புரோக்கலி ரேப் பொரியல்(Brocoli Rabe)

தேதி: December 30, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புரோக்கலி ரேப் - 1 கட்டு
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - தாளிக்க
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி


 

முதலில் வெங்காயம் மற்றும் புரோக்கலி ரேப்பை மிகவும் பொடிதாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டினை நசுக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.
அதன் பின் உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
இப்பொழுது நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய உடன் புரோக்கலி ரேப்பை உப்புடன் சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் ஊற்ற வேண்டாம். ஒரு தட்டு போட்டு முடி 6 - 10 நிமிடம் வேகவிடவும்.
இப்பொழுது சுவையான, சத்தான புரோக்கலி ரேப் பொரியல் ரெடி.


புரோக்கலி ரேப் என்பது புரோக்கலிக்கீரை.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் கீதா ஆச்சல், இதை நான் எப்போதும் சும்மா saute செய்து சாப்பிடுவேன். இப்படி கீரை பொரியல் போல செய்வதும் மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி உங்களுக்கு.

மிகவும் நன்றி வின்னி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. வானதி அவர்கள் தயாரித்த புரோக்கலி ரேப் பொரியலின் படம்

<img src="files/pictures/aa156.jpg" alt="picture" />

வானதி மேடம்,
படம் பார்க்கும் பொழுது மிகவும் நன்றாக இருக்கின்றது. சூப்பர்.
படத்தினை அனுப்பி வைத்தற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்