அனைவருக்கும் எனது வணக்கம். இந்த இழையினை அட்மின் சகோதரர் சொன்ன கருத்தின்படி ஆரம்பித்து வைக்கிறேன். இதில் யார் யாருக்கு என்ன தலைப்பு தோன்றுகிறதோ அதனை பதிவு செய்யலாம். யார் அடுத்த நடுவரோ அவர் இதில் இருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்யலாம்.
வாருங்கள். எல்லாரும் உங்களுக்கு தோன்றியதை பதிவு செய்யுங்கள்.
அன்புடன்
உமா
hi
:-)))
அன்புடன்
பவித்ரா
பட்டிமன்ற தலைப்புகள்
-பண்டிகைகளால் குடும்பங்கள் அதிகம் மகிழ்ந்தது இக்காலத்திலா? அக்காலத்திலா?
(இந்த தலைப்பு எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது)
-மெகா சீரியல்களால் நன்மை அதிகம் விளைகிறதா? தீமை அதிகம் விளைகிறதா? (நடந்து முடிந்த பட்டிமன்ற தாக்கம்)
-குடும்பத்தில் முக்கியத்துவம் அதிகம் கொடுப்பது மூத்த பிள்ளைகளுக்கா? அல்லது இளையவர்களுக்கா? (அல்லது) குடும்பத்தில் அதிகம் பொறுப்பு இருப்பது மூத்த பிள்ளைகளுக்கா? அல்லது இளையவர்களுக்கா?
-ஒருவர் முன்னேற, அவர் வாழ்வில் அதிகம் தேவை படுவது அதிர்ஷ்டமா? உழைப்பா? பணமா?
-"கோ கிரீன்" முயற்சிகள் அவசியமானவையா? வீண் முயற்சியா?
-"அவுட் சோர்சிங்" என்பதால் சாதகங்கள் அதிகமா? பாதகங்கள் அதிகமா?
-பட்டாசுகள் பண்டிகைகளுக்கு அவசியமா? அவசியமில்லையா?
-விவசாயத்தில் இன்றைய காலகட்டத்தில் கெமிகல் உரங்கள் சிறந்ததா? இயற்கை உரங்கள் சிறந்ததா?
-இன்றைய இளைய சமுதாயம் படிப்பிற்கும், வேலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்களா? அல்லது வாழ்க்கையின் பிற சந்தோஷங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா?
-இன்றைய சூழலில் ஒரு மனிதனுக்கு உதவுவது நேர்வழியா? நெளிவுசுளிவுகளா?
-சுயநலமா? பொதுநலமா? எது இன்று அவசியம்?
-மன்னிப்பதா? பழிவாங்குவதா? எது சரி?
-கொடி அசைந்ததால் காற்று வந்ததா? காற்று வந்ததால் கொடி அசைந்ததா?
இதுவும் கடந்து போகும்.
புதிய பட்டி தலைப்பு
இளைஞர்கள் சீரழிவுக்கு காரணம், குடும்பமா?. சமுதாயமா?. இந்த தலைப்பு விவாதிக்க ஏற்றதுதானே?.
அன்புடன்
THAVAM
பட்டி தலைப்பு
பெண்களை கேலி பொருட்களாக சித்தரிப்பதற்கு காரணம் சமுதாயமா? மீடியாவா?
அன்புடன்
பவித்ரா
பட்டிமன்ற தலைப்புகள்
தோழி தோழர்கள் புதிய உறுப்பினர்கள் தங்களுக்கு தோன்றும் பட்டிமன்ற தலைப்புகளை இங்கே வழங்குமாறு கேட்டுகொள்கிறேன்.
இதுவும் கடந்து போகும்.
தலைப்பு
1. இன்றை காலக்கட்டத்தில் வளரும் பிள்ளைகளுக்கு நம் கலாச்சாரங்களை பற்றி சொல்லி வளர்ப்பது அவசியமா, அவசியமற்றதா?
2. மன்னாராட்சி சிறந்தா? ஜனநாயக ஆட்சி சிறந்தா?
PADDIMANTA THALAIPPU
மு.ப.குமார்.
.
1 இன்றைய சீறழிவுக்கு முக்கிய காரணம் அரசியல் வாதிகளா? அரசு அதிகாரிகளா?
2. இரு மொழிக்கொள்கை-தமிழை-தமிழனை வாழவைத்ததா ?
பட்டிமன்ற தலைப்பு
இன்றைய சூழலில் கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு தேவையா ? நல்ல ஓர் தலைப்பு மட்டுமல்ல இன்றைய கால்கட்டத்தில் அரசியல் சார ஒரு அமைப்பு இதனை ஆராயவேண்டிய ஒன்று ஆகும். எனவே இத்தலைப்பினை இவ்வார தலைப்பாக கொள்ளலாம்.
பேசியாச்சு
இந்த தலைப்பு ஏற்கெனவே பேசியாச்சுப்பா :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
இன்றைய சூழலில்
1. இன்றைய சூழலில் விவசாயம் அழிந்து வருவதற்குக் காரணம் தண்ணீர்ப் பற்றாக்குறையா? அல்லது பணப்பற்றாக்குறையா?
2. அதே போல் விவசாய நிலங்கள் குறைவதற்குக் காரணம் கிராம வாசிகளா? அல்லது நகர வாசிகளா?
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்