சமைத்து அசத்தலாம் - 4, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 3, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல் இது பகுதி - 4 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை மனோகரி அக்காவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) முடிவடையும். புதன்கிழமை(31/12), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

அன்பின் அதிரா, ரேணு & மனோகரி மேம்,
இதுவரை நான் செய்தவை:-
அதிரசம்,
கேழ்வரகு இனிப்பு அடை
ரவை கிச்சடி
மில்க் பேடா,
சர்க்கரைவள்ளி பொரியல்
மலேசியன் கோகனட் பன்,
டோர்டியா ரோல்
அமெரிக்கன் மக்ரோனி & சீஸ்
கோதுமை புட்டு
ரோஸ் மில்க்
ரோஸ்டர்ட் பிரஸில்ஸ் ஸ்பிரவுட்ஸ் (my favourite:)
கேழ்வரகு புட்டு
பட்டர்மில்க் பான் கேக்ஸ்
இன்னும் பின்னூட்டம் கொடுக்கவில்லை. நேரம் கொஞ்சம் மட்டு மட்டாக இருக்கு. ஒரு வரியில் பின்னூட்டம் கொடுக்க முடியாது. ஏனெனில் சில சந்தேகங்களும் இருக்கு. :) அதனால பிறாகு பின்னூட்டம் கொடுக்கிறேன். படங்கள் எடுத்து வைத்துள்ளேன். பின்னர் அட்மினுக்கு அனுப்புகிறேன். இன்றைக்கு விருந்தினர்கள் வர்றாங்க. ஒரு பத்து நாளைக்கு இதில் கலந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம். முடிந்தால் வேறு சிலதும் செய்து பார்க்கிறேன்.
-நர்மதா :)

வத்சலா, வாங்கோ. வெளியே போய் வந்தாச்சோ? மிக்க நன்றி. ஸ்டெப் பை ஸ்டெப்பாக எடுத்தீங்களோ... மிகவும் சந்தோஷம்.
உண்மைதான் வத்சலா.... எனக்கும் தெரியாது... ஆனால் வந்த மெயில்களைப் பார்த்துத்தான் அறிந்துகொண்டேன், இல்லையெனில் தெரியாமலே போயிருக்கும். தொடர்ந்து பங்குபற்றுங்கோ மிக்க நன்றி.

இலா மிக்க நன்றி, சொன்னமாதிரியே இம்முறை நிறைய செய்கிறீங்கள். உங்கள் பதிவைப் பார்த்ததும் நான் என்னை மறந்து பெரிதாகச் சிரித்துவிட்டேன், ஏன் தெரியுமா? சேபிறைஸ் பேபி சவர் என்றாலும், அவவுக்கு ஏதோ மெசேஜ் போயிருக்கிறது.... இலா கத்தரிக்காய் குழம்பு செய்துகொண்டு வாறாவாம் என்று, அதனால்தான் பெயின் வந்ததோ என நினைத்தேன்:)
இன்னும் முடிந்தால் செய்யுங்கோ இலா... கோபித்திட வேண்டாம்.

ஐயையோ ரேணுகா.... நான் வைத்த ஐசால் யூரம் வந்துவிட்டதோ? பிறகு என் கதி அதோ கதி தான், இருந்தாலும் உங்களவருக்குச் சொல்லுங்கள்... அசத்தல் பகுதி முடியும்வரை ஐஸ்கிறீம் தரவேண்டாம் என்று:)

மனோ அக்கா: மிக்க நன்றி, செய்து எம்மோடு கலந்து கொண்டமைக்கு.

ஆசியா மிக்க நன்றி.

அரசி நீங்க அக்காஸ் என்று சொல்ல சொல்ல எனக்கு உங்களில் ஒரு "இதே" வந்துவிட்டது. மிக்க நன்றி அரசி. தொடர்ந்தும் இப்படியே பங்குபற்ற வேண்டும்.

ரேணுகா.... சமையலெல்லாம் அபாரமாக நடக்கிறது போலும் செய்யுங்கோ... செய்யுங்கோ... நாளைக்கு செவ்வாய்க்கிழமை நான் எப்படியும் எழும்பியதும் கத்தரிக்காய் பிறியாணி செய்துவிடுவேன்...

சீதாக்கா வாங்கோ... முதலாவதாக வந்திடுவீங்கள் இம்முறை விடுமுறைகள் வந்ததால் காணவில்லையோ என நினைத்தேன். மிக்க நன்றி.

சுரேஜினி, மிக்க நன்றி... செய்தவற்றைச் சொல்லிப்போடுங்கோ.. பின்னூட்டம் சற்று தாமதமாகக் கொடுத்தாலும், சொல்லிப்போட்டால் கணக்கில் சேர்த்துக் கொள்வோமெல்லோ.

துஷியந்தி வாங்கோ.... இம்முறை கவனமாக நம்பர் பண்ணி எழுதியிருக்கிறீங்கள், மிக்க நன்றி, சந்தோஷமாகவும் இருக்கு. ஆனால் துஷியந்தி பயப்பட வேண்டாம் இனிமேல் செய்ததும் வந்து சொல்லுங்கோ... எங்கள் எக்கவுண்டன் கவனமா கணக்கெடுப்பா.... பயப்படவேண்டாம் சரியோ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இன்று கட்டாயம் பதில் போடவேண்டி இருந்ததினாலும் எனக்கு நேரம் கிடைக்காததினாலும் எனது பதிவுகளை எனது நண்பியே எழுதியிருந்தா(எனது கணணியில்) அவவிற்கு அருகிலிருந்து இரவு சாப்பாடு செய்து கொண்டிருந்தேன் அவ பதிவுகள் சரியாக எழுதியிருப்பா என நினைத்து அவ எழுதிய முறையை நான் கவனிக்கவில்லை அவ எழுதி முடித்ததும் பதிவு செய்து விட்டேன் இப்பதான் பார்த்தேன் எனது நண்பி பதிவுகளின் தொகை தெரியவேண்டும் என நினைத்து நம்பர் இட்டிருகிறா
அத்துடன் மேலிருந்து கீழாக எழுதியிருக்கிறா இதையிட்டு என்னை மன்னிக்கவும் பழையதை எப்போதோ மறந்துவிட்டேன் அதற்கு நான் அதில் பதில் எழுதிவிட்டேன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ரேணுகா இன்று செய்தது மிளகு வெங்காய குழம்பு. சுவை அபாரம். நான் இன்னும் நிறைய செய்யலாமென்று நினைத்திருந்தேன் ஆனால் குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் செய்யமுடியவில்லை. ஆனால் என்ன,பிறகு நேரம் கிடைக்கும் போது செய்வேன். அதிரா உங்களுக்கு என் நன்றிகல். உங்களால் தான் நல்ல நல்ல குறிப்புகள் செய்கிறேன். அக்கௌண்டன்ட் ரேணு உங்களுக்கும் என் நன்றி!

நேற்று செய்தது மீன் குழம்பு. ரேணு முதலில் உடம்பை கவனித்துக்கோங்க. கணக்கெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

காளான் பொரியல், கோழி முட்டை குழம்பு

இப்படிக்கு
இந்திரா

indira

ஹாய் ரேணுகா, அதிரா நான் மனோஹரி மேடம் குறிப்புகளில் இதுவரை செய்தவை மிளகு வெங்காய குழம்பு,பேச்சுலர்ஸ் பருப்பு கீரை,குழி பணியாரம்/கார வகை,வேர்கடலை சட்னி...எல்லாம் நல்ல சுவையாக இருந்தது..நன்றி..மனோஹரி மேடம்

அன்புடன்
ஷராபுபதி

எப்படி இருக்கிங்க? ஹாலேடேஸ் ஆனதினால் கலந்துக்க முடியல்ல.
இப்ப செய்தது பாகற்க்காய் கூட்டு, காலிப்ளவர் வறுவல், பச்சை பட்டாணிகூட்டு சேய்தேன்.காலிப்ளவர் வறுவல் படம் எடுத்துள்ளேன். அனுப்புகிறேன். நன்றி அதிரா/கணக்கு பிள்ளை ரேணுகா நன்றிப்பா.

அக்காஸ். நான் நேற்று உருளைகிழங்கு சிப்ஸ் (FRENCH FRIES) செய்தேன். என் கணக்கில் சேர்த்துக்கோங்க. அக்கா, இன்று இரவு வரைக்கும் செய்து பார்த்து பின்னோட்டம் அனுப்பலாம்தானே. நன்றி அக்காஸ்.

அக்காஸ் இன்றைய சமையல் பாதம் மில்க் ஷேக், கீரை பொரியல். இரண்டுமே சூப்பர். நன்றி அக்காஸ்.

மேலும் சில பதிவுகள்