சமைத்து அசத்தலாம் - 4, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 3, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல் இது பகுதி - 4 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை மனோகரி அக்காவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) முடிவடையும். புதன்கிழமை(31/12), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

நேற்று மிளகு வெங்காய குழம்பு செய்தேன். இங்க இருக்கும் குளிருக்கு, வெறும் சுடு சாதத்தில் சுட்ட அப்பளம் வைத்துக்கொண்டு சாப்பிட ரொம்ப ருசியாக இருந்தது!.
அப்புறம், டின்னர் - நேற்று கேழ்வரகு அடை - செய்ய சுலபமான டேஸ்ட்டி அன்ட் ஹெல்தி டிஷ்! (இலா, நோட் பண்ணிக்குங்க... : ))
இன்று மேக்ரோனி & பீஸ் - சும்மா சூப்பர் ஈஸி, ரொம்ப டேஸ்ட்டி ஐயிட்டம் - என் வீட்டு குட்டீஸ்களுக்கு ரொம்ப பிடித்து போயிற்று!

இப்போதைக்கு இவ்வளவுதான்... ஆமாம் ரேணு நீங்க கேட்பது தெரிகின்றது.... என்ன செய்ய?, இந்த முறை கொஞ்சம்தான் செய்ய முடிந்தது. ஆனால் இன்றிலிருந்து ஒரு 4, 5 நாட்களுக்கு விடுமுறை... இனி வரும் மீதி நாட்களில் கட்டாயம் ட்ரை செய்கிறேன்.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அக்கா நான் இன்று பேச்சுலர்ஸ் பருப்பு கீரை கூட்டு செய்தேன். நேற்று மில்க் பேடா செய்தேன். இரண்டின் சுவையும் அபாரம். மேலும் முட்டை பிரட் ரோஸ்ட் செய்தேன். எல்லாமே சூப்பர். நன்றி அக்காஸ்.

அசத்தல் அதிரா அக்கவுண்டண்ட் ரேனு இன்று லென்டில் சூப் செய்தேன். சுவையா இருந்தது. டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது(உருளை கிழங்கை மட்டும் தவிர்க்கலாம்). இலா நோட் பண்ணிக்கோங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இறால் பிரியாணி செய்தேன்.கணக்கில் சேர்த்திடுங்க.மொத்தம் -5.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கவிசிவா! இனிக் கவலையே வேண்டாம், ரேணுகாவுக்கு எக்கவுண்டன் என்று பதவி உயர்வு கொடுத்ததும் எல்லோருக்கும் சுவீட் கொடுக்கிறா... அதே உஷாரில் கணக்கையும் சரியா எடுப்பா கவலைப்படாதீங்கோ.... மிக்க நன்றி.

வின்னி, குறிப்புச் செய்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... நன்றி... நானும் இப்போதான் கொஞ்சமாவது செய்கிறேன்...

இலா ஜிம் மிஸ் அடிக்க வாறாவோ? அதிராட்டைச் சொல்லுவேன் என்று தமிழில் சொல்லுங்கோ... சிரிச்சுக்கொண்டே போவா.... செய்தவற்றுக்கு மிக்க நன்றி இலா...
இலா நீங்க சாப்பிடாவிட்டால்தான் அதிராக்கு வெயிட் போடும் எனவே நிறைய சமைத்து அதிராவை மெலிய வைக்கவேணும்.

ரேணுகா...லீவை நல்லா என் ஞோய் பண்ண்றீங்களா? காரக் குழம்பு செய்தேன் எனச் சொல்லிக்கொண்டே சுவீட் தாறீங்கள்.... இதில காரம் இல்லையே?:)

ஆசியா... மிக்க நன்றி, ஆனாலும் மொத்தம் என்று எண்ணிக்கை சொல்லுறீங்கள் அதனால் இனிச் செய்ய மாட்டீங்களோ எனப் பயமாக இருக்கு, அப்படியில்லைத்தானே? இன்னும் 3 நாட்கள் இருக்கிறதே.

கவின் பயப்படவேண்டாம், நாங்கள் திட்ட மாட்டோம், எங்களுக்குத் தெரியும் இன்னும் 3 நாட்கள் இருக்கிறது அதற்குள் குறைந்தது 9 குறிப்புக்களாவது செய்துபோடுவீங்கள் என்ற நம்பிக்கை இருக்கு, நம்பிக்கை வீணாகாதுதானே?:)

ஸ்ரீ, அரசி, மிகவும் நன்றி... இன்னும் முடிந்தால் செய்யுங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல், வேர்க்கடலை சுண்டல், காலிஃப்ளவர் வறுவல் - இதோட நம்ம கணக்கை முடிச்சுடுங்க கணக்கு.

மனோகரி... என்னை மன்னிக்கனும்... நிறைய சமைக்க ஆசை, ஆனா இந்த முறை நேரம் வாய்க்கல. :( செய்தவை எல்லாம் அருமை. மிக்க நன்றி. :)

அதிரா... நாளயில் இருந்து அடுத்த 5 ஆம் தேதி வரை வீட்டில் விருந்துகள் பல.... அதனால் அடிக்கடி பதிவு போடுவது கடினம். என்னால் முடிந்தவரை சமைத்து இங்கு சொல்கிறேன். :) அடுத்து யாருடயது?? சீக்கிரம் சொன்னீங்கலேன்ன நான் திட்டம் போட வசதியா இருக்கும்.

ரேணுகா... இதுவும் அரபு நாடு தானே.... நான் துபாய்'க்கு 1 முறை வந்திருக்கிறேன். பல முறை துபாய் வழியாக இந்தியா போய் வந்தும் ஒரு முறை மட்டுமே தங்கி சுற்றி பார்க்க முடிந்தது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
மிக்க நன்றி, ஏன் கணக்கை முடிக்கச் சொல்லுறீங்கள்?நாட்கள் இருக்கிறதுதானே?.... ரேணுகா இப்ப கணக்கு இல்லை... எக்கவுண்டன் தெரியுமோ?:)
நீங்கள் முடிந்தால், இன்னும் செய்துபோட்டுச் சொல்லுங்கோ, செய்து எம்மோடு பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இன்று லெண்டில் சூப் செய்தேன்.என்னால் இந்த தடவை நிறைய செய்யமுடியவில்லை.முடிந்தவரை செய்கிறேன் அதிரா,கணக்கு சாரி அக்கவுண்டட் ரேணு.

அன்புச் சகோதரி பர்வின்பானு எப்படி இருக்கீங்க? பல் வலி சரியாகிவிட்டதா? உங்க பதிவைப் பார்த்தேன் பதில் எழுத நேரமில்லாமல் இப்போது எழுதுகின்றேன், என்னைப் பற்றி நிறைய விசயங்களை நினைவில் வைத்திருக்கின்றீர்கள் படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நீங்களெல்லாம் அறுசுவையில் எனக்கு கிடைத்த அன்பு சகோதரிகள் உயிர் இருக்கும்மட்டும் உங்கள் யாரையுமே என்னால் மறக்க முடியாது அதில் உங்களையும் ஒருநாள் நேரில் சந்திப்பேன் என்று நம்புகின்றேன். இந்த தலைப்பில் பங்கெடுத்து உடல் உபாதையிலும் எனது குறிப்பை சமைத்திருக்கீங்க சந்தோசமாய் உள்ளது மேலும் சிரமப்பட வேண்டாம், மக்களோடு விடுமுறையை நன்றாக எஞ்ஜாய் செய்யுங்க ஒகேவா, மீண்டும் மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.நன்றி.

டியர் வனிதா என்னங்க இது? இதுக்கு போய் மன்னிப்பு கேட்கிறீங்க! தினமும் நமக்கு முடிந்தால் தானே வீட்டில் தினப்படி சமையல் ஆகும்! ஆகவே இந்த தலைப்பில் இடம்பெறும் சமையல் குறிப்புகளைச் செய்ய அவரவருக்கு நேரமிருந்தாலொழிய கட்டாயமில்லை சரிங்களா, இவ்வளவு சமைத்து இருக்கீங்க அதுக்கு என் மனமார்ந்த நன்றிகள். மற்றும் என் குறிப்புகளை இன்னும் சமைத்துக் கொண்டிருக்கும் அனைத்து அன்புள்ளங்களுக்கும், அதுக்கு உதவிய சகோதரிகள் அதிரா மற்றும் ரேணுகாவிற்கும் பல ஆயிரம் நன்றிகள்.

மேலும் சில பதிவுகள்