பட்டிமன்ற தலைப்புகள்

அனைவருக்கும் எனது வணக்கம். இந்த இழையினை அட்மின் சகோதரர் சொன்ன கருத்தின்படி ஆரம்பித்து வைக்கிறேன். இதில் யார் யாருக்கு என்ன தலைப்பு தோன்றுகிறதோ அதனை பதிவு செய்யலாம். யார் அடுத்த நடுவரோ அவர் இதில் இருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்யலாம்.

வாருங்கள். எல்லாரும் உங்களுக்கு தோன்றியதை பதிவு செய்யுங்கள்.

அன்புடன்
உமா

நடுவர்களே சில தலைப்புக்களுக்கு மறுபக்கம் வாதாட யாரும் வரமாட்டார்கள் என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் இங்கு வைத்தே யார் யாரெல்லாம் ஆதரித்து பேசப்போறீங்கள் ஆரெல்லாம் எதிர்த்து வாதாடப்போறீங்கள் எண்டு இங்க வச்சு கேட்டிட்டு தொடங்குங்கோ.

சுரேஜினி

எவ்வளவு தலைப்புகள், எல்லோரும் நல்லாதான் யோசிக்கிறாங்க என்னத்தவிர. நான் ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்க ஆசைப்படறேன். (ஒண்ணு தான் தோணுச்சு)
நம் நாட்டில் மக்களுக்கு உடல் நலம் குறித்த விழிப்புணர்வு இருக்கா இல்லயா.
இத்தலைப்பை எப்படி வேணாலும் மாடிஃபை பண்ணிக்கலாம்.

வாழ்வில் அதிக தப்புக்கள் செய்வது ஆண்களா? பெண்களா?

சுரேஜினி

ஹலோ தோழிகளே.... என் பங்கையும் கொடுத்து விடுகிறேன்.

இந்தியா போன்ற வளரும் நாடுகள் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் லட்சத்தை கோடிக்கணக்கில் ஒதுக்குவது அவசியமா?அவசியமற்றதா?

வேறு ஏதாவது தோன்றினால் மீண்டும் எழுதுகிறேன்.

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

பொது நலம் கருதுபவர்கள் அதிகம் ஆண்களா பெண்களா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தம் பிள்ளைகளுக்கு தாய் மொழியில் பேச மட்டுமே தெரியும், எழுத படிக்க தெரியாது என்கிறர்களே... இது அவர்கள் முன்னேறத்தை காட்டுகிறதா? நம் நாட்டின் அழிவை காட்டுகிறதா?!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ஏன் பட்டி மன்றம் 1 என்று போடறீங்க?பட்டி மன்ற தலைப்பையே அங்கு போடலாம் தானே?//

இது பட்டிமன்றம் 11 ல் ரேணு கேட்ட கேள்வி
இதற்கு என் அபிப்பிராயத்தை தருகிறேன்.

1.பட்டிமன்ற தலைப்புகள் பெரும்பாலும் நீளமாக இருக்கும். முகப்பில் இவ்வளவு நீளமான தலைப்புபோட அனுமதி இருக்கிறதோ தெரியாது.பாபு அண்ணா பதில் பிளீஸ்

2.அறுசுவையில் அனைத்து அம்சங்களுமே அதன் சாராம்சத்தை தலைப்பில் கொண்டிருக்கிறது.நிறைய வாக்கெடுப்பு விவாதங்கள் இருக்கிறது.சிலர் தலைப்பில் கேட்கும் கேள்விகளே பட்டிமன்றத்தலைப்பு போலவே இருக்கிறது.இவை எல்லாவற்றுக்குள்ளும் தனித்தன்மைவாய்ந்த பட்டிமன்றம் இதில் எது பட்டிமன்றம் என்று தெரியாமல் தொலைந்துபோக வாய்ப்பிருக்கிறது.

3.மன்றத்தில் ஏற்கனவே பட்டிமன்றம் என்ற தலைப்பு இருந்தால் அதற்குள் சென்று நேரடியாக தலைப்பை போடலாம்.ஆனால் மன்றத்தில் அப்படி ஒரு தலைப்பு இல்லை.

4.அதிக பிரசங்கித்தனமாக நினைக்க வேண்டாம்.ஏதோ எனக்கு தோன்றியது.

சுரேஜினி

//அடுத்த நடுவரையும் அறிவிக்க வேண்டாம்.... இதன் முடிவை மட்டும் சொல்லி விட்டு விடுங்கள். நம் மக்களுக்கு பட்டிமன்றத்தில் இருந்து சற்று ஓய்வு தேவை போலும். தவரை இருந்தால் மனியுங்கள்.//
இது பட்டிமன்றம் 11 ல் வனிதா கூறியிருக்கிறார்.தயவு செய்து இதுபற்றி கலந்தாலோசிக்க எல்லாரும் வாங்கோ.

சுரேஜினி

பெண்ணுக்கு 18 டு 22 க்குள் திருமணம் செய்து வைப்பது நல்லதா அல்லது 22 க்கு மேல் செய்து வைப்பது நல்லதா?

//அடுத்த நடுவரையும் அறிவிக்க வேண்டாம்.... இதன் முடிவை மட்டும் சொல்லி விட்டு விடுங்கள். நம் மக்களுக்கு பட்டிமன்றத்தில் இருந்து சற்று ஓய்வு தேவை போலும். தவரை இருந்தால் மனியுங்கள்.//

நடந்துக் கொண்டிருக்கும் பட்டி மன்றத்தைப் பற்றி இப்படி ஒரு அதிர்ச்சியான கருத்தைக் கூறிய சகோதரி வனிதாவின் கருத்தும், மற்றும் அங்கத்தினரின் கருத்தையும் பார்த்து நானும் அதைப் பற்றி கலந்தாலோசிக்க வந்துள்ளேன்.இதுவரை நடந்த பட்டிமன்ற தலைப்புகளிலிருந்து இந்த ஒரு தலைப்பு சரியாக போகவில்லை என்பதற்காக பட்டிமன்றத்தையே நிறுத்தச் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த முறை சரியாக போகாததற்கு பல காரணங்கள் இருக்கலாம் அதில் சிலருக்கு தலைப்பில் நாட்டம் இல்லாமல் போகலாம் அல்லது நேரமின்மையாக இருக்கலாம், சிலருக்கு ஓய்வு தேவைப்படலாம் ஆக இவ்வாறு இன்னும் பல காரணங்களும் இருக்கலாம் அதற்காக இதை நிறுத்தும் ஆலோசனையை விட இந்த பகுதியை இன்னும் சிறப்பாக நடத்திச் செல்ல தேவையான ஆலோசனைகள் வந்தால் நன்றாக இருக்கும். என்னைப் பொருத்தவரையில் இந்த பகுதியை தொடர்ந்து நடத்திப் பார்த்த பிறகு தான் அந்த முடிவுக்கே வர வேண்டும், ஏனெனில் வந்து குவிந்திருக்கும் பட்டிமன்றத் தலைப்புகளைக் காணும் போது அதற்கு இன்னும் கால அவகாசம் நிறைய உள்ளது என்றே கருதுகின்றேன். எதையும் முடித்து வைப்பது மிகவும் சுலபம், ஆனால் ஆரம்பித்து அதை வெற்றியுடன் நடத்திச் செல்வது தான் கடினம் என்பது எல்லோரும் அறிந்ததே. மேலும் அறுசுவை நேயர்களிடம் இந்த பகுதி மிகவும் வரவேற்பை பெற்றதால் மன்றத்தில் இதற்கென்றே தனி தலைப்பு வேண்டும் என்று அட்மினிடம் கூட வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன் ஆகவே இதை நிறுத்தவேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

எதிர்பாராதபடி குறைந்த பங்களிப்பு இடம் பெறும் தலைப்புகளில் தீர்ப்பு கூற நடுவருக்கு சற்று கடினமாகத்தான் இருக்கும் அப்போது வாதங்கள் போதவில்லை என்று அவர் கருதினால், கொடுக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்தை வேண்டுமானால் கொஞ்சம் அதிகம் எடுத்து பார்த்து, பிறகு தன் தீர்ப்பை அறிவிக்கலாம், இதற்காக வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றேன் இதில் மன்றத்தினரின் கருத்தை மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் கூறலாம்.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நடுவர்களும் பட்டிமன்றத் தலைப்பு பகுதியில் நேயர்கள் கொடுத்திருக்கும் தலைப்புகளிலிருந்து மட்டும் உங்கள் தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தால் அதை கொடுப்பவர்களுக்கும் உற்சாகமாக இருக்கும் இன்னும் நிறைய்ய பல நல்ல தலைப்புகள் கிடைக்கும் என்று கருதுகின்றேன் நன்றி.

மேலும் சில பதிவுகள்