தலைமுடி உதிர்தல்

எனக்கு குழந்தை பிறந்த முன்றாவது மாதத்திலிருந்து முடி உதிர்ந்து வருகிறது. இதற்கு ஏதாவது solution சொல்லுங்கலேன் please.

தொடர்ந்து மொட்டை பொடவும்/
ஜலீலா

Jaleelakamal

தலையை லேசா விரலால் மசாஜ் பன்னிவிட்டு மொட்டை போடுங்க முளைக முளக்க தொடர்ந்து மூன்று வாரத்தில் மூன்று முறை மொட்டை போடுங்க..சரியாகலாம்..ஆனால் ரொம்ப உதிருதுன்னா மருத்துவரிடம் எதுக்கும் கேட்பது நல்லது

ஜலீலா அக்கா, ரூபி அவங்க அவங்களோட முடி உதிருதுன்னு சொல்றாங்கன்னு நினைக்கறேன். ஒரு வேளை நீங்க அவங்கள்தான் மொட்டை போட சொல்றீங்களா? நான் முடியை பிச்சிக்கறேன் இங்க!!

உமா

அய்யோ உமா நானும் இப்படித்தான் தலைய பிச்சுக்கிறேன் (உமான்னா அப்படித்தான் போல!?!!). இப்போ தான் கேட்கனும்னு நினைச்சேன்!!!. நீங்க கேட்டுட்டீங்க.வேகமா வந்து பதிலை சொல்லுங்க. முடி குழந்தைக்கு கொட்டுறதா நினைச்சி தான் சொல்லியிருப்பீங்க போல!!?!!!.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

எனக்கு ராத்திரி தூக்கம் வருமான்னே தெரியல. ஜலீலா அக்காவோட பதிவை பார்த்து மொதல்ல சிரிச்சிட்டேன். சும்மா கலாட்டா பண்றாங்களோன்னு. அப்பறம் பார்த்தா தளிகா வேற அதையே சொல்லி இருக்கவும் இது என்னடா வம்பா போச்சுன்னு நெனச்சித்தான் அந்த பதிவை போட்டேன்.

ஜலீலா அக்கா தளிகா யாராச்சும் வந்து எங்க சந்தேகத்தை தீர்த்து வைங்கப்பா!!

இன்னும் சில முடிகள் பாக்கி இருக்கின்றன (என் மண்டையில்)

உமா

அடடடடா என்ன பொண்ணுங்கப்பா குழந்தைக்கு தான் மொட்டை.எனக்கும் ஜலீலக்காவுக்குமா மொட்டைன்னு நெனச்சீங்க?நாங்க என்ன ப்ரிட்னீ ஸ்ப்ரியர்ஸா

ஆமா என்னடா குழம்புராங்கன்னு நெனச்சேன் இப்ப நானும் குழம்புறேன்..ஓஹ் கவிதாக்கா முடி உதிர்வு அது நார்மல் தான்..
சத்தாணதா சாப்பிட்டா நாளடைவில் சரியாகும்

நல்ல காலம் வந்து சந்தேகத்தை தீர்த்தீர்களே!! அவங்க முடி கொட்டுதுன்னு சொன்னா அவங்க குழந்தை பாவம் அதுக்கு போய் மொட்டை போட சொல்லறீங்களே? இது நியாயமா?? ஹா ஹா!! உமாராஜ் சந்தேகம் தீர்ந்ததா??

உமா

//இன்னும் சில முடிகள் பாக்கி இருக்கின்றன (என் மண்டையில்)//
அய்யோ என்னப்பா இது இப்படி சிரிக்க வைக்கிறீங்க (வெளியே சிரிப்பு உள்ளே அழுகை. அய்யோ அப்ப எனக்கும் இப்படித்தான் கொட்டுமா?).

உண்மையில் முதல்ல படிச்சிட்டு அதிர்ச்சியா இருந்தது. அப்புறம் சரி ஒருவேளை இவங்க ராக்கிங் பண்றாங்க போலன்னு நினைச்சு விட்டுட்டேன்.

அப்பா எனக்கும் இப்போதான் நிம்மதியா இருக்கு. சே உண்மையில் பயந்துட்டேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? முடி ரொம்ப கொட்டுச்சுன்னா தொடர்ந்து மொட்டை போட்டுட்டே வாங்க. முடி கொட்ற விஷயம் யாருக்கும் தெரியாது :P On a serious note, எல்லார்க்கும் ஒரே பிரச்சனை வராது உமா. அது அவர் அவர்கள் உடல் வாகு பொறுத்தது. எனக்கெல்லாம் அவ்வளவு முடிலாம் கொட்டல. நல்ல சத்தான உணவு சாப்டா போதும்.

அட அப்படியே கொட்டுச்சுன்னா இருக்கவே இருக்கு மொட்டை (அடிக்க வராதீங்க)

உங்களுக்கு முடி கொட்டாமல் இருக்க வாழ்த்துக்கள்! (மொட்டை இருக்க பயமேன்)

ஓட்டங்களுடன்
உமா

மேலும் சில பதிவுகள்