தேதி: December 15, 2008
பரிமாறும் அளவு: 3 பேருக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
புழுங்கலரிசி - 1 டம்ளர்,
பச்சரிசி - 1 டம்ளர்,
குண்டு உளுத்தம் பருப்பு -2 டம்ளர்,
வெந்தயம் - 1தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
சமையல் சோடா - 1தேக்கரண்டி.
தாளிக்க:
------------
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி,
முந்திரி - 2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 2 தேக்கரண்டி(நறுக்கியது),
மிளகு -2 தேக்கரண்டி (உடைத்தது),
இஞ்சி - 2 தேக்கரண்டி(நறுக்கியது),
நெய் - 1 மேசைக்கரண்டி,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.
அரிசி இரண்டையும் ஒன்றாகவும், உளுந்து, வெந்தயத்தை ஒன்றாகவும் ஊற வைக்கவும்.
ஊறியதும் உளுந்தை நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு, அரிசியை ரவை பதத்திற்கு அரைத்து உப்பு, சமையல் ோடா சேர்த்து கலக்கி மாவை எட்டு மணி நேரம் புளிக்க விடவும்.
இட்லி ஊற்றும்முன், வாணலியில் எண்ணெய், நெய் இரண்டையும் ஒன்றாக ஊற்றி காய்ந்ததும் கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி சேர்த்து சிவக்கவிட்டு, மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் கொட்டி கலக்கி வைக்கவும்.
கலக்கிய மாவை ஒரேஅளவுள்ள உயரமான கப்களிலோ அல்லது டம்ளர்களிலோ எண்ணெய் தடவி அரை அளவிற்கு மாவை ஊற்றவும்.
குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சூடேறியதும் மாவு ஊற்றிய டம்ளர்களை அடுக்கி வெயிட் போடாமல் வேகவைக்கவும்.
கத்தியால் குத்தி பார்த்தால் ஒட்டாமல் இருக்கும் (10 - 15 நிமிடங்கள் ஆகும்).
அப்போது எடுத்து, சிறிது ஆற விட்டு, தலைகீழாக கவிழ்த்தால் இட்லி அழகாக வரும்.
இதற்கு கலவை சட்னி, கோஸ் துவையல் நன்றாக இருக்கும்.
இந்த இட்லி இரண்டு நாட்களுக்கு கூட கெடாமல் அப்படியே இருக்கும். பயணத்திற்கு எடுத்துச்
செல்ல நன்றாக இருக்கும்.
Comments
செல்வி அக்கா,
எனக்கு இட்லி என்றால் சாதா இட்லி மட்டும் தான் தெரியும்,இப்ப காஞ்சிபுரம் இட்லியும் செய்து அசத்துவேன். ரவா இட்லி உங்க குறிப்புக்களில் கொடுத்து இருக்கீங்களா? பார்க்கிறேன்.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
இட்லி வகை வகையா..
அன்பு ஆசியா,
நலமா? எங்கம்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டது இது. விதவிதமா டிபன் செய்யறதில் எங்கம்மாவை அடிச்சுக்க ஆளே கிடையாது. ரவா இட்லி கூட எங்கம்மா வேறே ஒரு மாதிரி செய்வாங்க. அந்த குறிப்பும் தருகிறேன். விதவிதமா செய்து அசத்துங்க!
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
செல்விக்கா,
உடன் பதிலுக்கு நன்றி. இட்லி ரவா என்று வாங்கினேன், .என்னன்ன சேர்த்து செய்ய வேண்டும் என்று சொல்லவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
இட்லி ரவா ...
அன்பு ஆசியா,
எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் வறுத்து, ரவையையும் அதிலேயே சேர்த்து வறுத்து இறக்கி, ஆறியதும் தயிர், உப்பு, கலக்கி, 1/2 மணி நேரம் ஊற விட்டு, இட்லி ஊற்றவும். ஈனோ உப்பு கொஞ்சம் சேர்த்தல் இட்லி நன்றாக இருக்கும். விளக்கமான குறிப்பு பிறகு தருகிறேன்.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
நன்றி செல்விக்கா.
உடன் பதிலுக்கு மகிழ்ச்சி. நிச்சயம் செய்து பார்க்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
செல்வி மேடம்
காஞ்சீபுர இட்லி(குறிப்பு தந்த செல்வி மேடத்து)க்கு ரொம்ப ரொம்ப நன்றி.
இப்படிக்கு
இந்திரா
indira
Selvi Amma Great
Portia Manohar,
I am surprised to see you keep on posting recipes,from where you learnt all this selvi amma?
Your passion in cooking is fantabulous.Keep going!!!!
Portia Manohar
இந்திரா & போர்ஷியா...
அன்பு இந்திரா,
நீ கேட்ட பிறகு தான் இந்த குறிப்பை நன் கொடுக்கவே இல்லைன்னு தெரிஞ்சுது, நன்றி.
அன்பு போர்ஷியா,
நலமா? இன்னும் நிறைய குறிப்பு கொடுக்காமல் இருக்கு. எங்கம்மாவே ஏகப்பட்டது செய்வாங்க. அது போக எங்கெல்லாம் போகிறேனோ அந்த பக்க சிறப்பு உணவை கேட்டு தெரிஞ்சிப்பேன். உண்மையில் விதவிதமா சமைப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். சமயலறையை விட்டு எப்படா வெளியில் போவோம்னு நினைக்கவே மாட்டேன். நானாகவும் புதுசுபுதுசா ஏதாவது செய்துகிட்டே இருப்பேன்.
உன் பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
Amazing !!!!!!!
Portia Manohar,
Ennaku thalai sutthura mathiri irrukku selvi amma,
Naan verum 100 recipe therinthu vaithukittu ippadiye vandiya otturean. Ennakum ungalai mathiri niraiya try panna aasai,innaikey puthusa try pannitu inform pannurean. Take Care.
Portia Manohar
Portia Manohar