சமைத்து அசத்தலாம் - 4, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 3, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல் இது பகுதி - 4 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை மனோகரி அக்காவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) முடிவடையும். புதன்கிழமை(31/12), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

கீதாச்சல் மிக்க நன்றி, படம் எடுத்தது சந்தோஷம்... இனித் தொடர்ந்து பங்குபறவேண்டும் என்பதே எங்கள் ஆசை.
காசினி, மிக்க நன்றி.... முடிகிறபோது வந்து முடிந்தவரை அதிகம் குறிப்புக்கள் செய்து அசத்துங்கோ..
அரசி வாங்கோ... மிக்க நன்றி தொடர்ந்து பங்குபற்றுங்கோ... உங்கள் கறிபவுடர் வினா பார்த்தேன் விடை அனுப்பும்வரை என்னை மன்னிக்கவும்.
ஆசியா மிக்க நன்றி.
தனு... ஊருக்குப் போகப் போவதாக அறிந்தேன் போகமுதல் அசத்துங்கோ நிறையச் செய்து... மிக்க நன்றி...
எல்லோரும் வாங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா... என்னால் நிறைய செய்ய முடியல... :( 10 நாள் துணி "நல்லா வித விதமா சமைச்சு கொட்டிகிறியே, என்னையும் கொஞ்சம் கண்டுக்கோயேன்"ன்னு நேத்துல இருந்து கூப்பிடுது. இன்னும் முடிச்சபாடில்ல.... முடிச்சதும் ஓடி வந்துடறேன். :) கொஞ்சம் பொருத்துக்கங்க.

இதுவரை செய்ய முடிந்தது கேழ்வரகு களி, இனிப்பு போளி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புள்ள அதிரா,ரேனுகா
மனோஹரி மேடம் குறிப்புகள் செய்ய மிகுந்த ஆவலாக இருந்தேன்.ஆர்வமாக எடுத்து செய்பவர்களுக்கும் அழகான பின்னூட்டம் கொடுப்பாங்க.ஆரம்ப காலத்தில் அவங்க மன்றத்திலும் சரி ,குறிப்பிலும் சரி ஓடி வந்து உடனுக்குடன் அனைவருக்கும் பதில் கொடுத்தவங்க.அவங்க குறிப்பில் சதம் அடிக்கும் சமையம் சமையல் அனுபவம்கூட நான் கேட்டு பதில் கொடுத்தாங்க.நான் ஒரு நான்கு நாளாக இரண்டு கடவாய் பற்களை பிடுங்கியதால் அதிகம் சாப்பிட முடியாமல் அவஸ்தையாக இருக்கிறேன்.இப்போ தான் நார்மல் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.இன்னும் அட்மினையும் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறேன்.ஒன்னு ,ரெண்டு குறிப்பாவது படத்துடன் தர முயற்ச்சிக்கிறேன்.

அன்புடன் பர்வீன்.

அதிரா நான் எவ்வளவு போட்டி போட்டாலும் நிச்சயம் அசத்தல் ராணி ஆக முடியாது,நான் சமைத்து அத சாப்பிடதான் ஆல் இல்லை,அதனால் செய்வதும் குறைவுதான்,,இருந்தாலும் நான் ஒரு வேலை சமைத்தாலும் யார் சமையலை செய்ய வேண்டுமோ அவர்களது சமையலை தான் செய்கிறேன்.இப்பொழுதுதான் கணக்கை ஆரம்பித்து உள்ளேன்,இதுவரை எடுத்தாயிற்று

இந்திரா நலமா?நான் ரிலாக்ஸ் ஆகிவிட்டேன்.செய்யுங்கள் முடிந்தவரை,உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்

வத்சலா நான் மிகவும் நலம்,உங்கள் நலம் அறிய ஆவல்,உங்களை இங்கே கண்டதில் மகிழ்ச்சி,நேற்று முழுவதும் உங்கள் நினைவு தான்,உங்களை பற்றி சொல்லுங்கள்,

கவிசிவா செட்தோசையா எனக்கும் கொஞ்சம் அனுப்புங்கள்,மாவு அரைத்தால் எனக்கு தீராது,அதனால் தான் நான் செய்ய யோசிக்கிறேன்,இந்த தோசை செய்ய ஆவல்,ஒரு நாள் எப்படியும் செய்துவிடுவேன்

மேனகா பட்டர் சிக்கன்,பூண்டு ஊறுகாய் இரண்டும் எனக்கு பிடிக்கும்,சிக்கன் இல்லை பட்டர் தான் உள்ளது,ஊறுகாய் நான் மட்டும் தான் சாப்பிடனும்,அதனால் ஊறுகாய் மட்டும் அனுப்புங்கள்

கீதா வாருங்கள் உங்களை வரவேற்க்கிறோம்,உங்களால் முடிந்தவரை பங்கு கொள்ளுங்கள்,

ஹா ஹா ஹாசினி ரெண்டுமே எனக்கு பிடித்த அயிட்டம்,இந்த கேழ்வரகு மாவை நானும் ஒரு மாசமா தேடறேன் கிடைக்க மாட்டிங்குது,
அபுதாபியில் இருப்பவர்கள் யாராச்சும் எங்க கிடைக்குதுன்னு சொல்லுங்க..

அரசி இந்த சுண்டல் செய்ய பட்டாணி தேடினேன் கிடைக்கவே இல்லை,மாங்காய் கூட வாங்கி வைத்திருக்கேன்,ஆன பட்டாணி இல்லாமல் என்ன செய்ய,

ஆசியா குளிருக்கு இதமா சூப்பா?எதாவது காரமா செய்தால் வீட்டுக்கு அனுப்பூங்க,வாசல் கதவை பூட்டாம வைச்சிருக்கேன்

தனு வந்தாச்சா?நானும் இனிப்பு போளி செய்யலாம் என்று இருக்கிறேன்,நல்ல நேரம் வரட்டும்

வனிதா துணி கூப்பிட்டா உடனே போயிடனும்,இந்த குளிர்ல அது காய்ந்து எடுத்து வைப்பதற்க்குள் மிக பெரிய தொல்லை,துணியை காய வச்சிட்டு அது காயர வரைக்கும் நீங்க என்ன பண்ண போறீங்க?அப்ப வந்து சமைத்து அசத்துங்க,,,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நான் நேற்று கீரை பிரைட் ரைஸ்,செய்தேன்,நன்றாக வந்தது,என் பையன் கூட சாப்பிட்டான்,கீரை இப்படி உள்ளே போனதில் மகிழ்ச்சி,இனி இது என் வீட்டில் அடிக்கடி செய்வேன்

பர்வீன் பல்லுக்கு என்னாச்சு?இப்ப வலி பரவாலையா
?ரெம்ப கஷ்டம் தான்.முடிந்தவரை நீங்கள் பங்கு கொண்டாலே போதும்,
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா... உண்மை... இந்த குளிருல அது காயவே 3 நாள் ஆகுது, அதுகுள்ள மறுபடியும் துணி சேர்ந்து போகும். :( வர வர லைஃப் வாஷிங் மிஷின் மாதிரி ஆயிடுச்சு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதிரா, ரேணுகா போன முறை என்னால் கலந்துக்க முடியவில்லை.மன்னிக்கவும். இந்த முறை எப்படியும் கலந்துக்கவெண்டும் என்று வந்து விட்டென். நேற்று மனோகரிஅக்கா குறிப்புகளில் நான் செய்தவை தம் ஆலு, பைன் ஆப்ப்ள் ஃப்ரைட் ரைஸ். இரண்டுமே மிக்க டேஸ்டியாக இருந்தது. நன்றி, நாளை திரும்ப வருகிறேன், பை பை!

ஹாய் அதிரா&ரேணுகா,
நான் வந்துடேன் நேற்று நான் செய்தவை முட்டை பிரட் டோஸ்ட், சக்கரைவள்ளிக்கிழங்கு பொரியல், பேச்சுரல்ஸ் கத்திரிக்காய் குழம்பு,
போனதடவை வென்ற அசத்தல் ராணிகளுக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
சுதா

அரபு நாடுகளில்
அரபு நாடுகளில் இருப்பவர்கள் எவருக்கும் அறுசுவை பார்க்க முடியாத பிரச்சனை உள்ளதா? ரேணுகா, தளிகா, வனிதா(அங்குதான் இருக்கிறீங்கள் என நினைக்கிறேன்) எல்லோரும் அறுசுவையில் கதைப்பதைப் பார்க்க, பிரச்சனை இல்லைப்போல் தெரிகிறது, ஆனால் ஜலீலாக்கா மூக்கால் அழுதுகொண்டிருக்கிறா.. தனக்கு சில நாளாக அறுசுவை மட்டும் வரவில்லையாம், ஏனைய தமிழ் பகுதிகள் வருகின்றனவாம். யாருக்காவது பிரச்சனை என்றால் தெரியப்படுத்தினால் ஜலீலாக்காவோடு சோடி சேர்த்துவிடலாம் அதுக்குத்தான்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மிக்க நன்றி
வனிதா, கெதி கெதியா தோய்ச்சிட்டு கெதியா வாங்கோ....
பர்வீன்.... பல்லுப் பிடுங்கியாச்சோ... அப்படியென்றால் எதுவும் செய்ய முடியாதுதான்... இத் தலைப்பு முடிகிறபோது, உங்களால் முடிந்தால் செய்யுங்கோ... உங்கள் நிலைமையை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

மாலி, சுதா... வாங்கோ மிக்க நன்றி...
எங்கே பழைய அசத்தல் ராணிகளைக் காணவில்லையே எடுத்த பட்டங்கள் போதுமென்று நினைக்க வேண்டாம் வாங்கோ....

ரேணுகா, உங்கள் பதிலைப் பார்த்ததும் எனக்குப் பயமாய் இருக்கு.... ஒருவேளை இம்முறை நான் தான் அசத்தல் ராணியாகிவிடுவேனோ என்று:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்