பட்டிமன்ற தலைப்புகள்

அனைவருக்கும் எனது வணக்கம். இந்த இழையினை அட்மின் சகோதரர் சொன்ன கருத்தின்படி ஆரம்பித்து வைக்கிறேன். இதில் யார் யாருக்கு என்ன தலைப்பு தோன்றுகிறதோ அதனை பதிவு செய்யலாம். யார் அடுத்த நடுவரோ அவர் இதில் இருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்யலாம்.

வாருங்கள். எல்லாரும் உங்களுக்கு தோன்றியதை பதிவு செய்யுங்கள்.

அன்புடன்
உமா

1.தமிழில் கற்றால் வேலைவாய்ப்பு திட்டம் சரியா?தவறா?
2.நாகரீகம் எனும் போர்வையில் பெண்களின் ஆடைகுறைப்பு சரியா?தவறா?
3.ஆண்களுக்கு பெண்கள் நிகரானவர்களா?இல்லையா?
4.நடிப்பில் அதிகம் கவர்ந்தது கமலா?சிவாஜியா?
5.திருமணங்களில் ஆடம்பரம் அவசியமா?இல்லையா?
6.நம்நாட்டில் மத ஒற்றுமை இருக்கிறதா?இல்லையா?
7.காதலர்தினம் அவசியமானதா?இல்லையா?
8.சிறந்தது எது?நட்பா?காதலா?
9.வரதட்சணைக்கு காரணம் ஆண்களா?அவர்களின் பெற்றோர்களா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

kadaisi kalathil periyavarkalai kappathu ponna? paiyana?

நண்பர்களால் விளைவது நன்மையா? தீமையா?

திருமணத்திற்கு பிறகு பெண்கள் வேலைக்கு செல்வது சிறந்ததா? திருமணத்திற்கு பிறகு வேலையை விட்டு விட்டு முழு நேரமாக குடும்பத்தையே கவனிப்பதா?

அன்புடன்
பவித்ரா

விதி என்பது உண்மையா? விதியை மதியால் வெல்ல முடியுமா முடியாதா?

இளைய சமுதாயம் சமூகத்தால் சீரழிக்கப்படுகிறார்களா? இல்லை இவர்களால் சமுதாயம் சீரழிகிறதா?

ஏட்டு கல்வி - அனுபவ கல்வி.. எது வழ்க்கைக்கு ஏற்றது?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனக்கு தோன்றிய சில பட்டிமன்றத் தலைப்புகள்

1. வீட்டிற்கு வரும் நம் விருந்தாளிகளால் நமக்கு சந்தோஷமா? சங்கடமா?
2. வெளியில் சாப்பிட ஏற்ற இடம் ஹோட்டலா? ஃபாஸ்ட் புட்டா
3. கருமிகள் ஆண்களா? பெண்களா?
4. சிக்கனமாக குடும்பத்தை நடத்துவது ஆண்களா? பெண்களா?
5. முன்கோபம் அதிகம் வருவது ஆண்களுக்கா?பெண்களுக்கா?
6. முக்கனிகளில் சிறந்தது மா-வா? பலாவா?வாழையா?
7. சமையலில் அதிக சுவையுடையது அம்மாவின் சமையலா?
மனைவியின் சமையலா?
8. திருமணமாகி புகுந்த வீடு செல்லும் பெண்ணுக்கு தாய் சொல்லித் தருவது
நல்ல அறிவுரைகளையா? தீய அறிவுரைகளையா?
9. திருமணம் ஆனவுடன் சுதந்திரம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா?பெண்களுக்கா?
10.பேரக் குழந்தைகளின் மேல் அதிக அன்பு செலுத்துவது அப்பா வழி
உறவுகளா? அம்மா வழி உறவுகளா?
11. வருங்கால கணவர் எப்படி இருக்கவேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்? பணம் படைத்தவரா?குணம் படைத்தவரா
12. இன்றைய காதல் மனதை பார்த்து வருகிறதா? வசதியை பார்த்து வருகிறதா?
13. கணவர் மேல் அதிக பக்தி செலுத்தியவர்கள் அந்த கால பெண்களா? இந்த காலப் பெண்களா?
14. இந்த கால கணவர்கள் ராமனா?ராவணனா?
15. குழந்தைகளிடம் அதிக பொறுப்புடனும், அக்கறையுடனும் இருப்பவர் தாயா? தந்தையா?

இந்த தலைப்பு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தோழிகளே
உங்களுக்கு தோன்றும் பட்டி தலைப்புகளை இங்கே அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
பவித்ரா

”சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே” - இப்போதுள்ள வாழ்க்கையில் இது சரியா? அல்லது தாயின் பங்கு அதிகமாக உள்ளதா?

பிச்சையிடுவதால் சமூகத்தை வளர்க்கிறோமா? சீரழிக்கிறோமா?

இப்போதுள்ள பெரும்பாலான NGO க்கள் தொண்டு செய்கின்றனவா? அல்லது தொழில் செய்கின்றனவா?

அரசுத்துறையில் வயது மூப்பு முறை வேலைவாய்ப்பு நல்லதா? தகுதி (தேர்வு) அடிப்படை வேலைவாய்ப்பு நல்லதா?

அன்புடன்,
இஷானி

இன்றைய பட்டி மன்றங்கள் பொழுதுபோக்கனவையா இல்லை பயனளிப்பவையா?
(ரொம்ப ஓவராக உள்ளதோ! ;))

தொலைக்காட்சிகளில் தொலைபேசி உரையாடல் மூலம் பாடல் ஒளிபரப்புவது தேவையா தேவை இல்லையா? ஏன்?

அமெக்காவை அடியொற்றிய கலாச்சாரம் நல்லதா? நல்லது இல்லையா? (அ)
இந்தியாவின் சுய அடையாளம் காக்கப் படுகிறதா? மறக்கப் படுகிறதா?

இணைய வரவால் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா?

”காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு” - இது இன்றைய காலக்கட்டத்திற்கு சரியா? தவறா?

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்