தேதி: December 31, 2008
பரிமாறும் அளவு: 3
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
குடை மிளகாய் - 2
பாஸ்மதி அரிசி - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - 5 இலை
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் (அல்லது) நெய் - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
முதலில் குடை மிளகாயை விதைகளை நீக்கி பெரிய பெரிய துண்டுகாளாக வெட்டி கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை 2 டம்ளர் தண்ணீருடன் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை போட்டு நன்றாக வறுக்கவும்.
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய், கறிவேப்பில்லை மற்றும் மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.
வறுத்து வைத்துள்ள பொருட்களை மிக்ஸியில் கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
குடைமிளகாய் பாதி வெந்ததும் அதில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி வேக விடவும்.
கடைசியில் தேங்காய் துருவல் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கிளறவும். அதன் பின் பாஸ்மதி சாதத்தை இத்துடன் சேர்த்து நன்றாக கிளறி சூடாக பரிமாறவும்.
இந்த கேப்ஸிகம் ரைஸ் உடன் சிப்ஸ் அல்லது ஏதேனும் வறுவலுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
Comments
capsicum rice
i cooked this capsicum rice , it was delicious, yennoda husband saptu parthu parati nanga, adhil takkaliyum serthhu araithal innum nanraga irukum yenru solnanga, thappaga yeduthu kollla vendan 2nd time nan seithu parthen , taste innum thukala irunthaathu, THANKS FOR GIVING THIS RECIPE TO ARUSUVAI.COM
கீதாச்சல்
கீதாச்சல்... உங்களுடைய இந்த குறிப்பும் என்னுடைய பார்ட்டி மெனுவில் இருந்தது. வித்தியாசமான சுவை. ரொம்ப பிடிச்சுது. மிக்க நன்றி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கப்ஸிகம் ரைஸ்!
ஹலோ கீதா ஆச்சல்,
இந்த ரைஸ் இன்று லன்ச்க்கு செய்திருந்தேன். உருளைகிழங்கு வறுவலுடன் சும்மா சூப்பர் காம்பினேஷனா இருந்தது. சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க கீதா, நான்கூட அடிக்கடி ஆபீஸ்க்கு லன்ச் கட்ட செய்யும் ஒரு ஐயிட்டம் இது... செய்முறையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். நான் இந்த பவுடரை கொஞ்சம் எக்ஸ்ராவாகவே பொடித்து ஏர் டைட் கன்டெய்னரில் போட்டு பிரிட்ஜ்-ல் வைத்து உபயோகிப்பேன். : )
நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
கப்ஸிகம் ரைஸ்
மிகவும் நன்றி ஸ்ரீ.
எனக்கும் இந்த ரைஸ் மிகவும் பிடிக்கும்..இங்கு கப்ஸிகம் நிறைய கிடைப்பதால் இப்படி தான் அடிக்கடி செய்வேன்…அதிலும் இதில் செய்யும் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்…செய்து பாருங்கள்..
பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்
hai suki
lakshmi ravindran
to day i saw your name everynotes, today you make any party, just for fun
lakshmi ravindran
ஹாய்
ஹாய் இன்னிக்கு லஞ்சுக்கு Capciscum rice தான். உங்க குறிப்பு பார்த்து சிரகம் சேர்த்தேன், நன்றாக இருந்தது.
ArchuGiri
Archana
Capciscum rice
மிகவும் நன்றி அர்சனா.
ஆமாம் சீக்கிரத்தில் செய்துவிட முடியும். நமக்கு காய்கறியினை சேர்த்து கொண்ட்து மாதிரி இருக்கும்.
பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்
காப்சிகம் ரைஸ்
கீதா இன்று உங்க காப்சிகம் சாதம் செய்தேன்.குடை மிளகாய் உபயோகித்து சாதம் இப்பொழுது தான் முதன் முறை செய்கிறேன்.மசாலா, குருமா, ஃபிரைட் ரைஸ், நூடுல்ஸ் இதில் மட்டும் தான் சேர்ப்பேன்.எப்படி இருக்குமோனு ஒரு யோசனை இருந்தது.ஆனா மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் எளிதாக உள்ளது. உங்க குறிப்புகள் பலவும் எளிய முறையில் செய்யும் விதமாக உள்ளது.மிகவும் உதவியா இருக்கு.வாழ்த்துக்கள்.
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
காப்ஸிகம் ரைஸ்
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி திவ்யா.எனக்கு இந்த கப்ஸிகம் ரைஸ் மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் உருளைகிழங்கு வறுவல் அல்லது சிப்ஸுடன் சாப்பிட சுவையோ சுவை.
இதே போல இதில் சட்னியும் செய்யலாம். என்னுடைய குறிப்பில் இருக்கின்றது. முடிந்தால் அதனையும் செய்து பாருங்கள். சுவையாக இருக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்
lakshmi ravindran
Hi Lakshmi,
No party in my Home.
Just look at this link.U will Understand
http://www.arusuvai.com/tamil/forum/no/11840
Regards,
Geetha Achal