தலை - வேர்வை

இது ஆரோக்கியம் அல்லது உடற்பயிற்சி பகுதில கூட கேக்கலாம், ஆனா தேவா இங்க தான் முதல்ல பார்ப்பாங்கனு ஒரு அசாத்திய நம்பிக்கை.

தேவா, உடற்பயிற்சி முடித்த பின், உடம்புக்கு குளிப்பது போல், தலைக்கும் குளிக்கணுமா வேர்வையை நீக்க? எனக்கு நீளமான முடி, குளிச்சா சட்டுனு காயாது. வாரத்துக்கு ரெண்டு தடவை தலைக்கு குளிக்கறேன்னாலும் (அதோட துண்டு, போர்வை, தலையணை உறை, சீப்பு எல்லாம் மாற்றி.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.. முடியல), தினமும் ஜிம்முக்கு போயிட்டு வர்றப்போ தலை வேர்வைல குளிச்சுருக்கு.. என்ன செய்யணும் இதுக்கு? இல்லை அப்படியே விட்டுடணுமா?! எனக்கு தலை சுத்தமா இல்லனா தலையணைல சாய கூட பிடிக்கல :((( தேவா பதில் சொல்லற வரைக்கும் வேற யாரும் கூட பதில் சொல்லலாம் ;)

அன்புடன்,
ஹேமா.

தேவசேனா அவர்களின் ஐ.பி. ப்ளாக் ஆகலியே மாமா? :P

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

நானும் தேடிக்கிட்டுதான் இருக்கேன். கொஞ்ச நாளா ஆளைக் காணோம். அதுக்கு காரணம் நம்ம பக்கத்து "தடை" இல்லை.

அங்க வீட்டுத் "தல" தடை போட்டாச்சோ என்னவோ... :-)

ஹேமா, இப்படி ஜிம்க்கு தினமும் போயிட்டு வந்து தலை குளிக்கற வேலையெல்லாம் சரிவராது. உங்களுக்கு இருக்கற அதே ப்ராப்ளம்தான் நிறைய லேடீஸ்க்கு இருக்கு ( இதனாலதான் நான் எக்சர்சைஸ் இப்பலாம் செய்யறதே இல்லைன்னு சொல்லிக்க எனக்கும் ஒரு சாக்கு கிடைச்சிடுச்சு). இதுக்கு தலை குளிப்பதைவிட (வாரம் 2 தடவை குளிப்பது போதும்.) டேபிள் பேனை ஹை ஸ்பீடில் வெச்சு, காற்று நல்லா மண்டையோட்டில் படற மாதிரி காமிங்க. முடியை நல்லா கையால பிடிச்சுக்குங்க. இல்லாட்டி அது பறந்து உள்ளே போய் மாட்டிக்கும். ஹேர் ட்ரையர் உபயோகிச்சு காய வைத்தால் ஒரு வித பிசு பிசுப்பும், முடியும் ட்ரை ஆகிடும். அதனால இதுதான் நான் செய்வது. இப்படி செய்யறதால வேர்வை உலர்ந்து விடும். பிசுப்பிசுப்பான உணர்வு இருக்காது. 3 நாளைக்கு ஒரு முறை தலை குளித்துவிட்டால் அழுக்கால் வரும் பொடுகுத் தொல்லை, அரிப்பும் இருக்காது. ட்ரை பண்ணிப் பாருங்க.

யாருங்க அது, தல பர்மிஷன் கொடுக்கலன்னு கதையெல்லாம் விடறது. இவர் இங்கே, நீ இப்படி எதுவுமே எழுதாம அந்தப் பக்கமே போகாம இருந்தா டொனேஷன்னவுடனே கஞ்சப்பிசினாறி ஓடிப்போயிடுச்சுன்னு உன் பிரெண்டு நினைக்கப் போறாருன்னு சொன்னாங்க. காரணம் தெரிஞ்சும் இப்படிலாம் ஓட்டினா உங்களை என்ன பண்றது? லைபை நிம்மதியா கொஞ்சம் எஞ்சாய் பண்ண விடுங்க. அடுத்த வாரம் தான் நான் ப்ரீயா இருப்பேன். இந்த வாரம் மூச். இப்படி நடுராத்திரி பிசாசு மாதிரி உட்கார்ந்துக்கிட்டு தூக்கக்கலக்கத்துலயும் என் காலை வாரி விடறதுல என்னதான் சந்தோஷமோ. என் தல க்கு ஆங்கிலத்தில் பிடிக்காத வார்த்தை பர்மிஷன் ( நான் அதிசயமா கேட்டாலும் நோ சொன்னா என்ன நடக்கும்னு அனுபவத்தில் கண்டதால இருக்கும்). சோ, நோ தடை எப்போதும்.

அப்படியா தேவா.. சரி செய்து பாக்கறேன்.. அவரு உங்களை இப்படி வாரலைனா நீங்க வந்து பதில் சொல்லிருப்பீங்க? அங்க சம்மர் நல்ல என்சாயா.. இங்க ஆளை கொல்லுது குளிரு.. ஹீட்டர் எல்லாம் ஒண்ணும் பத்தலே எனக்கு.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

மேலும் சில பதிவுகள்