தேதி: December 14, 2008
பரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கத்திரிக்காய் - அரை கிலோ
எண்ணெய் - 100 மில்லி
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு
வறுத்து அரைக்க:
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
எள்ளு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை -1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
மல்லி - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - கால் ஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்.
தாளிக்க :
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இணுக்கு
வெங்காயம் - பாதி ( கட் பண்ணிக்கொள்ளவும்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்.
கரம் மசாலா - கால் ஸ்பூன்
முதலில் கத்திரிக்காயை கழுவி சிறியதாக இருந்தால் நீளவாக்கில் இரண்டாக கட் பண்ணிக் கொள்ளவும். பெரியதாக இருந்தால் நான்காக கட் பண்ணவும்.
தண்ணீர் வடிகட்டிக் கொள்ளவும். வறுக்க வேண்டியவைகளை மசாலா பொருட்கள், தேங்காய் துருவல் வறுத்து, அரைக்கும் போது பாதி வெங்காயம், தக்காளியை அதனுடன் மிக்ஸியில் சேர்த்து சுற்றி எடுக்கவும்.
நாண்ஸ்டிக் அல்லது அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா போட்டு தாளித்து, கத்திரிக்காயை போட்டு எண்ணெயில் பத்து நிமிடம் பிரட்டி பிரட்டி வேக விடவும்.
அரைத்த மசாலா பொருட்களை சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கத்திரிக்காயுடன் சேர்த்து வேக விடவும்.
வெந்த பின்பு புளிக்கரைசலை கெட்டியாக விடவும்.
மசாலா, புளி வாடை அடங்கியவுடன், மிகச்சிறிய துண்டு வெல்லம் சேர்த்து சிம்மில் வைத்து எண்ணெய் தெளிந்து இறக்கவும்.
சுவையான தளதளக்கும் வீடே மணக்கும் எண்ணெய் கத்திரிக்காய் தயார்.
இது பிரியாணி வகைக்கும், வெரைட்டி ரைஸ், சப்பாத்தி, தோசைக்கு நன்றாக இருக்கும். புளி அளவாக சேர்க்கவும். எண்ணெய் கூட்டியோ குறைத்தோ அவரவர் விருப்பப்படி செய்து கொள்ளலாம்.
Comments
எண்ணெய் கத்தரிக்காய்...
அன்பு ஆசியா,
கிறிஸ்துமஸ் அன்று பிரியாணிக்கு செய்திருந்தேன். பாதாம் புதினா சிக்கனும் இதுவும் செய்தேன். நான் நினைத்தேன் சைவம்னு யாரும் சாப்பிட மாட்டாங்கன்னு. ஆனா, எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க. ரொம்ப நாளாக நீங்கள் செய்யும் இந்த குறிப்பை தேடிக் கொண்டு இருந்தேன். உங்களோட இந்த குறிப்புதான் நான் எதிர்பார்த்த சுவையில் இருக்கு. இனி எப்ப பிரியாணி செய்தாலும் இதுவும் சைட் டிஷ்ஷாக இருக்கும். நல்லதொரு குறிப்புக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
Is it selvikka ?
நம்பவே முடியலை,ஒரு கை தேர்ந்த சமையல் நிபுணரிடம் இருந்து பாராட்டா? மிக்க மகிழ்ச்சி.உங்க பாதம் புதினா சிக்கனை ட்ரை பண்றேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
பெரிய வார்த்தையெல்லாம் ...
அன்பு ஆசியா,
ஐயையோ, என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்கிறீர்கள்? எல்லாருக்கும் எல்லாம் தெரிந்து விடாது. எப்பவும் கத்துக்கணும்னு நினைச்சிகிட்டே இருப்பேன். உணமையில் எனக்கு கூட சரியாக கிடைக்கலை. உங்கள் குறிப்புகள் இன்னும் ரெண்டு, மூணு பார்த்து வெச்சிருக்கேன். உடம்பு சரியானதும் செய்யணும். நாளைக்கு முடிந்தால் கொஞ்சம் கேக் செய்ய இருக்கேன். செய்தால் சொல்கிறேன்.
பாதாம் புதினா சிக்கன் செய்து பாருங்கள். சுவை நாக்கிலேயே இருக்கும். சாதத்திற்கு, பிரியாணிக்கு, சப்பாத்தி, பரோட்டா எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
உண்மை அது தான்,
செல்விக்கா ,You are great,sometimes you are too great.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஆசியா
ஆசியா மேடம் நேத்துதுதான் உஙகள் என்னை கதரிக்காய் குழம்பு செய்தேன்.என் அன்பு கனவரின் பாரட்டை பெட்ரேன்.மிக்க நன்றீ மேடம்
மஹா,
உங்க பின்னூட்டதிற்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஆசியா- எண்ணை கத்தரிக்காய்
அன்பின் ஆசியா, உங்கள் எண்ணை கத்தரிக்காய் மிகவும் சுவையாக இருந்தது. நான் தேங்காய் பூவுக்கு பதி பால் சேர்த்தேன். நன்றாக இருந்தது. நன்றி. படம் எடுத்துள்ளேன். அனுப்புகிறேன்.
-நர்மதா :)
போட்டோ எடுத்தீங்களா?
நர்மதா கருத்துக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
அட்மின் ,
இது யார் அனுப்பிய படம்.நான் அனுப்பலையே.நர்மதாவா ? யாராஇருந்தாலும் மிக்க நன்றி.அழகாக இருக்கு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
எண்ணெய் கத்தரிக்காய்
அன்பு ஆசியா,
ஏற்கனவே செய்தது தான். இப்பல்லாம் அடிக்கடி இதுதான் எங்க வீட்டில் பிரியாணிக்கு. நேற்று சும்மாவே சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டோம். இது செய்யும் அன்று மட்டும் மீதமே இருக்காது.
நன்றி.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
மிக்க நன்றி.
ரொம்ப சந்தோசம்.பின்னூட்டதிற்கு மிக்க நன்றி.நான் செய்து கொஞ்சம் நாள் ஆச்சு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
எண்ணெய் கத்திரிக்காய்
ஆசியா மேடம் உங்க எண்ணெய் கத்திரிக்காய் நேற்று சாதத்திற்கு செய்தேன்,நல்லா இருந்தது,அது மீதியாகி தோசைக்கும் தொட்டு கொண்டோம்,இரண்டுக்குமே நன்றாக இருந்தது.நன்றி மேடம்.
கவி
பின்னூட்டதிற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஆசியாக்கா!
ஆசியாக்கா!
இப்பதான் எண்ணை கத்திரிக்காய் செய்திட்டு வர்றேன். ரொம்ப சூப்பரா இருக்கு. ஏற்கெனவே செல்விக்கா இந்த ரெஸிப்பி ரொம்ப நல்லா இருக்கும் செய்து பாருன்னு சொன்னாங்க.
இப்பதான் செய்தேன். உண்மையிலேயே ரொம்ப நல்ல டேஸ்ட்.
அத்தையும்,மாமாவும் சாப்பிட்டுட்டு இருக்காங்க. நல்லா செய்திருக்கேன்னு பாராட்டினாங்க.ரொம்ப நன்றிங்க்கா!
வந்த அன்னைக்கே பாராட்டு வாங்கிட்டேன்னு என் கணவருக்கும் ரொம்ப சந்தோஷம்!
ஹாய் சாய்கீதா,
மிக்க மகிழ்ச்சி.அத்தை மாமா வந்தாச்சா ?நல்ல திருப்தியாக கவனித்து அசத்துங்க.இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ரொம்ப
ரொம்ப சுவையா இருந்தது ஆசியா... மிக்க நன்றி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா,
பின்னூட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
எண்ணை கத்திரிக்காய்
ஆசியாக்கா உங்க குறிப்பில் இருந்து எண்ணை கத்திரிக்காய் செய்தேன் நன்றாக
இருந்தது. மிக்க நன்றி.
என்றும் அன்புடன்,
மைதிலி.
Mb
மைதிலி,
மிக்க மகிழ்ச்சி.செய்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
எண்ணெய் கத்திரிக்காய்!
ஆசியா அக்கா,
சமைத்து அசத்தலாம்போதே செய்ய நினைத்தது, நேற்றுதான் செய்ய முடிந்தது உங்களின் இந்த எண்ணெய் கத்திரிக்காய். ரொம்ப நன்றாக இருந்தது. நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
இன்னுமா?சுஸ்ரீ,
இன்னும் என் சமையலா?மகிழ்ச்சி.மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஹாய் ஆசியா அக்கா
ஹாய் ஆசியா அக்கா எப்படி இருக்கீங்க? உங்க எண்ணை கத்தரிக்காய் ரெம்ப நல்லா இருந்தது நேற்று சாப்பிட்டது போக மீதி இன்னைக்கு சாப்பிடுகிறேன் சாதத்திற்க்கு அப்பளம் வைத்து ரெம்ப எக்ஸெல்லன்ட் ஆ இருக்கு ஆபிஸில் சாப்பிட்டுகிட்டே ஒரு கையில் அடிக்கிறேன் தேங்ஸ் அக்கா என்னையும் சமையலை நல்லா பண்ணவைத்ததற்க்கு நன்றி
சுஹா,
எண்ணெய் கத்திரிக்காய் செய்து ருசித்து நல்ல கருத்து தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
எண்ணெய் கத்திரிக்காய்
ஆசியா நலமாக இருக்கிறீர்களா? எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ஒரு விருந்தில் செய்தேன். சூப்பராக இருந்தது. அனைவரின் பாராட்டையும் பெற்றது. நன்றி உங்களுக்கு.
வின்னி
பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.பாராட்டுக்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஆஹா! என்ன சுவை!
ஆசியாக்கா,
உங்க எண்ணெய் கத்திரிக்காய் சூப்பரா இருந்தது.பிரியாணிக்கு ரொம்ப நல்லா இருந்தது. இரவு சப்பத்திக்கும் அதே வைத்து கொண்டோம். மிகவும் நன்றாக இருந்தது.
அன்புடன்
திவ்யா அருண்
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.