சுக்கினி சாம்பார்(zucinni)

தேதி: December 31, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுக்கினி - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
துவரம் பருப்பு - 1/2 கப்
கடுகு - தாளிக்க
சீரகம் - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு


 

முதலில் துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
சுக்கினியை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள். வெங்காயம் மற்றும் தக்காளியையும் வெட்டி கொள்ளவும்.
ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் போடவும்.
இதன் பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கிய உடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
இப்பொழுது நாம் வேக வைத்துள்ள துவரம் பருப்புடன் சிறிது தண்ணீர் கலந்து இதில் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்த பின்னர் அதில் சுக்கினியை சேர்த்து வேகவிடவும். 10 - 12 நிமிடம் கழித்து சுக்கினி நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லித் தழையை தூவவும். இப்பொழுது சுவையான சுக்கினி சாம்பார் ரெடி.
இதனை சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


சுக்கினி சீக்கிரமாக வெந்துவிடும் என்பதால் கடைசியில் சேர்க்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Plz tell me what is zucinni in tamil ? suraikkai a ?

Valha Vaiyaham ! Valha Valamudan !

ஹாய் கீதா ஆச்சல்,
நேற்று இரவு டின்னர் - சுக்கினி சாம்பாரும், சேப்பங்கிழங்கு ஃபிரையும். சும்மா சூப்பர் காம்பினேஷன் போங்க. நான் இந்த காயில் எப்பவும் பச்சடிதான் செய்வது வழக்கம். இனி சாம்பாரும் வைக்கலாம் போலருக்கே! நன்றாக இருந்தது. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிகவும் நன்றி ஸ்ரீ.
அன்புடன்,
கீதா ஆச்சல்