சமைத்து அசத்தலாம் - 4, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 3, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல் இது பகுதி - 4 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை மனோகரி அக்காவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) முடிவடையும். புதன்கிழமை(31/12), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

விஜி சத்யா, வாங்கோ... விடுமுறை என்பதால் பிள்ளைகளும் நல்லா ஹெல்ப் பண்ணுவார்கள்:) சமைக்க, எங்கள் வீட்டிலும் அதுதான் நடக்கிறது.... முடியுமானவரை சமையுங்கோ..நன்றி.

ஜூலைகா, நீங்கள் வந்ததே சந்தோசம், முடிந்ததைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்.... எப்ப எப்ப முடிகிறதோ அப்போ வந்து கலந்துகொள்ளுங்கோ.. மிக்க நன்றி.

வின்னி வாங்கோ, உண்மைதான், நான் கூட நினைத்தேன், புதுவருடம்வரை விடுமுறையாக்கி பின்னர் இத் தலைப்பைப் போடுவோமோ என்று, ஆனால் சிலநேரம் ஏன் அப்படிச் செய்தீங்கள் என்றும் எதிர்ப்புக்கள் வரலாம் என்று பயந்து ஆரம்பித்துவிட்டேன், ஆனால் வேலைக்குப் போபவர்களுக்கு இப்போ விடுமுறைதானே... அதனால் யாரும் சாட்டுச் சொல்லாமல் சமைக்கலாமெல்லோ... உ+ம்: இலா....:)

இலா வாங்கோ: உங்களைப்பற்றிக் கதைக்க முதல் வந்திட்டீங்கள்... ஜிம்முக்குப் போகிறபடியால் பயப்படாமல் செய்து சாப்பிடுங்கோ... நானும் அப்படித்தான்... உடம்பில் தென்பிருந்தால்தானே ஜிம்முக்குப் போகலாம்:) அதற்காகவெண்டாலும் சாப்பிடவேணுமல்லோ:) மிக்க நன்றி... இன்னும் செய்யுங்கோ..

இந்திரா மிக்க நன்றி.

கவின் வாங்கோ முடிகிறபோது செய்யுங்கோ.

ஆஸியா, நான் உங்களை மறந்துவிட்டேன், நீங்களும் அங்குதானே இருக்கிறீங்கள். சொன்னதற்கு நன்றி.. ஜலீலாக்காவிற்கு என்ன நடந்ததோ தெரியவில்லை.
மிக்க நன்றி... முடியுமானவரை செய்யுங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

Today I did egg fried rice for lunch.The taste was different and good.
Thanks.

அக்கா நான் அதிரசம் செய்தேன். ஆனால் அது அதிசய ரசம் ஆக ஆகிவிட்டது. மேலும் இன்று பூண்டு ஊறுகாயிற்கு பூண்டை ஊற வைத்திருக்கிறேன் தாளித்து டேஸ்ட் பார்த்த பிறகு மனோகரி அக்காவிற்கு பின்னோட்டம் அனுப்புகிறேன். இந்த இரண்டையும் என் கணக்குல சேர்த்துக்கோங்க. அதிரா அக்கா, மஞ்சள் உருளை குழம்பு பற்றி கேட்டேன். அந்த ரெசிபி இருந்தால் எடுத்துக்கொடுங்க பிளீஸ்.

அன்புச் சகோதரிகளுக்கு எப்படி இருக்கீங்க? இந்த வாரம் எனது குறிப்புகளும் சிறப்பாக நமது நேயர்களால் செய்து பார்க்கப்பட்டு வருகின்றது என்பதைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் இருவரின் இந்த உன்னத பணியையும், பதிவுகளுக்கு பதிலளித்துவரும் உங்கள் அயராத உற்சாகத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை, உங்கள் மூலம் இந்த சேவை தொடர்ந்து நடைப் பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் இருவருக்கும் மற்றும் இந்த நிகழ்வில் பங்கு பெறும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது இனிய மெர்ரி கிறிஸ்மஸ் அன்ட் ஹாப்பி நியூ இயர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் நன்றி.

முள்ளங்கி புகாது, வேர்கடலை கார குழம்பு செய்தாச்சு.

மனொகரி மேடம் வாழ்த்துக்களுக்கு நன்றி.
தங்களுக்கும் உரித்தாகுக.

இப்படிக்கு
இந்திரா

indira

நேற்று மேக்ரோனி&பீஸ், காளான் பொரியல், வெஜிடெபுள் பிரிஞ்சி செய்தேன்.
அன்புடன்
சுதா

இன்னைக்கு பாகற்க்காய் கூட்டு செய்தேன், இது எனக்கு புது ரெசிபி சுவை சுப்பர்... ரேனுகா இதையும் பன்னிபாருங்க உங்களுக்கும் பிடிக்கும் , ஏனா எனக்கு ரொம்ப பிடிச்சதே...

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

சுஜாதா, வாங்கோ வந்து கலந்துகொள்வது மிக்க சந்தோசம். இங்கே அறுசுவையின் கீழ்ப்பகுதியில் எழுத்துதவி என்று உள்ளது, அதனைத் தெரிவு செய்து, அங்கே வாசியுங்கள் சுலபமாக தமிழில் ரைப் பண்ணி கொப்பி அன்ட் பேற்ட் பண்ணினால் சுலபமாக தமிழில் எழுதலாம். தொடர்ந்து செய்யுங்கள் , நன்றி.

அரசி, மஞ்சள் உருளை ரெசிப்பி கேட்டீங்களா? நான் பார்க்கவில்லை, இங்கே மனோகரி அக்காவின் குறிப்பில் இருந்தால் அவ எப்படியும் உங்களுக்குச் சொல்லுவா அல்லது யாராவது பார்த்தால் சொல்வார்கள், எனக்குத் தெரியவில்லை, மன்னிக்கவும். தொடர்ந்து பங்குபற்றுவதற்கு மிக்க நன்றி.

இந்திரா, குயிலா, ஹா.... ஹா... ஹாசினி... அனைவருக்கும் மிக்க நன்றி. ஹாசினி உங்களுக்குப் பிடித்ததெல்லாம் எங்களுக்கும் பிடிக்குமென்று கரெக்ட்டா தெரிஞ்சு வைத்திருக்கிறீங்களே..:)

மனோகரி அக்கா: உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி, குறிப்புக் கொடுத்தவர்களும் வந்து எம்மோடு கலந்து கதைக்கிறபோது மிகவும் சந்தோசமாக இருக்கிறது, செய்பவர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கிறது

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரேணுகா, என்னுடைய எக்கவுண்டை ஓபின் பண்ணுங்கோ!!
நான் செய்தவை: பருப்புப் பொங்கல், ஸ்கிராம்பில்ட் எக், மைக்றொவேவ் மாம்பழ சட்னி( ஆகா எனக்கு மிகவும் பிடித்தது), பஜ்சுலேர்ஸ் மெதுவடை.

இவ்வளவும் செய்துவிட்டேன், படங்களும் எடுத்துவிட்டேன். பின்னூட்டங்களை எனக்கு முடிகிறபோது அனுப்பி வைக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பெண் புத்தி ஊசி போன்ற கூர்மையான புத்தி என்பது எவ்வளவு உண்மை:), எனக்கெல்லாம் இப்ப இப்ப தான் நல்ல நல்ல யோசனைகள் வருகிறது.

படங்கள் எடுத்துப் போட முடிந்தவர்கள் எடுத்துப் போடுங்கள் எனச் சொல்லியுள்ளேன், அது ஒரு குறிப்பை யார் செய்தாலும் எடுத்துப் போடலாம், ஆனால் ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுக்கின்றபோது, ஒருவர் மட்டும்தானே எடுக்க முடியும், இருவர் ஒரு குறிப்பை ஸ்டெப் பை ஸ்டெப்பாக எடுத்தனுப்பினால் அட்மினின் பாடு திண்டாட்டமாகிவிடும், அத்துடன் ஒரே மாதிரி இரு குறிப்புப் படங்கள் போடமுடியாதுதானே, எடுத்து அனுப்பியவர்களுக்கும் கவலையாக இருக்கும்.

எனவே என்னுடைய வேண்டுகோள், யாராவது ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுக்க நினைத்தால், நினைத்த உடனேயே இங்கே தெரிவியுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று, அப்படியென்றால் அடுத்தவர் எடுக்காமல் இருக்கலாம்.

நான் கத்தரிக்காய் பிறியாணி(மைக்றோவேவ் முறை): ஸ்டெப் பை ஸ்டெப்பாக எடுக்கப்போகிறேன்... என்பதை இங்கே தெரிவிக்கிறேன்.

இன்னுமொரு வேண்டுகோள், நாளை கிறிஸ்மஸ் பாட்டி உள்ளது, எனவே என்னால் வர முடியாமல் இருக்கும், இரவு வர முயற்சிக்கிறேன், முதலாவது தடவையாக எல்லோரும் மன்னித்துக் கொள்ளுங்கோ.... உங்கள் பதிவுகளைத் தவறாமல் போட்டு வையுங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்