பட்டிமன்ற தலைப்புகள்

அனைவருக்கும் எனது வணக்கம். இந்த இழையினை அட்மின் சகோதரர் சொன்ன கருத்தின்படி ஆரம்பித்து வைக்கிறேன். இதில் யார் யாருக்கு என்ன தலைப்பு தோன்றுகிறதோ அதனை பதிவு செய்யலாம். யார் அடுத்த நடுவரோ அவர் இதில் இருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்யலாம்.

வாருங்கள். எல்லாரும் உங்களுக்கு தோன்றியதை பதிவு செய்யுங்கள்.

அன்புடன்
உமா

இன்றைய பெண்களுக்கு ஏற்ற ஆடை புடவையா?சுடியா? நாகரீக ஆடைகளா?

ஹாய் தோழிஸ் இதுவரை வந்துள்ள் பட்டிமன்றத்தலைப்புக்கள் இவை .

1.இணையத்தில் மலரும் காதல் ஆரோக்யமான ஒன்றா இல்லையா?

2.மரண தண்டனை (Capital Punishment) தேவையானதா இல்லையா?

3. கல்வி முறை புதியது ஆக்குவது சிறந்ததா....

அல்லது பழய கல்வி முறை சிறந்ததா....

4. தாய் மொழி கல்வியா அல்லது மற்ற மொழி கல்வியா...

5.வெளி நாட்டு வாழ்க்கயில் நாம் பெற்றது அதிகமா? இழந்ததுஅதிகமா

6.பங்குச்சந்தயில் முதலீடு செய்துவிட்டு நிம்மதி பெருகிரொமா?அல்லது இழக்கிறோமா?

7.பிரியாணி செய்வதற்க்கு சிறந்தது மட்டனா?சிக்கனா?

8.அரசியலில் பெருகி வரும் லஞ்சம், ஊழல் ஒழியுமா?மக்களின் வறுமை நிலை மாறுமா?
ஆம் // இல்லை..

9.பேசி ஜெயிப்பதில் வல்லவர்கள் ஆண்களா?பெண்களா?

10.அனைவரும் மகிழ்வது கூட்டு குடும்பதிலா?தனி குடும்பதிலா?

11.அழகு என்பது உடலா??உள்ளமா??

12.வாழ்க்கை என்பது குடும்பத்தையா??அல்லது உலகத்தையா??அதிகம் சார்ந்தது...

13. இன்றைய காலக்கட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் ஜாதி மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அவசியமானதா, அவசியமற்றதா?

14. சமூகப் பொறுப்பு அதிகம் கொண்ட திரைப்பட நடிகர் கமலா, ரஜினியா?

15.படிக்க சுவாரசியம் நமக்கு வந்த காதல் கடிதமா? அடுத்தவருக்கு வந்த காதல் கடிதமா

16.ஆண்பெண் ஒன்றாக கல்வி கறபது நல்லதா அல்லது தந்தனியே படிப்பது நல்லதா?

17.புஷ்ஷுக்கு செருப்படி என்று ஆள் ஆளுக்கு கொண்டாடுகிறார்களே அது புகழத்தக்க செயலா அல்ல்து கீழ்த்தரமானதா.
(மேலே சொன்ன புஷ் தலைப்பு கொஞ்சம் தர்மசங்கடத்தை உருவாக்கும் என்றால் விட்டுவிடலாம்).

18.. இன்றும் ஆணாதிக்கம் இருக்கிறதா இல்லையா?!

19. பெணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா புகுந்த வீட்டிலா?!

20.நம் சமூகம் பெண்ணின் வளர்ச்சிக்கு இன்றும் முட்டுக்கட்டை போடுகிறடா இல்லயா?!

21.அலைபேசி"யினால் (செல்போன்) அதிகம் விளைவது நன்மையா? தீமையா?

22.அலைபேசி தேவையா? தேவையற்றதா?

23.ஆணும் பெணும் சேர்ந்து படிப்பது
சரியா? தவறா?
சேர்ந்துபடிப்பதால் அதிகம் வருவது
நன்மையா தீமையா

24.இன்றைய காதல் மனம் பார்க்கிறதா முகம் பார்க்கிறதா?!

25.திருமணத்துக்கு முன் காதலால் நன்மையா தீமையா?!

26. காதல் தோல்வி - அதிகம் பாதிப்பது ஆணையா பெண்ணையா?

27..உலகில் சிறந்தது எது கல்வியா?செல்வமா?

28.உலகமக்களால் அதிகம் கவரப்பட்டவர் தேசத்தந்தை காந்திஜியா? நெல்சன் மண்டேலவா?

29.நம் தமிழ் இசையமைப்பாளர்கள் எந்த மொழி பாடல்களிலிருந்து காப்பியடிப்பதில் வல்லவர்கள்? இந்திய மொழி பாடல்களா? வெளிநாட்டு பாடல்களா?

30.திரைப்படத்தில் நகைச்சுவை உண்ர்வு அக்காலத்தில் சிற்ந்து இருந்ததா? அல்லது இப்போது சிறந்து இருக்கிறதா?

31.காமெடியில் கலக்குவது வடிவேலுவா? அல்லது விவேக்கா?

32.வேலைக்கு செல்லும் பெண்கள் உடன் பனிபுரியும் ஆண்களால் மதிக்க படுகிறார்களா மிதிக்க படுகிறார்களா?!

33. நாகரீகம் என்ற பெயரில் இன்றய பெண் சமுதாயம் சீர் பட்டிருக்கிறதா சீரழிந்திருக்கிறதா?!

34. கணவனே கண் கண்ட தெய்வம் - இன்றும் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயமா?!

35. இன்றைய அரசியலுக்கு தேவை கல்வி அறிவு பெற்ற இளைஞ்சர்களா அனுபவ அறிவு பெற்ற முதியோர்களா?!

36.நகரவாழ்க்கையா ? கிராமவாழ்க்கையா? சிறந்தது எது?

37.டீ.வி சீரியல் பெண்களை பெருமைபடுதுகிறதா?
சிறுமைபடுடுகிறதா?

38.கேட்க இனிமை பழைய பாடலா?புதிய பாடலா?

39.இன்றைய பெண்களுக்கு ஏற்ற ஆடை புடவையா?சுடியா? நாகரீக ஆடைகளா?

ஹாய் தோழிஸ் இதுவரை வந்துள்ள் பட்டிமன்றத்தலைப்புக்கள் இவை .

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

அடுக்குமாடி கட்டிடங்களால் நன்மையா தீமையா?!

ஆடம்பர வாழ்க்கை முறை தேவையானதா இல்லையா?!

-- இதையும் சேர்த்துக்கங்க ஜெயா... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கடவுளே... கடவுளே....
ஒரு அந்தர அவசரத்துக்குக் கூட ஐயோ என்று கத்த முடியாமல் பண்ணிவிட்டார்களே!!! இதைத் தட்டிக் கேட்க யருமே இல்லையா? , இங்கே சில இடங்களில் வேலியே பயிரை மேய்கிறதே... :) பின்னர் யார்தான் யாரைத் தட்டிக் கேட்பது... :)

புதிதாக வருபவர்கள், மர்ழியா... அதிரா என்றால் இரு கண்டமாக்கும் அல்லது தீவாக்கும் என்றெல்லாம் நினைத்து மள மளவென்று தலைப்பைப் போட்டுவிடப் போகிறார்களே..... அவர்களுக்கெல்லாம் நான் எப்படிப் புரியவைப்பேன்.... இது கண்டமுமில்லை.... தீவுமில்லை.... அறுசுவையில் உலா வரும் ஆயிரமாம் உள்ளங்களில்.... அன்பான பண்பான உள்ளங்கள் இவையிரண்டும்தான் என்று:) ... ஐயையோ!!!!!! எல்லோரும் முறைப்பது குளோசப்பில் தெரிகிறது.... அதிரா வாயை மூடுங்கோ இது அரட்டைப் பகுதி இல்லை...

இனிய புத்தாண்டில் புது நடுவராக அமரப்போகும் வருங்கால நடுவர் அவர்களே.... வீ வில் மீற் அட் த ஆலமரம்:)

சரி எனக்கு கிட்டிய சில தலைப்புக்கள்:
1 "பிறப்பவர் ஒவ்வொருவருக்கும் இறப்பு என்று ஒன்று இருக்கிறது" - இறப்பு இருக்கத்தான் வேண்டும் என்கிறீங்களா? ஐயையோ இறப்பென்பது வேண்டவே வேண்டாம் என்கிறீங்களா?

2. " இன்று உலகில் அதிகம் சந்தோசத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள்" - ஆண்களா? பெண்களா?

3. ஒரு பெண்ணுக்கு திருமணம் முடித்துக் கொடுக்க உகந்த வயதாக எதைக் கருதுகிறீங்கள்?" - 17 - 23 வரையான காலமா? அல்லது 23 இன் மேல் முடித்துக் கொடுப்பதே சிறந்ததா?

4. "இன்று 10 - 17 வயதுக்குள் இடைப்பட்ட காலத்தில் பிள்ளைகளுக்குப் பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள்" - இது சரியான முறையா? தவறான முறையா?

இன்னும் வந்தால் சொல்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு அதிரா உங்களின் சிறுவர்களுக்கு செல் போன் தலைப்பு அருமை.சிறுவர்களுக்கும் பெற்ரோர்களுக்கும் நல்ல விழிப்புணர்வுக்கு உதவும்.

ஜோதிடம் , வாஸ்து பார்க்கலாமா, கூடாதா?

பட்டு புடவைகள் ஆடம்பரமா, அவசியமா?

அன்புடன்

சீதாலஷ்மி

uஉமாவிற்கு அடுத்த நடுவர் யார்? இங்கு நிறையப்பேர் திறமையை வைத்துக்கொண்டு சாட்டுசொல்லி ஓடி ஒளிக்கிறார்கள்.எல்லாரையும் பிடிச்சு இழுத்துக்கொண்டு வாங்கோ.
என் தலைப்புக்கள்.
1.மனிதர்கள் கடவுளைப்படைத்தார்களா? கடவுளர்கள் மனிதர்களைப்படைத்தார்களா?[கவிஞர் பெரியோர் என்று நிறைய பேருக்கு வந்த சந்தேகம்]

2.பெற்றோர்கள் பிற்காலத்தில் பொருளாதாரத்தில் பிள்ளைகளில் தங்கி இருப்பது சரியா தவறா?

3.அமெரிக்கா உலகுக்கு நன்மை செய்கிறதா தீமை செய்கிறதா?[மிகவும் சுவாரஸ்யமான தலைப்பு.நிறைய நாடுகள் அறிவாளிகளால் அதிகமாக[வெளிப்படையாக] வாதாடப்பட்டுக்கொண்டிருக்கும் தலைப்பு]

4.கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழி வந்ததா?

5.பிற நாட்டில் வாழும்போது நம் கலாச்சாரத்தையே பேண வேண்டுமா? அந்த நாட்டுக்கேற்ப மாற்றம் செய்து கொள்ள வேண்டுமா?

6.னெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வது சரியா? தவறா?[உலகத்திலேயே கண்பார்வையில் பிரச்சனை அதிகம் உள்ளவர்கள் இந்தியர்கள்தானாம் காரணம் உறவுமுறைத்திருமணம்]

7.இன்றைய உலகில் பூப்புனித நீராட்டுக்கு விழா எடுப்பது அவசியமா? தேவையற்றதா?

8.திருமணமான தம்பதிகளின் குழ்ந்தை விடயத்தில் உறவினர்கள் தலையிடுவது நாகரீகமா? அநாகரீகமா?
[எதிர் தரப்புக்கு யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்தால் வேண்டாம்]

நினைவில் ஏதேனும் மலர்ந்தால் மீண்டும் வருவேன்.

சுரேஜினி

1. பள்ளிச் சிறார்களின் பாடத்திட்டத்தில் வீட்டுப் பாட முறை தேவையா? தேவையற்றதா?

2. திருமணங்களுக்கு ஆடம்பரச் செலவு தேவையா? தேவையற்றதா?

3. இதில் எது அதிக சுவையைக் கொண்டது, மீன்? கருவாடு?

4. நாம் வசிக்கும் வீடுகளில் எது பாதுகாப்பானது தனிவீடா? அடுக்கு மாடி கட்டிடங்களா?

5. வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் உருவாகக் காரணம் மேலதிகாரிகளாலா? சக ஊழியர்களாலா?

6. வெளிநாடு செல்வதற்கு காரணம் சொந்த நாட்டில் அங்கீகாரம் கிடைக்காததாலா?அதிகமாக பொருளீட்டும் பேராசையாலா?

7. பள்ளிக்கூடங்களில் செக்ஸ் கல்வி அவசியமா?அவசியமற்றதா?

8. குழந்தை வளர்ப்பு முறையில் குழந்தையை அடித்து வளர்க்கும் முறை, அவர்களுக்கு பலன் தருமா? தராதா?

9. சினிமா நடிகை, நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் தேவையா? தேவையற்றதா?

10. திரைப்படம் பார்ப்பதில் எங்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கும்,வெளியில் திரையரங்கிலா? வீட்டின் தொலைகாட்சி பெட்டியிலா?

அப்பப்பா... எத்தனை விதமான தலைப்புகள். எல்லோரும் கலக்கிட்டீங்க. சில தலைப்புகள் அப்படியே நான் யோசிச்சு வெச்ச மாதிரியே இருக்கு. யாரும் சொல்றதுக்குள்ள இதோ என்னுடைய தலைப்புகள்:)

1. அதிக பாசம் உடையவர்கள் ஆண் குழந்தைகளா? இல்லை பெண் குழந்தைகளா?

2. நம்முடைய சமூகத்தில் ஆண்களும் பெண்களும் சரி சமமாக நடத்தப் படுகிறார்களா இல்லையா?

3. இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா எல்லாவற்றிலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வருமா இல்லையா?

1.சமைப்பதில் வல்லவர்கள் ஆண்களா? பெண்களா?
2.உணவில் ருசியானது சைவமா? அசைவமா?
3.உயர்கல்வி குறித்து பெற்றோர் முடிவெடுப்பது நல்லதா?பிள்ளைகள் முடிவெடுப்பது நல்லதா?
4.பிள்ளைகளை விடுதியில் த்ங்கி படிக்க வைப்பது நல்லதா? தீயதா?
5.குடும்பத்தை நிர்வகிப்பதில் திறமைசாலிகள் ஆண்களா?பெண்களா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்