சோமாஸ்

தேதி: December 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

1. மைதா மாவு - 1 கப்
2. டால்டா - 1/4 கப்
3. வேர்கடலை - 1/2 கப்
4. வெல்லம் - 1/2 (அ) 3/4 கப்
5. உப்பு - 1 சிட்டிகை


 

டால்டா, உப்பு சேர்த்து மாவை நன்று மிருதுவாக பிசையவும்.
வேர்கடலை வறுத்து தோல் நீக்கவும்.
வேர்கடலை, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
பிஸைந்த மாவை சின்ன சின்ன உருண்டையாக எடுத்து மெல்லிய சப்பாத்தி போல் தேய்க்கவும்.
இதன் நடுவில் வேர்கடலை வெல்ல பூரணத்தை வைத்து மடிக்கவும்.
ஓரத்தை விரலால் அழுத்து மூடி விடவும் (இல்லை என்றால் எண்ணெயில் போடும் போது விட்டுப்போகும்)
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இவற்றை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


தேவைக்கு தகுந்தபடி வெல்ல அளவை மாற்றி கொள்ளவும். விரும்பினால் சிறிது தேங்காய் துருவலும் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா இனிப்பு சோமாஸி நிறைய பில்லிங்க் வகை வகையா வைப்போம் ஆனால் வேர்கடலை சற்று வித்தியாசம் தாம்.
நாங்க எள் தேங்காய், பொட்டுகடலை, கச கசா தேஙகாய், கேரட் ஹல்வா, இன்னும் நட்ஸ், க்சரி , இன்னும் ஒரு புதுவையும் இருக்கு இது போல் சோமாஸிகல் செய்வோம்.
அடுத்த முறை வேர்கடலையும் டிரை பண்ணலாம்.
ஜலீலா

Jaleelakamal

நன்றி ஜலீலா... முயர்சித்து பாருங்கள். நானும் கேரட் ஹல்வா, நட்ஸ் வைத்து செய்வேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா