பட்டிமன்ற தலைப்புகள்

அனைவருக்கும் எனது வணக்கம். இந்த இழையினை அட்மின் சகோதரர் சொன்ன கருத்தின்படி ஆரம்பித்து வைக்கிறேன். இதில் யார் யாருக்கு என்ன தலைப்பு தோன்றுகிறதோ அதனை பதிவு செய்யலாம். யார் அடுத்த நடுவரோ அவர் இதில் இருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்யலாம்.

வாருங்கள். எல்லாரும் உங்களுக்கு தோன்றியதை பதிவு செய்யுங்கள்.

அன்புடன்
உமா

தோழிகளே, அனைவரும் நலமா? திடீரென்று எனக்கும் நிறைய தலைப்புகள் தோன்றின.. இவற்றில் விவாதத்துக்கு ஏற்றதை எடுத்துக் கொள்ளுங்கள்...

1. இன்றைக்கு சுதந்திர தினம், குடியரசு தினம் வெறும் பேச்சளவில் மட்டும் கொண்டாடப் படுகிறதா? அல்லது மக்களால் உணர்ந்து கொண்டாடப் படுகிறதா?
2. இன்றைய சூழலில், வேற்றுமையில் ஒற்றுமை என்னும் இந்திய நாட்டின் சிறப்பம்சம் வலுவோடு இருக்கிறதா? வலு குறைந்து வருகிறதா?
3. இன்றைய சமுதாயத்தில் சாதி, மத, இன பாகுபாடு உண்மையிலேயே குறைய வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா?
4. இன்றைக்கு நூல்நிலையங்கள் தேவையா? அல்லது (வீட்டுக்குள்ளேயே கணிணி, தொலைக்காட்சி வரவால் எல்லா அறிவும் கிடைக்கிறது)தேவையில்லையா?
5. எல்லோர்க்கும் பாரபட்சம் இல்லாத ஒரே மாதிரி கல்வி முறை (குறைந்த பட்சம் 10வது வரையாவது) இன்றைக்கு நம் நாட்டில் தேவையா? தேவையில்லையா? தேவையெனில் சாத்தியமா? இல்லையா?
6. இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு நீதிக் கதைகள் நல்லதா? அல்லது பொழுது போக்குக் கதைகள் நல்லதா?
7. இன்றைக்கு மனிதாபிமானம் வளர்ந்து வருகிறதா? தேய்ந்து வருகிறதா?
8. நம் நாட்டில் மழைக்கால வெள்ளத்தின் சேதத்தை தவிர்க்க மாற்று வழி உண்டா? இல்லை அது இயற்கை தந்த சாபக்கேடா?
9. மக்கள் தம் வேலை சீக்கிரம் நடக்க வேண்டும் என்று லஞ்சம் வளர்ந்ததா? அல்லது அது மக்களிடையே திணிக்கப்பட்டதா?
10. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்கள் அறிவை பலகீனப்படுத்துகிறதா? பலப்படுத்துகிறதா?

வாழ்த்துக்களுடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

ஆயிஸ்ரீ,

அருமையாக சிந்திக்கிறீர்கள். இன்னும் நிறைய பதிவுகள் போட்டு உங்கள் பங்களிப்பை அதிகமாக்குங்கள். வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

வணக்கம்
மிகவும் நன்றி சீதாலஷ்மி மேடம்.
மனதில் இன்னும் சில தோன்றியது. அவை,
1. காலை கதிரவன் உதயம் அழகா? அல்லது அந்தி மாலை ஆதவன் மறைவது அழகா?
2. மணம் மிகு தருவது மல்லிகையா? முல்லையா?
3. வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா? இல்லையா?
4. மனிதன் வேற்று கிரக ஆராய்ச்சிகள் செய்வது தேவையா? தேவையற்றதா?
5. வாழ்க்கையில் எது முக்கியம்? நிம்மதியா? நிதியா?
6. குறிக்கோளை அடைய விடாமுயற்சி வேண்டுமா? அட என்னெதான் முயன்றாலும் அதிர்ஷ்டம் வேண்டுமா?
7. நம் நாட்டில் சாலை விதிகளை மக்கள் பின்பற்றுவதில்லையா? அல்லது அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்கிறார்களா?

அன்புடன்,
ஆயிஸ்ரீ

ரொம்ப அருமையான தலைப்பு உங்களுடையது. உங்கள் சிந்தனை அருமை

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வணக்கம் சுஹைனா, நன்றாக இருக்கிறீர்களா? உங்கள் ஹஜ் பயணம் நல்ல படியாக நிறவேற்றி வந்துள்ளீர். உங்கள் வாழ்த்துக்கு நன்றிங்க. நீங்க சொல்றது மிகவும் சரியே.. சீரியஷான தலைப்பில், வாதாடும் போது, கொஞ்சம் டென்ஷன் இருப்பது உண்மைதான். சீரியஸ் விசயங்கள் எங்கேயாவது பேசத் தான் வேண்டும்... அப்பொழுது நமக்கு அவ்விசயம் பற்றி விழிப்புணர்ச்சி கிடைக்கிறதும் உண்மையே..அவற்றுக்கு இடையிடையே நகைச்சுவையாகவும் வித்தியாசமாகவும் தலைப்புகள் தேர்ந்து எடுத்து வாதாடுவது, நல்லதாகவே இருக்கும். தனிஷா உங்களுக்கும் என் நன்றிங்க..பொன்னு நலமா?

இதுவே கூட ஒரு தலைப்பாகும் போல இருக்கிறது...

நேயர்களுக்கு, பட்டிமன்றங்கள் நகைச்சுவையாகவும், பொழுதுபோக்காகவும் இருத்தல் சுவையா? அல்லது அரிய பல கருத்துக்களோடு, முக்கிய செய்திகள் பற்றிய விவாதமாக இருத்தல் சுவையா? (யாரும் கம்பெடுக்காதீங்க... நான் எஸ்கேப்)

அன்புடன்,
ஆயிஸ்ரீ

ஹாய்ஆயிஸ்புகழ், என்னை பொருத்தவரை பட்டி மன்றம் நகைச்சுவையாகவும், பொழுதுபோக்காகவும் இருந்தால் நல்லா இருக்கும் பா.

டீவி யி ல் வரும் பெரும்பாலான் பட்டி மன்ற்ங்கள்ளீல் நகை சுவை மிகுந்து இருப்பதைக்காணலாம்.example சொல்லனும்ன திரு. சாலமன் பாப்பையா, திரு.திண்டுகல் ஐ.லியோனி இவர்கள் பட்டி மன்ற்த்தில் நகைசுவை உண்ர்வு அதிகம் இருப்பதை காணலாம் அதோடு இல்லாம்ல் கருத்துக்களூம் அதிகமாக இருக்கும்.

ஆகவே எந்த ஓரு விஷயத்தையும் நகை சுவை உண்ர்வோடு பேசும்போது நன்றாக இருக்கும். என் நினைக்கிறேன் நன்றி.

அன்புதோழி
ஜெயலக்‌ஷ்மிசுதர்சன்

ஜெயலஷ்மி, வணக்கம். நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிஞர்கள் முக்கியமான கருத்துகளைக்கூட நகைச்சுவையோடு வெளிப்படுத்துவதிலும் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர். ந்ம் கவிஞர் சுஹைனா கூறியது போல், அந்த தலைப்பு எனக்கும் மிகவும் பிடித்த தலைப்பு.. அதில் வாதாடும் போது என்னவெல்லாம் கருத்துக்கள் வரும், கவிதைகள் வரும்னு நினைத்துப் பார்த்தேன்... மிக ஆவலாய் தான் இருக்கிறது.
// எந்த ஓரு விஷயத்தையும் நகை சுவை உண்ர்வோடு பேசும்போது நன்றாக இருக்கும்.//
100 % மிகச் சரியான வார்த்தைகள்... மிக்க நன்றி...
அன்புடன் ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

காது குத்த சிறந்த வழி ஊசியா? கன் ஷாட்டா?

சுரேஜினி

கன் சாட் தான் .என் மகளுக்கு இரண்டு முறையும் குத்தி பார்த்தாச்சு.ஈசி கன் சாட்முறைதான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹன் ஷொட் என்றதும் பயந்திட்டீங்களோ? எனக்கு முதல்தரம் ஊசிபோல ஒன்று 2ம் தரம் கன் ஷொட்... மொத்தம் 4 ஓட்டைகள். மிகவும் சிறந்தது ஹன் ஷொட்.... ஹா.... ஹா.... ஹாஆ..... சுரேஜினி பட்டிமன்றம் தேவையில்லை நானும் ஆஸியாவும் பதில் சொல்லிட்டோம்..:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்