சந்தேகம் to Mrs.கவி சிவா

கவிதா சிவா, வறுத்து அரைத்த மீன் கறியில் கடுகு, மஞ்சள் சேர்க்க வேண்டாமா?

ஹாய் மதி இந்த குழம்பிற்கு கடுகு,மஞ்சள் தேவையில்லை. மீன் சுத்தம் செய்யும் போதே மஞ்சள் சேர்த்து கழுவுவதால் மஞ்சள் இந்த குழம்பிற்கு மட்டும் நான் பயன் படுத்துவது இல்லை.குழம்பின் நிறம் சிறிது மாறி விடும் அதனால்தான்.நீங்கள் விரும்பினால் பயன்படுத்தலாம்.

ஒரு சிறிய வேண்டுகோள்.சந்தேகங்களை அந்தந்த குறிப்புகளின் கீழேயே கேட்டால் எல்லாருக்கும் பயன்படும்.குறிப்புகளின் கீழே உள்ள கருத்து தெரிவிக்க அல்லது பதிலள் ஆப்ஷனை க்ளிக் செய்து கேட்கலாம் :-))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி. என் அம்மா சேர்ப்பார்கள்.உங்கள் ஊர் எது?
முந்திரி கொத்து செய்வது எப்படி?
save energy for future

save energy for future

ஹாய் மதி எனக்கு நாகர்கோவில்.உங்களுக்கு எந்த ஊர்? அநேகமாக கன்யாகுமரி மாவட்டமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். முந்திரி கொத்து நான் செய்ததில்லை. அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன். அருசுவையில் கூட ஒரு குறிப்பு இருக்கிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவி,எனக்கு ஊர் கடுக்கரை(இப்பொழுது அம்மா இருப்பது).நான் வளர்ந்தது வடசேரி.தற்போது துபாய்.அம்மாவிடம் நானும் கேட்கலாம். நான் செய்வேன் என்று நம்ப மாட்டார்கள்.என் சமையலில் அவ்வளவு நம்பிக்கை.கவி,நான் உங்கள் சமையல் குறிப்புகள் பார்த்தேன்.எப்படி தமிழில் இவ்வளவும் அச்சிட முடிந்தது? நான் மிகவும் சிரம படுகிறேன்.
save energy for future

save energy for future

ஹாய் மதி ரொம்ப நெருங்கிட்டீங்க.நானும் வளர்ந்தது வடசேரியில் தான்.வடசேரியில் எங்கே? சொந்த ஊர் கூட கடுக்கரையின் பக்கம்தான். கடுக்கரையில் எங்கே?ரைஸ்மில் பக்கமா? நான் இந்தியா வரும்போதெல்லாம் கடுக்கரைக்கும் வருவேன். அங்கே நிறைய சொந்தக்காரர்கள் இருக்காங்க.
எகலப்பை டவுன்லோட் செய்துக்கோங்க.தமிழில் டைப் செய்ய ஈசியா இருக்கும்.alt+1,alt+2 செய்து ஈசியா ஆங்கிலம் தமிழ் ஃபாண்டுக்கும் மாத்திக்கலாம்.
விரும்பினால் என் மெயில் ஐடி எனது குறிப்பில் அம்பலபுழா பால்பாயாசத்தின் கீழ் உள்ளது.
http://www.arusuvai.com/tamil/node/5185 இந்த லின்கில் பாருங்கள்.மெயில் பண்ணுங்க.பேசலாம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரெண்டு வாட்டி வந்துடுச்சு :-))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி,நாங்கள் இருந்தது வணிகர் தெரு. அம்மா இருப்பது தம்புரான் கோவில் அருகில்.படித்தது அரசு மற்றும் எஸ்.எம்.ஆர்.வி.மெயில் கிடைத்ததா?
save energy for future

save energy for future

ஹாய் மதி பதில் அனுப்பிட்டேன் பாருங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

முந்திரிகொத்து செய்வது ரொம்ப ஈஸி. பாசிபருப்பு,- 1 கப், அரிசி 1/2கப் எள் 2 டேபிள் ஸ்பூன் சீனி - 1 கப் ஏலக்காய் - 4 பருப்பு, அரிசி, எள் மூன்றையும் சிவக்க வறுத்து மிக்ஸ்யில் கொர கொரப்பாக பொடித்து கொள்ளவும். சீனியில் அரை கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி பருப்பு கலவையில் ஊற்றி ஏலக்காயும் சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். உருண்டைகளை இறுக்கி பிடிக்க வேண்டும். இல்லவிட்டால் உதிர்ந்து விடும். ஆறியதும் உருண்டைகள் இறுகி விடும்.
அரிசி மாவில் சிட்டிகை உப்பும் மஞ்சள் தூளும் கலந்து தோசை மாவும் பதத்திற்க்கு கரைத்து, பிடித்து வைத்துள்ள உருண்டைகளை மாவில் முக்கி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பொரிக்கும் போது உருண்டைகள் மூன்று, நான்காக சேர்ந்து கொண்டு பார்பதற்க்கு முந்திரி கொத்து போன்று இருக்கும். சாபிட சுவையாக இருக்கும். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

அஸ்ஸலாமு அலைக்கும் ஜரீனா. எனக்கு முந்திரி கொத்து மிகவும் பிடிக்கும். குறிப்பு தந்ததற்கு நன்றி. இன்ஷா அல்லாஹ் செய்து பார்த்து பின்னூட்டம் அளிக்கிறேன்.

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

மேலும் சில பதிவுகள்