ப்ளீஸ் யாராவது சொல்லுங்கோ!!!

எனக்கு 2005 ல் சிசேரியனில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது போலவே இல்லை. வயிறு அப்படியே இருந்தது.நர்ஸ் கூட கேட்டாள். இன்னொரு பாப்பா உள்ள இருக்கா? என்று. பிறகு உடம்பும் பெருத்து விட்டது.அப்பப்போ ஒரு உத்வேகம் வந்து வாக்கிங், உடற்பயிற்சி எல்லாம் செய்வேன்.பின் விட்டு விடுவேன்.இப்பொழுது கண்டிப்பாக வயிறையும், உடம்பையும் குறைத்தே தீருவேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன். அதன்படி எல்லா வழிமுறைகளையும் பின்பற்றியும் வருகிரேன். ஆனால் ஒரு சந்தேகம் ,வருடங்கள் ஆகிவிட்டபடியால் உடம்பு குறைந்தாலும் வயிறு குறையுமா? என்று .என் வயிறு கல் போன்று உள்ளது. இதை குறைக்க ஏதேனும் வழி உள்ளதா தோழிகளே.? என்னை கண்ணாடியில் பார்க்க எனக்கே பிடிக்கவில்லை. தயவு செய்து உதவுங்கள்.

ஏரோபிக்ஸ்கு போங்க..இந்த உடற்பயிற்சி வாக்கிங் இதெல்லாம் நாமாக செய்தால் பல பல ப்ரச்சனைகளால் கொஞ்ச நாளில் விட்டு விடுவோம் திரும்ப பழைய கதை..காசு கொடுத்து க்லாஸ் சேர்ந்தால் ஒழுங்கா போவோம்..போங்க கல் என்ன பாரை போன்ற வயிறே குறையும் நான் கண்டிருக்கிறேன்

தோழி கவித்தாவிற்க்கு.. இந்த அளவு கொலை வைத்து எவ்வளவு குறைக்க வேண்டும் என தெரிந்து கொள்வது நல்லது.

இந்த அட்டவனை எல்லோர்க்கும் உதவும் என நினைக்கிரென்.

சிக் கென்று இடுப்பு கிடைக்க"

இடுப்பு, தொடை சரியான அளவு.

உயரம் இடுப்பு தொடை
153 - 86 - 47
155.5- 86 - 48.5
158 - 87.5 - 51
160.5 - 89 - 52
163 - 91.5 - 53
165.5- 94 - 54.5
168 - 95 - 56

உயரத்தின் அளவு வைத்து இடுப்பு அளவும், தொடையின் அளவும் சரியாக உள்ளதா தொரிந்துக் கொள்ளவும்.
சரி இல்லை எனில் குறைப்பது நல்லது.

இதனால் பல வியாதியில் இருந்து நம்மை காத்துக் கொள்ளளாம்.

குறிப்பு:
இந்த அளவு கோள் பெண்கலுக்கு மட்டும் தான்.

ஆண்கலுக்கு இல்லை.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

தோழிகளோ..... உடல் இளைக்க, தொப்பை குறைக்க, துடை குறைக்கவும் வழி செல்லுங்கள்.

எக்சசைஸ் செய்ய லிங்க் (அ) ஏதேனு வெப்சைட் ( உடற்பயிற்சி ) இருந்தால் செல்லுங்கள்.

வாக்கிங் செல்வதால் உடல் இலைக்கும் என்றும், தொப்பையொ, துடையொ குறையாது என்றும் கூறுகின்ரனர்.

(என் தோழி ஒல்லியாக இருக்கிரால். ஆனால் துடையும், தொப்பயும் பெரிதாக உள்ளது)

அவலுக்கு இன்னும் குழந்தை இல்லை. அதனால் உடல் இலைக்க உதவுங்கள் please...

இந்த குறிப்பு அனைவருக்கும் உதவும் என நினைக்கிரொன்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வீட்டிலேயே உடம்பை குறைப்பதெல்லாம் நடக்காத காரியம் தளி சொன்னது போல வி.என்.சி.சி போன்ற நிறுவனத்திரம் செல்லுங்கள் பணம் அதிகம்தான் ஆனாலும் சூப்பரா ஆகிடலாம்..எனக்கு தெரிஞ்சு ஒருத்தங்க இந்த நிறுவனத்திடம்தான் டிரீட்மெண்ட் எடுத்தங்க அசந்து போனேன் அவங்களை பார்த்தால் டீன் ஏஜ் போல இருக்கு ஆனா பெரிய பையனுக்கு தாயாராம் அவங்க..

நானும் டெலிவரிக்கு பின் போகலம்னு இருக்கேன் இப்படியாவது ரிட்டன் டீன் ஏஜா ஆகலாம்ல ஹி ஹி

(இதெல்லாம் எனக்கு நடக்குற காரியமான்னு கேட்பது காதில் விழுது எல்லாம் அல்ப ஆசைதானுங்கோ)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆன் மர்லி நீ தானே முன்பு வி எல் சிசியில் போன ஆள்?என்னாச்சு?அங்க எப்படி குறைக்க வெக்கிராங்க?என் சொந்தகார பொண்ணும் ரொம்ப குறச்சுட்டா ஆனால் எப்படின்னு கேக்கல.

பாத்து வி எல் சி சி மாதிரி போய் சடனா எடை குறைச்சா பிகர் என்ன்வோ டீன் ஏஜ் மாதிரி இருக்கும் .. சீக்கு கோழி மாதிரி பேஸ் இருக்கும் பரவாயில்லையா.. அதுக்கு தான் மேக்கப் இருக்கேன்னு சொல்றீங்களா.. எனக்கு இதில எல்லாம் ரொம்ப நம்பிக்கை இல்லை. சாப்பாடு கன்ட்ரோல் பண்ணத வரை என்ன மெத்தெட் யூஸ் பண்ணினா என்ன... எனக்கு எப்பவும் ஸ்கின் மட்டும் பள பளான்னு இருக்கனும்.
"If you want things to be different, perhaps the answer is to become different yourself." - Not mine someone else's

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹஹஹா நெஜம் தான் அந்த பொண்ணு அப்படி தான் இருந்தது அதான் கேட்டேன் அதாவது முகம் வாடி போனது போல...உடம்பு குறஞ்சது வயிசு குறஞ்சதா தெரியல..

இலா, உங்க ஸ்கின் ரகசியம்? Flax seed ஆ?

மந்திரம் போட்டா தான் உண்டு
முக்கியமா ப்ராப்ளம் ஸ்பாட்ஸ் குறைக்கணும்ம்னா என்ன ஒரே நாளிலா குறையும்.17 அல்லது 18 வருசம் கஷ்டபட்டு மொக்கி மொக்கி வளத்ததை 3 மாசத்தில குறை ந்னு சொன்ன என்ன நியாயம்.

"If you want things to be different, perhaps the answer is to become different yourself." - Not mine someone else's

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

காலை oats ceral
மதியத்திற்கு oatmeal வித் ஏதாவது குழம்பு.
இரவு 7 மணிக்குள் dinner.

மேலும் சில பதிவுகள்