சமைத்து அசத்தலாம் - 4, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 3, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல் இது பகுதி - 4 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை மனோகரி அக்காவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) முடிவடையும். புதன்கிழமை(31/12), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

கோவிக்காதீங்கோ .இண்டக்குத்தான் செய்ய தொடங்கினான்.
மெரீனா பீச் சுண்டல்,மஷ்ரூம்ரிஸோட்டோ,பூண்டு ஊறுகாய் இவளவும்தான் செய்தனான்.கிறிஸ்மஸ் க்கு பெரிய லிஸ்ட் எடுத்து வச்சிருக்கன்.செய்திட்டு சொல்றன்.

சுரேஜினி

அதுதானே பார்த்தேன்,
கனடாவில் ஸ்னோ அதிகமாம் அதுதான் சுரேஜினியைக் காணவில்லை என்று, வந்திட்டீங்கள்... மிக்க நன்றி.. சந்தோஷம்... முடிந்தவரை செய்யுங்கோ..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நிங்கள் சொல்வதில் ஏதும் தப்பில்லை, முடிந்தால் வசதியிருந்தால் அனுப்பலாம்.நம்ம அட்மினுக்கும் சந்தோஷ்மா இருக்கும்.

சரி நானும் மனோஹரி மேடமின் சமையலை செய்ய துடங்கியாச்சு.

நேற்று நான் வெஜிடெபிள்ஸ் ப்ரிஞ்ஜி செய்தேன். அங்கும் பின்னுட்டம் அனுப்பியாச்சு.

மேலும் செய்த பிறகு வருகிறேன்.கனக்குபிள்ளை ரேணுகாவுக்கும் நன்றி.

சகோதரி அதிரா நலமா ? சாரிமா பிள்ளைக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் பகுதி 3ல் கலந்துக்கொள்ள முடியவில்லை அதற்கு பதில் இப்பொழுது அவங்க சமையலை செய்து பார்த்து பின்னூட்டல் அனுப்பிவிடுகிறேன் சரியா ...இப்போ நான் மனோகரி அக்கா குறிப்பில் இருந்து பருப்பு பொங்கலும் கீரை பொரியலும் செய்தேன் நாளைக்கு புளியோதரை செய்ய போகிறேன்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

அதிரா, ரேணு எப்படி இருக்கீங்க?

கிரிஸ்துமஸ் விடுமுறையால் அறுசுவைக்கு வருவதே மிகவும் கஷ்டமாக உள்ளது. இந்த சமயம் பார்த்து மனோகரி அக்காவின் வாரம் வந்து விட்டாலும் என்னால் முடிந்தவரை அவரின் குறிப்புகளை செய்தே தீருவது என்று உள்ளேன்.

இதுவரை நான் செய்துள்ளது மெட்ராஸ் பெப்பர் சிக்கன், பீன்ஸ் பொரியல். மேலும் சில குறிப்புகளை செய்த பிறகு மீண்டும் வருகிறேன்.

ஆரம்பித்திட்டேன் . மனோகரி மேடத்தின் முட்டைகோஸ் பொரியல் இன்று செய்தேன். ரொம்ப நல்லா வந்தது.
"Every day I get up and look through the Forbes list of the richest people in America. If I'm not there, I go to work." -Robert Orben

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

டோஃபு பிரட்டல், சர்க்கரைவள்ளி கிழங்கு பொரியல்.

இப்படிக்கு
இந்திரா

indira

அதிரா,ரேணுகா,

இன்று அவல் உப்புமா செய்தேன். சுவை அருமை.

அறுசுவை முன்பை விட ஃபாஸ்டா இருக்கு.ஜலீலாக்கு என்னன்னு தெரியலை,அப்புறம் ரேணு அல் ஆதில் (எலெக்ட்ராவில் )ராகி மாவு கிடைக்கிறது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மக்ரோனி &பீஸ் செய்தேன்.சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்