தேதி: December 17, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
இந்த எளிமையான, சுவையான குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.
இட்லி – 6
வெங்காயம் – ஒன்று
தக்காளி சாஸ் – அரை கப்
கடுகு - தாளிக்க
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மாசாலா தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி – அரை கப்
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அவனை 400Fல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும்.

இட்லிகள் ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி எல்லா துண்டுகளிலும் படும்படி நன்கு பிரட்டி விடவும்.

பின்னர் இட்லி துண்டுகளை அவன் ட்ரெயில் வைத்து அடுக்கி முற்சூடு செய்த அவனில் 18 - 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி சாஸை ஊற்றி கிளறி விடவும்.

அதன் பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மாசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும். அதனை 10 நிமிடம் வேக விடவும்.

அவனில் வைத்துள்ள இட்லி துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். எண்ணெயில் போட்டு பொரித்தது போலவே உள்பகுதியில் மென்மையாகவும், வெளிபகுதியில் மொறுமொறுவென்றும் இருக்கும்.

அவனிலிருந்து எடுத்த இட்லி துண்டுகளை மசாலா கலவையுடன் சேர்த்து 3 நிமிடம் கிளறி விடவும்.

இறுதியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.

எண்ணெய் அதிகம் பயன்படுத்தாத கிட்ஸ் இட்லி ப்ரை தயார். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அவன் இல்லாதவர்கள் இட்லி துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்தும் சேர்க்கலாம்.
Comments
கிட்ஸ் இட்லி ஃப்ரை.
ஒவென் ட்ரேயில் வைத்து செய்வது வித்தியாசமாக இருக்கு.செய்து பார்க்கிறேன்.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
கீதாச்சல்
ஹாய் கீதாச்சல் எப்படி இருக்கீங்க பாப்பா எபப்டி இருக்கு?அருமையா கலர் புல்லா இருக்கு வாழ்த்துகள்.. முடியுறப்ப செய்கிரேன்..
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
ஆசியா அவர்களுக்கு
ஆசியா ,
ஆமாம் அவன் ட்ரெயில் செய்வதால் மிகவும் நன்றாக இருக்கும். குறைந்த அளவில் எண்ணெய் உபயோகம் செய்தால் போதும்.
மர்ழியா
மர்ழியா,
மிகவும் நன்றி. எப்படி இருக்கிங்க?? உங்க பொண்ணு எப்படி இருக்காங்க? உங்களால் முடியற பொழுது செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்.
கீதா ஆச்சல்
ஹாய் கீதா ஆச்சல் ரொம்ப சூப்பரா இருக்கு
ஜலீலா
Jaleelakamal
ஜலீலா
நன்றி ஜலீலா அக்கா.