உள்ளி பிரெட்சில் (Garlic Pretzel)

தேதி: December 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள் செய்து காட்டியுள்ள குறிப்பு இது. இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

 

மாவு (all purpose flour) - 3 கப்
முழுப் பூண்டு - ஒன்று
ஈஸ்ட் - 2 பாக்கெட்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீனி - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பட்டர் - 3 மேசைக்கரண்டி
பார்ஸ்லி இலை - ஒரு மேசைக்கரண்டி


 

பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். மாவை சலித்து அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கப் தண்ணீரை லேசாக சூடுப்படுத்தி அதனுள் சீனி மற்றும் ஈஸ்டை போட்டு 5 - 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் பூண்டை போட்டு வேக வைத்து எடுத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் உப்பு கலந்து சலித்து வைத்திருக்கும் மாவை போட்டு அதனுடன் ஈஸ்ட் கரைசல், பூண்டு விழுது, எண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
அதன் பிறகு பிசைந்த மாவை ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு மாவு இரு மடங்காகும் வரை 45 - 60 நிமிடங்கள் மூடி வைத்திருக்கவும்.
பின்னர் அதிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து ஒரு சமமான மேற்பரப்பில் வைத்து நீண்ட கோல் போல உருட்டவும். ஊற வைத்த மாவை எடுத்து மீண்டும் பிசைய தேவையில்லை அப்படியே எடுத்து உருட்டலாம்.
கோல் போல உருட்டிய மாவை பிரெட்சில் போல செய்து எண்ணெய் தடவிய தட்டில் அடுக்கி 15 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
அவனை 400F ல் முற்சூடு செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 3 அல்லது 4 கப் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பொங்கும் அளவிற்கு கொதிக்க விடவும். அதில் செய்து வைத்திருக்கும் பிரெட்சிலை போட்டு திருப்பி விட்டு உடனே எடுத்து விடவும்.
தண்ணீரிலிருந்து எடுத்த பிரெட்சிலை ஒரு பேப்பர் டவலில் போடவும்.
அதன் பிறகு அவற்றை எடுத்து ஒரு எண்ணெய் தடவிய பேக்கிங் தட்டில் இடைவெளி விட்டு அடுக்கவும். அதன் மேல் ஒரு ப்ரஷ்ஷால் பட்டரை பூசி மேலே பார்ஸ்லி இலை, உப்பு தூவி முற்சூடு செய்து வைத்திருக்கும் அவனில் வைக்கவும்.
10 - 15 நிமிடங்கள் கழித்து அல்லது மேற்புறம் ப்ரெளன் நிறமாகும் வரை வைத்திருந்து பின்னர் எடுக்கவும்.
சுவையான பிரெட்சில்கள் தயார். இதனை சல்சா, கிரீம் சீஸுடன் சேர்த்து மாலை அல்லது இரவு நேர உணவாக சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

பூண்டு விழுது அல்லது பூண்டு பவுடரும் இதற்கு உபயோகிக்கலாம். பூண்டு சேர்க்காது சாதாரண பிரெட்சிலாகவும் செய்யலாம். அல்லது ஹலபீனோ பிக்கிள் சேர்த்து ஹலபீனோ பிரெட்சில் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நர்மதா அருமையா இருக்கு பூண்டு சேர்வதால் இன்னும் நல்ல ஹெல்தி.
நர்மதா உங்களுக்கு ரொம்ப பொருமை என்று நினைக்கிறேன்.
இதை கோதுமை மாவில்(ஆட்டாவில்) செய்யலாமா?
ஜலீலா

Jaleelakamal

ஹாய் நர்மதா,
இந்த உள்ளி பிரெட் சில் செய்தேன் நல்ல இருந்தது ஆனால் சிறிது நேரத்தில் ஹார்டாகிவிட்டது.
இருந்தாலும் சாப்பிடும் போது அப்ப அப்ப மைக்ரோவேவில் வைத்து கொடுத்தேன்.
எல்லாம் காலி.
ஜலீலா

Jaleelakamal

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த உள்ளி பிரெட்சிலின் படம்

<img src="files/pictures/aa233.jpg" alt="picture" />