HI UK FRIENDS

ஹாய், நான்UK இல் வாசிக்கிறேன்.. எனக்கு நெறைய தோழிகள் வேணும்னு ஆசை...UKதோழிகள் சங்கம் அமைக்க வாரிங்களா

ஹாய் விஜி நான் UK Leicester ல் இருக்கிறேன். எப்படி இருக்கீங்க?இன்னும் UK தோழிகள் வருவார்கள் காத்திருங்கள் .

ஹாய், நான் நல்லா இருக்கிறேன்....நீங்க எப்படி இருக்கிங்க.....நான் HAYS இருக்கேன்

nanriyudan

Hallo Friends,
நானும் UK யில் தான் இருக்கிறேன். (2004 ஆம் ஆண்டு) ஆறு மாதங்கள் நானும் Hayes இல் தான் வசித்தேன்.

ஹலோ, Ocean,எனக்கு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி........தற்போது நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?

nanriyudan

நாங்கள் (கணவரும் நானும்) Nottingham இல் வசிக்கின்றோம். என்னவர் இங்கு கடை வைத்திருக்கின்றார். 2005 நடுப்பகுதியிலிருந்து நாங்கள் இங்கு இருக்கின்றோம்.

ஹலோ, மிக்க மகிழ்ச்சி ...உங்க பதில் பார்த்து.....எப்படி இருக்கீங்க.....இங்க ஓரே பனி பொழிவு...அங்க எப்படி இருக்கு?

nanriyudan

நன்றாக இருக்கின்றேன். நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்? இங்கும் சாதுவாக பனி உள்ளது, ஆனால் குளிரைத்தான் தாங்க முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே உடம்பெல்லாம் குளிரால் நடுங்குகின்றது.
நீங்கள் வேலைக்குப் போகுறீங்களா??

ஹாய் விஜி நலமா?நான் பக்கிங்காம்ஷேரில் செஸ்காமில் இருக்கிறேன்.நீங்க எத்தனை வருடமாக லண்டனில் இருக்கீறீர்கள்?இந்தியாவில் எந்த ஊர்?இங்கு வேலைக்கு போகிறீர்களா அல்லது வீட்டில் இருக்கிறீர்களா?
ஹாய் ஒசன் நலமா?நேற்று எங்க பகுதியிலும் நல்ல பனிபொழிவு இருந்தது.என்னவர் ரோடெல்லாம் ஒரே ஜஸ்ஸாக இருந்ததால் கார் ஓட்டமுடியாது என்று வேலைக்கு லீவ் சொல்லி விட்டார் இன்றும் காலையில் அப்படி தான் இருந்தது எத்தனை நாள் தான் லீவ் எடுப்பது என்று எப்படியோ வேலைக்கு போய்விட்டார்.உங்க பெயர் என்ன விருப்பம் இருந்தால் சொல்லவும்.
அன்புடன் பிரதீபா

நலம்...உங்கள் பதில் கண்டு சந்தோஷ்சம்......நான் கர்ப்பமாக உள்ளேன்...(6 வாரம்)

வேலைக்கு செல்லவில்லை...இங்கு குளிர் கடுமையாக உள்ளது..

nanriyudan

ஹாய் விஜி ரொம்ப சந்தோசம் உடம்பை நல்லா பாத்துக்கங்க.உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாலும் இங்க கேளுங்க நிறைய தோழிகள் அறிவுரை சொல்லுவார்கள்
அன்புடன் பிரதீபா

மேலும் சில பதிவுகள்