பட்டிமன்ற தலைப்புகள்

அனைவருக்கும் எனது வணக்கம். இந்த இழையினை அட்மின் சகோதரர் சொன்ன கருத்தின்படி ஆரம்பித்து வைக்கிறேன். இதில் யார் யாருக்கு என்ன தலைப்பு தோன்றுகிறதோ அதனை பதிவு செய்யலாம். யார் அடுத்த நடுவரோ அவர் இதில் இருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்யலாம்.

வாருங்கள். எல்லாரும் உங்களுக்கு தோன்றியதை பதிவு செய்யுங்கள்.

அன்புடன்
உமா

எனக்கு தோன்றிய தலைப்பு:

மரண தண்டனை (Capital Punishment) தேவையானதா இல்லையா?

இணையத்தில் மலரும் காதல் ஆரோக்யமான ஒன்றா இல்லையா?

உமா

1. கல்வி முறை புதியது ஆக்குவது சிறந்ததா....

அல்லது பழய கல்வி முறை சிறந்ததா....

2. தாய் மொழி கல்வியா அல்லது மற்ற மொழி கல்வியா...

சிறந்ததா....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வெளி நாட்டு வாழ்க்கயில் நாம் பெற்றது அதிகமா? இழந்ததுஅதிகமா?

தாஜ்பாஃரூக்

பங்குச்சந்தயில் முதலீடு செய்துவிட்டு நிம்மதி பெருகிரொமா?அல்லது இழக்கிறோமா?

பிரியாணி செய்வதற்க்கு சிறந்தது மட்டனா?சிக்கனா?

எல்லாம் நன்மைக்கே...

அரசியலில் பெருகி வரும் லஞ்சம், ஊழல் ஒழியுமா?மக்களின் வறுமை நிலை மாறுமா?
ஆம் // இல்லை..

*அன்புடன் பஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

//பிரியாணி செய்வதற்க்கு சிறந்தது மட்டனா?சிக்கனா?// ரிஸ்வானா இந்த தலைப்பு காமெடிக்குத்தான போட்டீங்க? உண்மைய சொல்லுங்க.

சமையலுக்கு உகந்தது நல்லெண்ணையா? கடலெண்ணையா?
சாம்பாருக்கு சரியானது முருங்கைக்காயா? பாவற்க்காயா?
டீயில் சிறந்தது இஞ்சி டீயா? ஏலக்காய் டீயா?..... இப்படியெல்லாம் அடுத்து தலைப்பு கொடுக்கப்போறாங்க மக்களே ஜாக்கிரதை!!!!!!

இந்த ரேஞ்சில் எல்லாரும் தலைப்பு கொடுத்தா எப்படி (ம்.........ம்ம் அழுதுடுவாங்க பேசுறவங்க!!!).

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

பிரியாணி திண்ட மப்புல அப்படி எழுதிட்டேன் உமா:)

ஓக்கே,இந்த தலைப்பு நல்லா இருக்கா
பேசி ஜெயிப்பதில் வல்லவர்கள் ஆண்களா?பெண்களா?

எல்லாம் நன்மைக்கே...

அப்புறம் நானும் இப்படி ஒரு தலைப்பு கொடுத்திடுவேன் ஆமா!!!

"ஐயோ என்று அதிகமுறை அவலக்குரல் கொடுப்பது மர்ழியா, அதிராவா?!!?"

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக ரிஸ்வானா உங்கள் கடி தாங்க முடியலை எப்படிப்பா?இது

மேலும் சில பதிவுகள்