அனைவருக்கும் எனது வணக்கம். இந்த இழையினை அட்மின் சகோதரர் சொன்ன கருத்தின்படி ஆரம்பித்து வைக்கிறேன். இதில் யார் யாருக்கு என்ன தலைப்பு தோன்றுகிறதோ அதனை பதிவு செய்யலாம். யார் அடுத்த நடுவரோ அவர் இதில் இருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்யலாம்.
வாருங்கள். எல்லாரும் உங்களுக்கு தோன்றியதை பதிவு செய்யுங்கள்.
அன்புடன்
உமா
தளம்!
உ
1 ஆத்துல சமையல் மாமியா?! மாமாவா?!
2 யார் சமையல் நான்னாருக்கும் மாமி?! மாமா?!
3 மாமிக்கு புது தளம் ஆரம்பிக்கலாமா?! வேண்டாமா!?
4 மாமியால சிரிப்பா சிரிக்கறது அறுசுவையா?! அருப்புகோட்டையா?!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
thalaippu.
திருமணம் முடிந்து தம்பதிகள் முதலில் எதிர்பார்ப்பது
ஆண்குழந்தையா, பெண் குழந்தையா?
என்ன மாமி நீங்க
என்ன மாமி நீங்க நல்ல ஒரு ஆக்கபூர்வமான தலைப்புல போய் இப்படி காமெடி பண்ணிட்டேள்.
பட்டி தலைப்பு
1. பெண்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திருப்பது திருமணத்துக்கு முன்பா, இல்லை திருமணத்திற்கு பின்பா?
2.இன்றைய ஆண்கள் பெண்களை மதிக்கிறார்களா? மிதிக்கிறார்களா?
3. ஆண், பெண் சேர்ந்து படிக்கும் கல்விமுறை சிறந்ததா? தனித்தனியாக படிக்கும் முறை சிறந்ததா?
4.குழந்தைகளுக்கு அதிகமாக செல்லம் கொடுப்பது யார்? தாய் வழி உறவா? தந்தை வழி உறவா?
அன்புடன்
பவித்ரா
பட்டி தலைப்பு
குடும்பத்தில் பொறுப்பு அதிகம் யாருக்கு? கணவனுக்கா? மனைவிக்கா?
அன்புடன்
THAVAM
நடுவர் கல்பனாவுக்கு
எனக்கு பவித்ராவின் ஆலோசனையில்
ஆண், பெண் சேர்ந்து படிக்கும் கல்விமுறை சிறந்ததா? தனித்தனியாக படிக்கும் முறை சிறந்ததா?
குழந்தைகளுக்கு அதிகமாக செல்லம் கொடுப்பது யார்? தாய் வழி உறவா? தந்தை வழி உறவா?
இந்த தலைப்புகள் மிகவும் பிடித்துள்ளன.
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
தலைப்பு
குடும்பத்தை சிறப்பாக நிர்வகிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?
குழந்தையின் கல்வியிலும், எதிர்காலத்திலும் அதிக அக்கரை காட்டுவது தாயா? தந்தையா?
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
பட்டிமன்ற தலைப்பு
இன்றைய சூழ்நிலைக்கு விவாதிக்க வேண்டிய தலைப்பாக இதை கொள்வோமா- நாட்டை கெடுப்பதில் அதிகம் பங்குவைப்பது அரசியல் வாதியா? அரசு அதிகாரிகளா?
பட்டிமன்ற தலைப்பு
மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா? சமூகச் சூழலா?
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
பட்டிமன்ற தலைப்பு
தாலி நம் கலாச்சாரமா இல்லை ஆண்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அடையாள சின்னமா?
பிள்ளைகளை அடித்து தான் வளர்கனுமா?
கல்யாணத்திற்கு பின் ஒரு பெண் அவளின் (ஆண்) தோழர்களுடன் தொடர்பை தொடரலாமா கூடாதா??? (நான் கூறுவது நட்பு அடிப்படையில் தான்)
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!