சமைத்து அசத்தலாம் - 4, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 3, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல் இது பகுதி - 4 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை மனோகரி அக்காவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) முடிவடையும். புதன்கிழமை(31/12), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

முட்டை கிரேவி, பாதாம் மில்க் ஷேக், கீரைப் பொரியல்(ச்பினச்), பருப்பு வடை, காய்கறி ஸ்டிர் ஃரை - இதையும் நம்ம கணக்குல சேர்த்துக்கங்க ரேணு.

சந்தோஷமா அதிரா, ரேணு?!! நீங்க சொன்னீங்கன்னு வனி சமைசுட்டா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்காஸ் இன்றைய சமையல் முட்டை மசாலா நன்றாக இருந்தது. நன்றி அக்காஸ்.

நான் நேற்று பழம்பூரி மற்றும் பட்டர் சிக்கன் செய்தேன்.இரண்டுமே சூப்பர்,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நர்மதா.... அமைதியாக இருந்து நிறையக் குறிப்புக்கள் செய்துவிட்டீங்கள். மிக்க நன்றி.... இனிமேலும் முடிகிறபோது வந்து கை கொடுங்கோ...

துஷியந்தி... தப்பேதும் இல்லை... இவ்வளவு குறிப்புக்கள் செய்தமைக்கு உங்களுக்கு நன்றி. இனிமேலும் இதே உற்சாகத்தோடு பங்கு பற்றுங்கள்.

மாலி மிக்க நன்றி... செய்தமைக்கும் வாழ்த்துக்கும்.

வின்னி... மிக்க நன்றி. உங்கள் பதிவைப் பார்த்ததும் எனக்கும் சந்தேகமாக இருக்கு, நான் நினைத்தேன் ரேணுகா பகிடியாகத்தான் சொன்னார் என்று... ரேணுகா உடல் நலமில்லையா?

இந்திரா, ஷ்ராபுபதி, விஜி சத்தியா.... நன்றி நன்றி.

நாங்க சொல்லி நீங்க சமைத்ததிற்கு மிக்க நன்றி வனிதா....
மிக்க நன்றி அரசி ... இன்னும் செய்தால் இரவுக்குள் தெரியப்படுத்துங்கள்.

இன்றோடு கணக்கெடுப்பு முடியப்போகிறது. இரவைக்கு சரி பார்ப்பதற்காக போட்டுவிடுங்கள் ரேணுகா....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரேணுகா....
நலாமாக இருக்கிறீங்களா? இந்த வின்னி என்னைப் பயப்படுத்திவிட்டார்.

வனிதா நீங்க கேட்டீங்க நான் சொல்ல நினைத்து மறந்தே போனேன்... அடுத்து நாம் செய்யப் போவது கதீஜாவின் குறிப்புக்கள். கன நாட்களாகக் காணவில்லை, பிஸியாக இருக்கிறேன் வருவேன் என்று சொன்னார்... வருவார். ரேணுகா... கத்தரி பிறியாணி செய்து வெற்றியோடு வருகிறேன்... பின்னர்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்புள்ள மனோஹரி மேடம்
உங்கள் பதிவை பலமுறை படித்திட்டேன்.நீங்கள் என்னை கண்டுகொண்டதில் எனக்கு மிகுந்த சந்தோஷம்.அது என் நிஜப்பெயர் என்பதால் அதில் மனம்விட்டு எலுத முடியாது என்று அதை விட்டுவிட்டேன்.பழசை எப்படி மறக்க முடியும்.டல் அடித்த மன்றத்தில் சுறுசுறுப்பை கொண்டு வந்தது நீங்கள் தான்.என் தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.

அன்புடன் பர்வீன்.

என் அக்கவுண்ட்
இன்று முள்ளங்கி முருங்கை சாம்பார் செய்தேன் காலையில். இட்லியுடன் அருமையா இருந்தது

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அக்கா இன்றைய இரவு சமையல் படூரா, சென்னா மசாலா செய்தேன். என்னோட கணக்கில சேர்த்துக்கோங்க. நன்றி அக்காஸ்

இன்னும் நேரமிருக்கிறது செய்தவர்கள் சொல்லிப்போடுங்கோ. பர்வீன் இப்போ நலமா? முடிந்தால் அடுத்த தலைப்பில் வந்து கலந்துகொள்ளுங்கள்.

மிக்க நன்றி இலா..., அரசி.

ரேணுகா... நான் கத்தரிக்காய் பிறியாணி செய்து அசத்திவிட்டேன்.. என் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள். இன்று பட்டியலை வெளிவிடுங்கள்.

எல்லோரும் செய்தவற்றை இரவுக்குள் சொல்லிப்போடுங்கோ.

அனைவருக்கும் மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அப்பாடா ட்ரெயின் கிளம்ப முன்னாடி வந்திட்டேன்:-) இன்னிக்கு டின்னர்க்கு பட்டூராவும் சென்னாமசாலாவும்.இரண்டுமே சூப்பர்.கணக்கிலே சேர்த்துடுங்கோ

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்