்டையினால் உருட்டி வட்ட வடிவமான அப்பளமாகச் செய்து கொள்ளவும்.
பின்னர் சுத்தமான துணியை நிழலில் பரப்பி அதன்மீது அப்பளங்களைக் காயவிடவும்.
Comments
appalam
nan indha muraiyil appalam ceivadu try panninen, but appalam nandraga veesavillai. appalam nandraga veesi poriya vendumanal adarku enna add paan vendum. please ennaku answer thevai.