கத்திரிக்காய் உருளைகிழங்கு பிரட்டல்.

தேதி: December 13, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பிஞ்சு கத்திரிக்காய் - கால் கிலோ
உருளைக்கிழங்கு - 1
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்.
உப்பு - தேவைக்கு


 

கத்திரிக்காய் நான்காக கட் பண்ணவும். அதே மாதிரி துண்டுகளாக உருளைக்கிழங்கையும் கட் பண்ணவும். வெங்காயம் கட் பண்ணிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, உப்பு போட்டு வதக்கி தண்ணீர் தெளித்து சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
வெந்தவுடன் மிளகாய்தூள், மஞ்சள்தூள் போட்டு பிரட்டி வதக்கி எடுக்கவும்.
சுவையான கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பிரட்டல் ரெடி.


இது ரசம் சாதத்துக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று உங்கள் குறிப்பில் இந்த கத்திரிக்காய் உருளைகிழங்கு பிரட்டல் செய்தேன் நல்ல வித்தியசாமான காம்பினேஷன் மட்டும் அல்லாது ரொம்ப டேஸ்ட்ம் கூட நீங்க சொன்னதுப்போல் ரசத்திற்க்கு நல்ல மேச்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

அடிக்கடி நான் செய்வேன்,ஏன்னால் இந்த இரண்டு காயும் எப்பவும் வீட்டில் இருக்கும்.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆசியா,
இதில் தக்காளி சேர்ப்பேன். இன்று சேர்க்காமல் செய்தேன். வித்தியாசமான சுவை. நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி செல்விக்கா.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.