பப்ஸ்

தேதி: December 12, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 4 கப்
பட்டர் - 250 கிராம்
வினிகர் - 2 சொட்டு
உப்பு - சிறிது
விருப்பத்திற்கேற்ற ஸ்டப்பிங் - தேவையான அளவு


 

மைதாவை சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் 100 கிராம் பட்டரை உருக்கி ஊற்றி ஒரு சொட்டு வினிகர் மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசையவும்.
மாவை நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து உருண்டையாக்கி வைத்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவை சப்பாத்தியை போல தேய்த்து படத்தில் காட்டியுள்ளது போல் நடுவில் பட்டரை வைக்கவும்.
பின்னர் நான்கு பக்கங்களிலும் உள்ள மாவை உட்புறமாக மடக்கிக் கொள்ளவும்.
அதன் பிறகு மடக்கி வைத்திருக்கும் மாவை 10 நிமிடம் ப்ரிட்ஜில் வைத்திருந்து எடுத்து பின் மெல்லியதாக தேய்க்கவும். மற்றொரு முறை: மாவு பிசைந்ததும் மெல்லியதாக தேய்த்து அதன் மேல் பட்டரை தடவி பின்னர் மடித்து அதை எடுத்து ப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்திருந்து எடுத்து மெல்லியதாக தேய்க்கலாம்.
பின் படத்தில் காண்பித்துள்ளது போல் மடித்து மீண்டும் 10 நிமிடம் ப்ரிட்ஜில் வைத்திருந்து எடுக்கவும். இதே போல் 5 அல்லது 6 முறை செய்யவும்.
கடைசியில் மாவை வெளியில் எடுத்து வைத்து மெல்லியதாக தேய்த்துக் கொள்ளவும். பின்னர் அதை தேவையான வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு நறுக்கிய ஒவ்வொரு துண்டு மாவிலும் ஸ்டப்பிங்கை வைத்து மடித்துக் கொள்ளவும்.
அவனை 450 Fல் முற்சூடு செய்து வைக்கவும். அதில் ஸ்டப்பிங்குடன் உள்ள பப்ஸை வைத்து 10 - 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
பப்ஸ் வெந்ததும் எடுத்து அதன் மீது சிறிது பட்டரை தடவவும். க்ரிஸ்பியான, சுவையான பப்ஸ் தயார்.
இந்த பப்ஸ் குறிப்பினை வழங்கியுள்ள <b> திருமதி. சரண்யா அசோக்குமார் </b> அவர்கள் சமைப்பதில் மட்டுமல்லாமல் கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் பெற்றவர். சமையல் சம்பந்தமான வீடியோக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிகம் பார்ப்பது, புதிது புதிதாய் சமைப்பது இவரது பொழுதுபோக்கு. சமையலில் இவரது புதிய முயற்சிகளை பாராட்டி இவர் கணவர் கொடுக்கும் ஊக்கமே, இவரது திறனை மேலும் வளர்த்துக்கொள்ள உதவியதாகக் குறிப்பிடுகின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

hello,

once i tried this recipe in the same way but there was no layers..... i put it in the oven for 45mins.could u pls tell me how can get the layers and is it enough 15 mins?.urs very nice and very good photos, if u dont mind where are u from?

uma,CA,USA.