மாஸ்மலோ

தேதி: January 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சீனி - 375 கிராம்
தண்ணீர் - 2 கப்
ஜெலற்றீன் - 1 மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
கலர் பவுடர் - சிறிதளவு
ஐஸிங்சுகர் - 2 மேசைக்கரண்டி


 

2கப் தண்ணீரில் சீனியைப் போட்டு கையில் ஒட்டும் பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.
ஒரு கப் சுடுநீரில் ஜெலற்றீனை சேர்த்து கரைக்க வேண்டும்.
இரண்டையும் சேர்த்து நன்றாக அடிக்க வேண்டும்.
பின்பு வெனிலா, கலர் பவுடரையும் சேர்த்து அடிக்க வேண்டும்.
அடித்து எடுத்து விடும் போது மடிப்பு மடிப்பாக வந்தால் பதம் சரியாக இருக்கும்.
ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் ஊற்ற வேண்டும்.
அதன் மேல் ஐஸிங் சுகர் தூவி ஃப்ரிட்ஜில் 2 மணித்தியாலம் வைக்கவும்.
பின்பு வெளியில் எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.


விரும்பினால் இரண்டுகலர் சேர்த்து செய்யலாம்.பாதிக் கலவைக்கு ஒரு கலரும் மீதிக்கலவைக்கு வேறு கலரும் சேர்த்து செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்