வயிறு மற்றும் உடல் எடை குறைய வழி சொல்லுங்கள் சகோதரிகளே பிளீஸ்!!!

அன்புள்ள சகோதரிகளுக்கு வணக்கம்.எனக்கு பிரசவமாகி 2 வருடங்கள் ஆகிறது.எனது மகன் பெயர் ராகுல்.எனக்கு சிசேரியன் மூலமாகத்தன் குழந்தை பிறந்தது.இப்பொழுது வயிறு பெரிதாக உள்ளது.உடம்பும் எடை போட ஆரம்பித்துவிட்டது.கன்னமும் பெரிதாகி விட்டது.என்ன உடற்பயிற்சி செய்வது என்று சொல்லுங்களேன் பிளீஸ்.எனக்கு சிசேரியன் செய்துள்ளதால் எதை செய்வது என்று தெரியவில்லை.தயவு செய்து பதில் அனுப்புங்கள்

கட்டுப்பாட்டான உணவுமுறை , வாக்கிங் தினமும் 1 மணி நேரம் போய் வாங்க,காலை மாலை என்று கூட போகலாம்.தினமும் மைல்டு உடற்பயிற்சி,குனிந்து நிமிர்தல் போன்றவை செய்து வாங்க.வீட்டு வேலையை முடிந்தளவு நாமே செய்து பழகிகொள்ளவேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்களோட கருத்துக்கு ரொம்ப நன்றி.நான் தினமும் செய்து பார்க்கிறேன்.நீங்க எங்க வசிக்கிறீங்கன்னு நா தெரிஞ்சுக்கலாமா?

வசிப்பது u.a.e.மேடம் எல்லாம் வேண்டாமே.follow பண்ணுவது ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும்,சின்ன வயதில் தான் இலகுவாக குறைக்க முடியும்,இப்போ என்னால் அவ்வளவா முடியலை.ஆனால் வாக்கிங் மட்டும் மறந்து விடாதீர்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மிக்க நன்றி

same problem

i just gain my weight nearly 12kgs within ten months of my marriage.give me your valuable suggestions to lose my weight.

hai indirasekar
if u r pregnant just ignore my suggestion
if not drink lot of water it will help to reduce wt (more than 5litres perday, do abdominal exercise and bicycle exercise.eat more high fibre vegetables cut down ur rice add some lentils and sprouts. walk more and if u r planning for pregnancy dont do abdominal exercise and bicycle exercise and check ur thyroid level too. take care

அன்புள்ள தோழிகளே,
இன்றைய காலக் கட்டத்தில் ஓபிசிட்டி என்பது தலையாய பிரச்சினையாக உள்ளது. இதிலிருந்து தப்புவதற்கு என் டாக்டர் சில வழிமுறைகளைக் கூறினார்.
அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் அனைவரும் நல்ல பலனைப் பெறலாம்.
கோடை காலமோ குளிர் காலமோ எதுவாக இருந்தாலும் காலை 5 .30 இலிருந்து 6 மணிக்குள் எழுந்துவிட வேண்டும்.
பல் துலக்கிய உடன் இரண்டு டம்பளர் வெந்நீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் மலச் சிக்கலைத் தடுக்கலாம்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு கிரீன் டீ சர்க்கரை இல்லாமல் குடிக்க வேண்டும். (சர்க்கரை இல்லாமல் கிரீன் டீ குடிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஆகவே அதில் சிறிது எலுமிச்சம் பழ சாறு, இஞ்சி, மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.
அதன் பிறகு குறைந்தது அரை மணிநேரமாவது உடற் பயிற்சி (floor exercise)செய்ய வேண்டும். பிறகு மீண்டும் இரண்டு டம்பளர் வெந்நீர் குடிக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து, கார்ன் பிளேக்ஸ் அல்லது ஓட்ஸ் கஞ்சி (ஓட்ஸ் உப்புமா அல்லது மோர்க்களி என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.)
காலை சிற்றுண்டியுடன் ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒன்றரை மணி நேரம் கழித்து, வெஜிடபிள் சாலட் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் ஏதாவது ஜூஸ் அல்லது ஒரு டம்பளர் வெந்நீர் குடிக்கவும்.
மதியம் சாப்பாட்டிற்கு ஐந்து நிமிடங்கள் முன்பு இரண்டு டம்பளர் வெந்நீர் மீண்டும் குடிக்கவும்.
சாப்பாட்டில் கார்போஹைட்ரெட் மற்றும் கொழுப்பு குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். சாப்பாட்டுடன் வெஜிடபிள் சாலட் போன்ற பச்சை காய்களை சாப்பிட வேண்டாம். வேக வைத்த காய்கறிகளை மட்டுமே சாப்பாட்டுடன் எடுத்துக் கொள்ளவும். இதன் மூலம் அஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கலாம்.
சாப்பிட்ட பின் தவறாமல் போதிய அளவு தண்ணீர் குடிக்கவும். வெயிட் குறைக்க நினைப்பவர்கள், மதியம் சாப்பிட்ட உடன் அரை மணி நேரம் ஒரு வாக் செய்யலாம். அது வெளியிலோ அல்லது ட்ரெட் மில் எதுவாகவும் இருக்கலாம். இதன் மூலம் தொப்பை விழாமல் தடுக்கலாம்.
மாலை நொறுக்கு தீனிகளை கட்டாயமாக நிறுத்திவிடவும். அதற்கு பதிலாக ஏதாவது ப்ரூட் சாலட் அல்லது ட்ரை ப்ரூட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். அத்துடன் லைட்டாக ஒரு காபியோ அல்லது டீயோ மிதமான சர்க்கரை சேர்த்து எடுத்துக் கொள்ளவும். பிறகு குழந்தைகளுடன் ஓடி விளையாட வேண்டும். இது நம் மனதை இளமையாக வைத்துக் கொள்ள உதவும். குழந்தைகளுடன் விளையாட முடியாவிட்டால், ஸ்கிப்பிங் நூறு முதல் முன்னூறு வரை குதிக்கவும். இது நம் உடலில் ரத்த ஓட்டத்தை நன்கு சுறு சுருப்பாக்கும்.
இரவு உணவிற்கு. காலை சிற்றுண்டி போல் ஓட்ஸ் கஞ்சியோ, ரொட்டியோ அல்லது ஓட்ஸ் உப்புமாவோ எடுத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட உடன் தவறாமல் குறைந்தது இரண்டு தம்ப்லராவது வெந்நீர் குடிக்க வேண்டும். சாப்பிட்ட உடன் முடிந்தால் மீண்டும் ஒரு சிறிய வாக் போகலாம். அல்லது வீட்டு ஹாலிலேயே உலாவலாம். எப்படி இருந்தாலும் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பே உணவை முடித்துவிட வேண்டும். படுக்கச் செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்பளர் கொழுப்பு நீக்கப் பட்ட பால் அருந்தவும்.
அத்துடன் சோபா , நாற்காலிகளில் அல்லாமல் தரையில் அமரப் பழகவும்.
லிப்ட்டைப் பயன் படுத்த வேண்டாம். மதியம் தூங்கவோ அல்லது டி வி பார்க்கவோ வேண்டாம்.

இந்த டிப்செல்லாம் ஓபிசிட்டி உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், பிரசவத்தினால் ஏற்பட்ட உடல் பருமனுக்கும் பொருந்தும்ஆரோக்யமான வாழ்விற்கு என் டாக்டர் சொன்ன வழிமுறைகள் இவை.

Nice Tips.
But wl b hard to follow

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

Dear mam,
i have same above mentioned problem,pls advise to me for solve that problem....

மேலும் சில பதிவுகள்