பட்டிமன்ற தலைப்புகள்

அனைவருக்கும் எனது வணக்கம். இந்த இழையினை அட்மின் சகோதரர் சொன்ன கருத்தின்படி ஆரம்பித்து வைக்கிறேன். இதில் யார் யாருக்கு என்ன தலைப்பு தோன்றுகிறதோ அதனை பதிவு செய்யலாம். யார் அடுத்த நடுவரோ அவர் இதில் இருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்யலாம்.

வாருங்கள். எல்லாரும் உங்களுக்கு தோன்றியதை பதிவு செய்யுங்கள்.

அன்புடன்
உமா

காவல் துறை அதிகாரிகள் சில சமயங்கள் தங்கள் கடமையை முறையாக நிறைவேற்றாமல் இருப்பதற்கு காரணம் அவர்களது அலட்சியமா? அல்லது அரசியல்வாதிகள் போடும் முட்டுக்கட்டையா?

ஆயிஸ்ரீ, மிகவும் அழகாக தலைப்புகள் சொல்லியிருக்கிரீர்கள். உக்காந்து யோசிச்சீங்களோ? உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

பெண்கள் அதிகம் பயப்படுவது,பல்லிகா?கரப்பான்பூச்சிகா?கணவருக்கு பயப்படறாங்களோ இல்லையோ கண்டிப்பா இதுல ஏதோ ஒன்னுக்கு பயப்படுவாங்க.:-)

பொருளாதாரப் பின்னடைவால் நன்மையா, தீமையா?

அன்புடன்

சீதாலஷ்மி

பாத்தீங்களோ சில தலைப்புகளுக்கு ஆசியா அக்கா,அதிரா,சுமஜ்லா போன்ற முக்கியமான உறுப்பினர்களெல்லாம் வாதாடவே தொடங்கீட்டினம்.
உண்மையா இதுகள் தான் சுவாரஸ்யமான தலைப்புகள்.நம்மளோட டென்ஷன்க்கு எல்லாம் ஆறுதலா இருக்கும்தைவிட அறுசுவையில் எல்லோருமே நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர்கள்.இந்தத்தலைப்புகளெல்லாம் நல்லா கொண்டு போவினம்.

சுரேஜினி

1) குடும்பத்தில் சிக்கன்மாக இருப்பவர்கள் ஆண்களா? பெண்களா?

2) திருமணங்கள் அதிகம் தோற்கப்படுவது காதல் திருமணத்திலா, பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்திலா?

3) திருமணத்திற்கு பின் பிள்ளைபேறை தள்ளிப்போடுவது அவசியம் தானா?

4) நாம் சினிமா பார்த்து கெடுகிறோமா, நம்மை பார்த்து அவர்கள் எடுக்கிறார்களா?

5) குழந்தைகளுக்கு பெயர் வைக்க எண்கனிதம் அவசியமா?

6) பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் இருப்பதாக கூறுவது உண்மையா, பொய்யா?

7) ஸ்டிக்கர் கோலங்கள் அவசியமா, இல்லையா?

8) play school பழக்கம் சரியா, தவறா?

சுபா

1) குடும்பத்தில் சிக்கன்மாக இருப்பவர்கள் ஆண்களா? பெண்களா?

2) திருமணங்கள் அதிகம் தோற்கப்படுவது காதல் திருமணத்திலா, பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்திலா?

3) திருமணத்திற்கு பின் பிள்ளைபேறை தள்ளிப்போடுவது அவசியம் தானா?

4) நாம் சினிமா பார்த்து கெடுகிறோமா, நம்மை பார்த்து அவர்கள் எடுக்கிறார்களா?

5) குழந்தைகளுக்கு பெயர் வைக்க எண்கனிதம் அவசியமா?

6) பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் இருப்பதாக கூறுவது உண்மையா, பொய்யா?

7) ஸ்டிக்கர் கோலங்கள் அவசியமா, இல்லையா?

8) play school பழக்கம் சரியா, தவறா?

சுபா

சில டாபிக்ஸ்:

இணைய தளத்தில் முகம் அறியா (சில சமயம் பெயர் கூட அறியா) தோழிகள் / தோழர்களுடன் உரையாடி பெறும் நட்பு vs. நிஜத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள் (வழியில், படிக்கும் / வேலை செய்யும் இடத்தில், உறவில்) உடன் உரையாடி பெறும் நட்பு.

இவற்றில் எது அதிக உண்மையானது / ஆரோக்கியமானது / தேவையாயிருப்பது (இதிலே ஏதாவது ஒன்றை நடுவர் தேர்ந்தெடுக்கலாம், அல்லது தனது விருப்பம் போல கேள்வியை தொடுக்கலாம்)

அல்லது இணையதள நட்பால் மனிதர்கள் அதிகம் அடைந்திருப்பது நன்மையா / தீமையா?

நட்பை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும்.. மொத்த இணையத்தையும் அதனால் கிடைக்கும் தகவல்களையும் - தனி டாபிக் மாதிரி வேணும்னா பேசலாம்

இறை நம்பிக்கையினால் இதுவரை (கடந்த காலங்களையும், அதாவது நினைவுக்கு வரும் வரலாற்று சம்பவங்களையும் கருத்தில் கொண்டு - அதனை பற்றி பேச தேவையில்லை) மனித இனம் அதிகமாக அடைந்திருப்பது என்ன - நன்மைகளா / தீமைகளா? (மற்ற இனங்களை கருத்தில் கொள்ள வேண்டாம் :) )

இறை உண்டு இல்லை என வாதிடாமல் இப்படி ஒரு நம்பிக்கையினால் அதிகம் பயன் அடைந்திருக்கிறோமா இல்லை இழந்திருக்கிறோமா என்று மட்டும் வாதிட வேண்டும்.. (இதனை தேர்ந்தெடுக்க நினைக்கும் பட்சத்தில் முன்கூட்டியே அட்மினிடம் அனுமதி பெற்றுக் கொள்ளவும்)

கொஞ்சம் ஜாலியான டாபிக்ஸ்:

இணைய தளத்தில் பெண்கள் பெயரில் உரையாடும் ஆண்கள் அதிகமா இல்லை ஆண்கள் பெயரில் உரையாடும் பெண்கள் அதிகமா??

காதலை கை விடுபவர்கள் யார் அதிகம் - பெண்களா இல்லை ஆண்களா??

இன்றைய (கவனிக்க: இன்றைய) காலகட்டத்தில் காதல் கை விடப் படுவதற்கு அதிக காரணமாயிருப்பவர் - காதலர்களா இல்லை பெற்றவர்கள் / மற்ற குடும்ப உறவுகள்?

இதில் காதல் என்பது திருமணத்துக்கு முந்தியதாக வருவதை மட்டும் வைத்துக் கொள்ளலாம். இதை நம் நாட்டின் நிலையை கொண்டு மட்டுமே வாதிடுதல் நன்று. மேலும் சுயமாக தேர்வு செய்பவர்களுடன் சேர்த்து பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணத்துக்கு காத்திருக்கும் காலத்தில் காதலிக்க ஆரம்பிக்கும் அரேஞ்ச்ட் மேரேஜ் காதலர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் :)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

இளம் தலைமுறையினரின் பயணம் சுதந்திரமான வளர்ச்சியா? கலாச்சார சீர்கேடா?

If God be with us what could be against us

If God be with us what could be against us

யாராது புது பட்டிமன்ற தலைப்புகள் தர விரும்பினால் குடுங்கப்பா... இனி வரும் பட்டிமன்றங்களுக்கு உதவும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கோடிகள் செலவு செய்து தமிழ் செம்மொழி மாநாடு தேவையா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்