எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

தேதி: December 26, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

நமது அறுசுவை நேயர்களுக்காக <b> திருமதி. விஜிசத்யா </b> அவர்கள், திருமதி. செந்தமிழ் செல்வி அவர்களின் குறிப்பினை பார்த்து செய்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இது. இவர் அறுசுவை நேயர்களுக்காக நிறைய குறிப்புகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிஞ்சு கத்திரிக்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தேங்காய் - அரை மூடி
கசகசா - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 8
பூண்டு - 4 பல்
சீரகம் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி - ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு
கறிவேப்பிலை - சிறிது
வெல்லம் - சிறிது
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி


 

கத்திரிக்காயை பாதி காம்பை மட்டும் நறுக்கி விட்டு நான்காக பிளந்து தண்ணீரில் போட்டு வைக்கவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய், சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதக்கியவை ஆறியதும் அதனுடன் தேங்காய் துருவல், கசகசா, தனியா தூள் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்து எடுத்த விழுதை நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காயில் வைத்து நிரப்பவும். மீதமுள்ள விழுதை புளிக்கரைசலுடன் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, பூண்டு, கறிவேப்பிலை தாளித்து கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.
வதக்கியதும் புளிக்கரைசலை ஊற்றி மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். கத்திரிக்காய் வெந்து குழம்பு கெட்டியாக ஆனதும் இறக்கவும். சுவையான கத்திரிக்காய் குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எண்ணைக்கத்திரிக்காய் என்றாலே எனக்கு அப்படி ஒரு grace.செல்விக்காவிற்கும் நன்றி.நானும் சில சமயம் முழுதாக stuff செய்து சமைப்பதுண்டு.விஜி பார்க்கவே ருசியாக தெரிகிறது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆகா விஜி,
கறியின் நிறத்தைப் பார்த்ததுமே, உடனேயே சாப்பிடவேணும் என்ற ஆசை வருகிறது. சூப்பராகச் செய்திருக்கிறீங்க, சுவையும் நிட்சயமாக சூப்பராக இருக்குமென்று நம்புகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு விஜி,
ரொம்ப சிரத்தையா செய்தது தெரியுது படத்தில். நல்லா பண்னி இருக்கே! அன்பான பாராட்டுகள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

very tasty........ thank you so much 4 a good recipie.....

விஜி எனக்கிந்த கத்தரிக்காய் கிடைப்பதில்லை, கண்ணுக்குள் எண்ணெய் விட்டுத் தேடிக்கொண்டிருந்தேன், தற்செயலாகக் கிடைத்தது செய்தேன், மிகவும் சூப்பர். இனிமேல் கிடைக்கும்போதெல்லாம் செய்வேன். படம் அட்மினுக்கு அனுப்புகிறேன் வந்ததும் பார்த்துச் சொல்லுங்கள்.

அருமையான குறிப்பை செல்வியக்கா கொடுக்க, அழகாக அதை விஜி செய்துகாட்ட, மிகவும் சுவையாக நான் செய்துவிட்டேன். இருவருக்கும் மிக்க நன்றி.

கூட்டாஞ்சோறில் பார்த்திருந்தால் செய்யத் தூண்டியிருக்குமோ தெரியவில்லை, படத்தைப் பார்த்ததும்தான் ஆவல் அதிகமானது எனக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

i tried it . it was really superb. sorry i dont know how to type in tamil

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பின் படம்

<img src="files/pictures/aa210.jpg" alt="picture" />

செய்து சாப்பிட்ருக்கிங்க, ம்..ம். எனக்கும் ரொம்ப பிடிக்கும். அடிக்கடி செய்வேன், எங்க வீட்டில் எல்லாருக்கும் பிடித்த கறி. நன்றி அதிரா.நன்றி செல்வி அக்கா.

னான் இந்த தலதில் புதிதாக இனைத்துள்ளேன். ணேட்ரு இந்த குழம்பு செய்தன், மிகவும் நன்ராக இருந்தது.மிக்க நன்றி.....

life is beautiful

life is beautiful

அன்பு ஆஷா,
தமிழிலேயே பதிவு போட வேண்டுமென்ற உங்கள் முயற்சிக்கு பராட்டுக்கள்.

உங்கள் நன்றியில் நான் பாதியை எடுத்துக் கொண்டு பாதியை விஜிக்கு கொடுத்து விடுகிறேன். நன்றி.
அன்புட்ன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நலமா?தளத்தில் பார்த்து நாளாகுது .புதிதாக இப்ப குறிப்பு கொடுக்கலையா?

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆசியா,
நலமா? நான் நலமே.
ம்ம்ம்.... கொஞ்சம் பிசியாக இருக்கேன். சரியான மூடும் இல்லை.
புதிய குறிப்புகள் இருக்கு. கொடுக்க நேரம் தான் இல்லை. முன்னைப் போல் ரொம்ப நேரம் விழித்திருக்க முடியலை.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.