முக்கிய அறிவிப்பு

அன்பு நேயர்களுக்கு,

அறுசுவை சர்வர் பராமரிப்பு பணிகளால் சில மணி நேரங்கள் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகின்றோம்.

கடந்த சில தினங்களாக சர்வர் லோடினை அதிகரிக்கும் வகையில் சில விஷமிகள் விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக சர்வர் பாதுகாப்பு வளையத்தினை மேலும் கடுமையாக்க வேண்டியதாயிற்று. இன்னும் சிலர் அறுசுவையை அப்படியே டவுன்லோடு செய்ய முயற்சி செய்கின்றனர். அப்படி செய்பவர்களின் IP முகவரிகளை நிரந்தரமாக ban செய்கின்றோம். இனி அவர்களால் அறுசுவையை பார்வையிட இயலாது. இந்த நடவடிக்கை தொடர்கின்றது.

விஷமிகள் பல்வேறு ஐபி முகவரிகளில் வருகின்றனர். இதனால் அவை முழுவதையும் தடை செய்ய யோசித்தோம். தற்போது வேறு வழியின்றி இதனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் தவறு செய்யாத நேர்மையான சில பார்வையாளர்களும் பாதிக்கப்படலாம். அப்படி யாருக்கேனும் பார்வையிடுவதில் பிரச்சனைகள் இருந்தால் தங்கள் ஐபி முகவரி, இணைய சேவை வழங்கும் நிறுவனம், நாடு போன்ற தகவல்களுடன் எங்களைத் தொடர்புகொண்டு விளக்கம் கொடுத்தால் பிரச்சனையை சரி செய்ய உதவிடுவோம். (பிரச்சனை உள்ளவர்கள் இந்த பதிவினை படிக்க இயலாது :-) இதனை படிப்பவர்கள் நீங்கள் அறிந்த யாருக்கேனும் இதுபோன்ற பிரச்சனை இருப்பதாக கேள்விப்பட்டால் அவர்களுக்கு இந்த தகவலை தெரிவிக்கவும்.)

நல்ல காலம் என்னோட லேப்டாப், டெஸ்க்டாப் எல்லாத்துக்கும் அனுமதி குடுத்தீங்களே மாமா.. புண்ணியமா போச்சு :-) அறுசுவையையே டவுன்லோடா!!! ஆஹா.. இப்படிலாம் கூட நடக்குமா? எ.கொ.ச.இ?

அன்புடன்,
ஹேமா.

பி.கு: நன்கொடை வழங்கியவர்கள் பெயரை ஆங்கிலத்தில் போடுவது போல ஸ்டைலா Ms.ஹேமானு போடலாமில்ல? திருமதியாம்! ஏதோ 50 வயசாகிட்ட மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்கு..

அன்புடன்,
ஹேமா.

உங்க IP address ஐ யூஸ் பண்ணி யாரும் எதுவும் பிரச்சனை பண்ணாதவரைக்கும் உங்களுக்கு பாதிப்பு இல்லை. :-)

நிறைய IPs range block பண்ணியாச்சு. வேற வழியில்லை. நூறு பேருக்கு நல்லது செய்யணும்னா 10 பேரை கட் பண்றது தப்பே இல்லை :-)

அப்புறம் ஒரே நேரத்துல தொடர்ந்து நிறைய பக்கங்களை தனித்தனி விண்டோவுல திறக்கிறதுக்கு முயற்சி செய்யாதீங்க. இந்த செக்யூரிட்டி செட்டப் அப்படி செய்யறவங்களையும் தடை செய்ய வாய்ப்பு இருக்கு.

பார்க்கலாம். இப்ப பண்ணியிருக்கிற மாற்றங்கள் எந்த அளவிற்கு உதவுதுன்னு.

(பி.கு: ஆங்கிலத்தில் போட்டாலும் Mrs ன்னுதான் போடணும். என்ன பண்றது, கல்யாணம் ஆயிட்டாலே ஐம்பது வயசு ஆன மாதிரிதான். போன வருசம் வரைக்கும் நானும் சின்ன பையன் மாதிரிதான் இருந்தேன். ஆனா, இப்ப பாருங்க.. எல்லாம் கா.செ.கோ (காலம் செய்த கோலம்):-))

அட ராமா.. மாமா உங்களுக்கு தெரியாதா? இப்போலாம் ஆங்கிலத்தில் Mrs உபயோகத்தில் கிடையாது. ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆச்சா இல்லியானு எதுக்கு தெரியணும்னு, ஆண்களுக்கு Mr மாதிரி பெண்களுக்கு Ms தான், கல்யாணம் ஆனாலும் ஆகலேனாலும். சரி நாம இதை விவேகாநந்தா ஸ்போகன் கோர்ஸ்னு ஒரு த்ரெட் தொறந்து பேசுவோம்.. நீங்க உங்க இங்கிலிபிஸ் புலமையை காமிக்கும் முன் நான் ஓடிர்றேன்.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

நமக்கும் இந்த இங்கிலீபீஸ்க்கும் ரொம்ப தூரங்க. என்னமோ எல்லாரும் சொல்றாங்களேன்னு நானும் சொன்னேன். ஆனா நீங்க இப்படியெல்லாம் மாத்தியிருப்பீங்கன்னு யாருக்கு தெரியும்.

இந்த ரெண்டு லிங்க்கும் படிக்க கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்கா இருக்கு

http://en.wikipedia.org/wiki/Mrs.

http://www.englishforums.com/English/MsMissOrMrs/zwvb/post.htm

இந்த இரண்டு லிங்க் பார்வையிட்டதில் பல விஷயம் தெரிந்தது.அட்மின் மக்கு இல்லீங்கோ.
முக்கியமாக foreign equalents.
ms = when you're not sure if the person is married.
mrs = when you 're certain the person is married.
நன்றி அட்மின்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆட்மிட் அண்ணா IP adress நம்பலோடத அவங்க யூஸ்பன்ராங்கன்னு நாம எப்படி தொரிஞ்க்க முடியும். அடுத்தவங்களொட திறமைய அவங்கலுக்கு தெரியாம எடுக்குரது தப்புதான. அதனால் அதிகமானவங்க பாதிக்கப் படுவங்கதான.

இப்ப எங்களேடது தடை பட்டு இருக்குன்னு எப்படி தெரியும்.

அதை எப்படி சரி செய்வது அதையும் செல்லுங்கள்.

இந்த தளம் அனைவருக்கும் உபயோகமனது. என்னை மாதிரி அறை வேகாடுக்கும் இது மிகவும் உதவியாக இருகிறது.

இந்த தளத்தால் அதிகமான தோழிகளும், உக்கலை பேல் அண்ணனும் கிடைததார்கள்.

இந்த தவறான செயலால் ஒரு சிலருக்கு பாதிப்பது மண வருத்தும் அதிகமாக உள்ளது.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஆஸியா, மாமா மக்கு இல்லே.. ஆனா நீங்க என்ன அந்த டிஸ்கஷன் ஃபோரமிலே சொன்ன ஒரு கருத்தை மட்டும் எடுத்துக்கிட்டீங்க? வீக்கிபிடியா லிங்கிலே இதுவும் இல்லே சொல்லிருக்கு?

//Since the term ‘Mr’ does not indicate whether a man is married or not, many people believe that the way a woman is addressed should not indicate marital status either. For this reason, ‘Ms.’ is advocated as an equivalent to ‘Mr.’, particularly in professional situations. Few married women choose to use “Mrs” in professional life, even those who take their husband's name. Instead, these women use ‘Ms.’. However, “Mrs” had remained in popular use for social situations until the end of the 20th century.//

இவ்ளோ கரடியா கத்தறேனே.. மாத்தறாரா இந்த மாமா.. என்ன ஒரு அழுத்தம்..

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

என்ன இன்னுமா ஸ்னோ வரலை அங்க??? இப்ப தான் வந்தேன் 51 டிகிரி என்று இன் -பிளைட் ரேடியோ சொன்னது :-)

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

என்ன இலா நடு ராத்திரில எழுந்து உட்கார்ந்து பதிவு போடுகிறீர்கள்

ஜலீலா

Jaleelakamal

ஹேமா... இப்பவும் தனியார் நிருவனங்கள் தான் மிஸ் போட்டு அழைக்கிறாங்க.... அரசாங்க உத்தியோகம்'னு போய்ட்டா, மிஸஸ் தான். அதுவும் உங்க பேர் போட்டு கூப்பிட மாட்டாங்க... மிஸஸ்.உங்க கணவர் பெயர். கொஞ்ச நள்ள நமக்கே நம்ம பேரு மரந்து போகும். :( இதுக்கே இவ்ளோ டென்ஷன் ஆனா, அதுக்குலாம் நீங்க என்ன பண்ணுவீங்க!!! (நானும் வேலை பார்க்கும் போது மிஸஸ்'ன்னு தப்பா சொல்லிட்டா கூட என்ன பாத்தா எப்படி இருக்கு?! மிஸ்'னு கூபிடுங்க'ன்னு சொன்னேன்.. இப்போ... என்ன செய்ய.... கா.செ.கோ. தான்)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்