மழலை வரம் வேண்டிய பாடல்

மழலை வரம் வேண்டிய பாடல்:

பேயடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ள நினை
வாயினவே வரம் பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோள் உமை பங்கன் வெண்காட்டு முக்களநீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாந் தீவினையே.

இதை தினமும் நம்பிக்கையோடு பாட குழந்தை பாக்யம் விரைவில் கிடைக்கும்.

ராதா.. மழலை வரம் வேண்டி பாடல் தந்ததர்க்கு நன்றி.
இப்பாடல் எந்த தெய்வத்திர்க்கான பாடல் என்று செல்ல முடியுமா....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வேயனதோள் உமை பங்கன் = shivan
i think??!!
"If you want things to be different, perhaps the answer is to become different yourself." - Not mine someone else's

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

hello madam,
வணக்கம்.
தேவாரம் பாடல்களில் இந்தப் பாடல் ஒன்று. திருஞானசம்பந்தர் பாடிய பாடல். எனக்கு ஒரு முறை அபார்ஷன் ஆகி விட்டது.
என் அத்தை எனக்கு தந்த பாடல். நான் இந்த பாடலை பாடி எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். இந்த பாடலை பற்றி முழு விபரம் தெரியாது. ஆனால் மழலை செல்வத்தை எதிர்பார்ப்பவர்களும், கர்ப்பணி பெண்களும் படிப்பது ந்ல்லது
thanks
Radha

hello madam,
வணக்கம்.
தேவாரம் பாடல் என்ற புத்தகத்தில் உள்ளது. சிவனை நோக்கி திருஞானசம்பந்தர் பாடிய பாடல் என்று நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் இந்த பாடலை பாடி எல்லோரும் நன்மை அடைந்தால் போதும்.
நன்றி
ராதா

தேவாரம்

இந்தப்பாடலின் பொருள்

மூங்கில் போன்ற திரண்ட தோளினை உடைய உமையம்மை பங்கன் எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள முக்குளநீரில் மூழ்கி எழுந்து வழிபடுவாரைப் பேய்கள் சாரமாட்டா. பேய் பிடித்திருந்தாலும் விலகும். மகப்பேறு வாய்க்கும். மனவிருப்பங்கள் ஈடேறுவதை இறைவர்பால் அவர் பெறுவர். சிறிதும் சந்தேகம் வேண்டா.

அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜெயந்தி மாமி உங்களை தான் நினச்சேன்.என்ன ரொம்ப நாள் உங்களை காணல.. உடல் நலமெல்லாம் எப்ப்டி இருக்கு.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஜெயந்தி மாமி தேவாரம் பாடலுக்கு விளக்கம் தந்ததர்க்கு மிக்க நன்றி மாமி.............

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இலா நல்லா இருக்கேன். ஆனா ரொம்ப பிசி. அறுசுவைக்கு வர நேரம் இல்லை.

குழந்தை வேண்டும் அனைவருக்கும் மழலைச் செல்வத்தை அளிக்க எல்லாம் வல்ல இறைவனை தினமும் வேண்டுகிறேன். குழந்தைக்கு ஏங்கும் தோழிகளை நினைக்க மனம் பாரமாகிறது.

இந்தப்பாடலை தினமும் பாடி மழலைச் செல்வத்தைப்பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

வணக்கம் .ஜெயந்தி மாமி. நன்றி பாடலின் அர்த்தம் தந்தர்க்கு. நம்பிக்கையோடு இந்த பாடலை பாடினால் கண்டிப்பாக மழலை செல்வம் கிடைக்கும். நானும்,என் கணவரும் நம்பிக்கையோடு இரண்டு மாதம் படித்து மழலை செல்வத்தை பெற்று விட்டோம். நேற்று தான் வீட்டிலே டெஸ்ட் எடுத்து தெரிந்து கொண்டோம். இந்த பாடலை பாடி எல்லோரும் இன்பம் அடையட்டும். மேலும் இனி மேல் எதையெல்லாம் சாப்பிட வேண்டும், எதையெல்லாம் சாப்பிட கூடாது. என்று சொல்லுங்க. tied இருக்கு. சில நேரங்களில் முதுகு வலிக்குது என்ன பண்ண வேண்டும். நான் சிங்கப்பூரில் இருக்கேன். எனக்கு ஒரு முறை அபார்ஷன் ஏற்பட்டது. அதனால் டாக்டர் வீட்டில் டெஸ்ட் எடுத்திட்டு இந்த(போலிக் மாத்திரை, அபார்ஷன் ஆகாமல் இருக்க மாத்திரையும் )மாத்திரை சாப்பிட சொன்னாங்க. டாக்டர் கிட்ட 2வது அல்லது 3வது மாதம் இதுல எப்ப போகனும்.

நன்றி
ராதா

மேலும் சில பதிவுகள்