அடுமனை என்றால் என்ன?

அது என்ன அடுமனை? பழக்கத்தில் அதிகம் இல்லாத தமிழ் வார்த்தைகளை கண்டிப்பாய் பயன்படுத்தியே ஆக வேண்டுமா?

பேக்கரி (Bakery) என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தைதான் அடுமனை என்பதாகும். பேக்கரி போன்ற பல ஆங்கிலச் சொற்கள் இன்று தமிழ் சொற்கள் போல் மாறி, வழக்கத்தில் உள்ளதால், உண்மையான தமிழ் வார்த்தைகளை பலரும் அறிந்து கொள்ள இயலாமலே போய்விட்டது. நல்ல தமிழில் அனைத்துத் தகவல்களையும் தர வேண்டும் என்பது அறுசுவையின் நோக்கமாக இருந்தாலும், நடைமுறையில் அது சாத்தியமாக இல்லை. எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கின்றோம். ஆரம்பத்தில் வித்தியாசமாகத் தெரியும் வார்த்தைகள், பழக்கம் ஆகிவிட்டால் வித்தியாசமாகத் தெரியாது.

இந்தப் பிரிவின் கீழ் அடுமனைத் தயாரிப்பு பொருட்கள் (Bakery products)அனைத்தினைப் பற்றியும் கலந்தாய்வு செய்யலாம். உங்களுக்கு தோன்றும் சந்தேகங்களை, கேள்விகளை இவ்விடம் கேளுங்கள். பதில் அறிந்தவர்கள் பதிலுரைக்கலாம். அறுசுவை நிர்வாகமும், சிறந்த அடுமனை வல்லுனர்களிடம் இருந்து பதில்களைப் பெற்று இவ்விடம் வெளியிடும்.

ஆப்பிள் தமிழ் பெயர் என்ன?

மேலும் சில பதிவுகள்