சுறா மிளகு ஆனம், சுறா புட்டு

தேதி: December 16, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மிளகு ஆணம்:
சுறா மீன் - கால் கிலோ
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
மல்லி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
பூண்டு - 4 பல்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்.
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - கொஞ்சம்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - அரை ஸ்பூன்
முருங்கை இலை - இரண்டு கைக்குத்து
உப்பு - தேவைக்கு.
சுறா புட்டு:
ஆணத்தில் உள்ள மீன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 பெரியது (பொடியாக கட் பண்ணிக்கொள்ளவும்)
கடுகு, உளுத்தம்பருப்பு - அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லி, கறிவேப்பிலை - கொஞ்சம்
லைம் ஜூஸ் - 1 ஸ்பூன்


 

மீனை சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், மல்லி சேர்த்து தூள் செய்யவும். மஞ்சள் தூள் அரை ஸ்பூன் சேர்க்கவும். பூண்டு, தேங்காய் வெங்காயம் பாதி, தக்காளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். அரைத்த மசாலாவுடன் புளிக்கரைத்தது, உப்பு சேர்க்கவும்.
கூட்டிய குழம்பை கொதிக்க வைக்கவும், மசாலா வாடை அடங்கியவுடன் மீனை சேர்த்து வேக விடவும். முருங்கை இலை போடவும், கொதித்தவுடன் இறக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம் தாளித்து ஆணத்தில் கொட்டவும்.
சுறா மிளகு ஆணம் ரெடி.
சுறா மீன் புட்டு:
ஆணத்தில் உள்ள மீனை எடுத்து உதிர்த்து கொள்ளவும். முள் உள்ளதை ஆணத்தில் போட்டு விடவும்.
தேங்காய் மிளகாய் கொரகொரவென்று அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்த மீனை போடவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும். நன்றாக கிளறவும். தேங்காய் மிளகாய் அரைத்து வைத்ததை போட்டு பிரட்டி, மல்லி இலை தூவி லைம் ஜூஸ் விட்டு பிரட்டி இறக்கவும். காரம் தேவைப்பட்டால் மிளகு தூள் கால் ஸ்பூன் தூவிக்கொள்ளலாம்.
சுவையான சிம்பிலான சுறா புட்டு ரெடி.


ப்ளைன் ரைஸ், மிளகு ஆணம், சுறாபுட்டு நல்ல காம்பினேஷன். குளிர், மழை காலத்திற்கு ஏற்றதாகும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சுறாபுட்டு சூப்பர்.நாங்கள் இதில் தேங்காய் சேர்க்க மாட்டோம். ஆனால் இன்று சேர்த்து செய்தேன். வித்தியசமாக இருந்த்து. சுறா குழம்பு செய்யமால் சதரணமாக அதனை வேகவைத்து உதிரித்து செய்தேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

பின்னூட்டதிற்கு மிக்க மகிழ்ச்சி.தேங்காய் சேர்க்காமல் சில சமயம் செய்வேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.