கல்யாண பருப்பு

தேதி: December 25, 2008

பரிமாறும் அளவு: 3பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - 1/2 கப்
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - 1/4 கப்
மிளகாய்வற்றல் - 2
பூண்டு - 1 பல்
சீரகம் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 1
கறிவேப்பிலை - 1 இணுக்கு


 

துவரம்பருப்புடன் பெருங்காயம் சேர்த்து குழைய வேகவைத்து கடைந்து வைக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
அரைத்த கலவையை வேகவைத்த பருப்புடன் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சேர்த்து கிளறி மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.


சாதத்தில் இதை ஊற்றி நெய் சேர்த்து பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பருப்பு சாதத்தோடு பொரித்த அப்பளத்தை நொறுக்கி சேர்த்து பிசைந்தும் சாப்பிடுவார்கள். நாஞ்சில் நாட்டு கல்யாண வீடுகளில் விருந்தில் முதலில் பரிமாறப்படும் குழம்பு இது. "பருப்பில்லாத கல்யாணமா" என்ற சொற்றொடரைக்கூட இப்பகுதிகளில் சாதாரணமாக கேட்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

kalyana paruppu arumai ... nan edhu varai ketidadha ondru endha murai paruppu .... akka sooper

நல்லா இருக்குது,ப்பா நல்ல வாசனையும் வருது ,,ருசியும் சூப்பர்.

கவிசிவா
செய்து பார்த்தேன் .மிகவும் நன்றாக இருந்தது.

Save the Energy for the future generation

ஆஹ் அதுக்குள்ள செய்திட்டீங்களா! கல்யாண சாப்பாடு ஞாபகம் வந்திடுச்சா? :-))ரொம்ப நன்றி அக்கா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி,
போன வாரமே உங்களுடைய கல்யாண பருப்பு செய்தென், பின்னூட்டம் அளிக்க தாமதமாகி விட்டது, ரொம்ப நல்லா இருந்தது கவி, அவருக்கு ரொம்ப புடிச்சி போச்சு, ரசம் கூட ஊத்திக்கலை, பருப்பாவே விட்டு சாப்பிட்டார்,thanks for ur recipie

உங்களுக்கும் கணவருக்கும் இந்த பருப்பு ரொம்ப பிடிச்சிருந்ததா? ரொம்ப சந்தோஷம் பா. எனக்கு கூட இந்த பருப்பு மட்டும் இருந்தால் போதும்.நல்லா சாப்பிடுவேன் :-))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா நலமா?உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு.உங்களின் இந்த பருப்பு ரொம்ப ஜோராயிருந்தது.நன்றி!!

மேனகா நான் நலமே? நீங்களும் குட்டி பொண்ணும் எப்படி இருக்கறீங்க? செய்து பார்த்து பின்னூட்டம் எழுதியதற்கு நன்றி மேனகா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா,
உங்க கல்யாண பருப்பு நேற்று செய்தேன். எனக்கு எப்பவுமே கடைந்த பருப்பு நெய் விட்டு சாப்பிட ரொம்ப பிடிக்கும்!. இது ஃடிபரெண்ட்டா ரொம்ப டேஸ்டியா இருந்தது. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

கவி, கல்யாண பருப்பு நெய் விட்டு சாப்பிட மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

ஹாய் கவிசிவா,

இன்று கல்யாண பருப்பு செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.
மிகவும் நன்றி

BE HAPPY ALWAYS

கல்யாணப்பருப்பு
கவிசிவா கல்யாணப்பருப்பு மிகவும் நன்றாக இருந்தது.

இப்போதான் உங்களுக்கு பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் குறிப்புக்களில், நான் அதிகம் செய்யமுடியவில்லை. உங்கள் குறிப்புக்கள் மிகவும் அருமையாகவும் வித்தியாசமான முறையாகவும் இருக்கு. ஆனால் நான் கொஞ்சம் சோம்பல் பேர்வழி:) அதாவது நீங்கள் அதிகமான குறிப்புக்களில் அரைத்துச் செய்யும் முறைகளே சொல்லியிருக்கிறீங்கள். எனக்கு அரைத்து அரைத்துச் செய்வதென்றால் கொஞ்சம் களவு:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த கல்யாணப்பருப்பின் படம்

<img src="files/pictures/aa296.jpg" alt="picture" />