சமைத்து அசத்தலாம் - 4, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 3, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல் இது பகுதி - 4 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை மனோகரி அக்காவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) முடிவடையும். புதன்கிழமை(31/12), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

அதிரா,ரேணு நான் பட்டர் சிக்கன் மற்றும் பூண்டு ஊறுகாய் செய்தேன்.

வத்சலா... வத்சலா... வத்சலா...
மிக்க நன்றி, கலந்துகொண்டமைக்கு. நீங்கள் எதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் எவ்வளவு தூரம் கவலைப்பட்டீங்களோ தெரியவில்லை, நாங்கள் நிறையப் பேர் மனம் வருந்தினோம். உங்கள் ஐடி கூட இருக்கவில்லை, ஆறுதல் சொல்ல. ஆனால் உங்களைப் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி. முடியுமானபோது வந்து பங்குபற்றுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு வத்சலா,
நலமா? எனக்குமே நீங்க எவ்வளவு வருத்தப்படுவீங்கன்னு கவலையா இருந்துச்சு. மெயில் ஐடி கூட இல்லியே ஆறுதல் சொல்லன்னு நினைச்சேன். பரவாயில்லை. நீங்க ஈசியா எடுத்துகிட்டது உங்க பெருந்தன்மையைக் காட்டுகிறது. இது தொடரட்டும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இந்திரா: மிக்க நன்றி. நான் இப்போதான் ஓன்லைனில், நீங்கள் ஓன்லைன் என்றதும் நான் ஒருகணம் நினைத்தேன் நீங்களும் இலங்கையோ என்று.
கவிசிவா: தோசை செய்தீங்களா? ஆ,,,, போனமுறை மீன் வாசம் இப்போ தோசை வாசனை வருகிறதே... மிக்க நன்றி.
மேனகா: பூண்டு ஊறுகாயோ, எனக்கும் கொஞ்சம் அனுப்ப முடியுமோ எனக்குச் சரியான விருப்பம். மிக்க நன்றி.

எல்லோரும் முடியுமானவரை செய்யுங்கோ... முடிந்தால் படமெடுத்து அனுப்புங்கோஓஓஒ......

செல்வியக்கா நீங்களுமா.... உண்மைதான் எவ்வளவு கஸ்டப்பட்டுத்தானே ஒவ்வொருவரும் குறிப்புக்கள் செய்கிறார்கள், அதிலும் படமெடுத்து அனுப்புவது என்பது சிரமமான ஒன்றே...

எல்லோரும் எங்கே போயிட்டீங்கள்.... இந்த விடுமுறையைப் பயன்படுத்தி வித்தியாசமாகச் செய்து அசத்துங்கள்... எங்களையும் வீட்டிலுள்ளவர்களையும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு சகோதரி வத்சலா நீங்க எப்படி இருக்கீங்க? உங்க நேர நெருக்கடியிலும் சிக்கன் பிரைட் ரைஸ் செய்து பின்னூட்டமும் அனுப்பியிருந்திர்கள் அதுவே நூறு பின்னூட்டத்திற்கு சமமான மகிழ்ச்சியைத் தந்தது, மிக்க நன்றி.

வணக்கம்.முதல் முறையாக இதில் க ந்து கொள்கின்றேன்.நான் பிரெட்க்ரம்ஸ் புரோக்கலி இன்று செய்தேன். அதிரா நீங்கள் கூறியது போல் photo எடுத்தேன்.அட்மினுக்கு அனுப்புறேன்.

கீதா ஆச்சல்

அதிரா போன முறை என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை அதனால் இந்த முறை எப்படியும் வந்துடனனும்னு ஓடிவந்துட்டேன்

இன்னைக்கு வேர்கடலை சட்னி ,கேழ்வரகு களியும் செய்தேன்

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

அக்கா நான் நேற்று காலையில் கேரட் ரசம், மாலை மெரினா பீச் சுண்டல், இரவு HUMMUS( CHICK PEAS SPREAD)செய்தேன். எல்லாமே ரொம்ப டேஸ்ட் ஆக இருந்தது. நன்றி அக்காஸ்

நேற்று இரவு செய்தாச்சு,குளிருக்கு இதமாக இருந்தது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இனிப்பு போளி,முட்டை வறுவல்
மெட்ராஸ் சாம்பார் இவைகள்தா நான் மனோகரி மேடம் குறிப்பிலிருந்து செய்தேன்.

மேலும் சில பதிவுகள்