ரிக்கோடா பால்கோவா

தேதி: January 2, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரிக்கோடா சீஸ் (Ricotta cheese) - 1 கப்
பால் பவுடர் - 1 கப்
கண்டென்ஸ்டு மில்க்(Condensed Milk) - 1/2 கப்
ஏலக்காய் - 2
பட்டர் (அல்லது) நெய் - 2 தேக்கரண்டி


 

ஏலக்காயை பொடியாக தட்டி வைத்து கொள்ளவும்
முதலில் பட்டரை மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு 1 நிமிடம் வைக்கவும்.
பட்டர் உருகிய பின் அதில் ரிக்கோடா சீஸ், பால் பவுடர் மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கிளறவும்.
இதனை 2 நிமிடம் மைக்ரோவேவில் வைக்கவும்.
பிறகு எடுத்து நன்றாக கலக்கி திரும்பவும் 3 நிமிடம் வைக்கவும்.
அதன் பிறகு மைக்ரோவேவில் இருந்து எடுத்து ஏலக்காய் சேர்த்து கிளறவும்.
இப்பொழுது திரும்பவும் மைக்ரோவேவில் 2 நிமிடம் வைக்கவும்.
சுவையான ரிக்கோடா பால்கோவா ரெடி.


மைக்ரோவேவின் திறனுக்கு ஏற்ப நேரத்தினை கூட்டியோ அல்லது குறைத்தோ கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹலோ கீதா ஆச்சல்,
உங்க ரிக்கோட்டா பால்கோவா செய்தேன். ரொம்ப சுவையாக இருந்தது. எந்த ஸ்வீட்டும் அவ்வளவா விரும்பி சாப்பிடாத என் குட்டி பையனுக்கு இது பிடித்திருந்தது சந்தோஷமா இருந்தது. குறிப்புக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிகவும் நன்றி… சுஸ்ரீ.
மிகவும் சந்தோசம் பா…குட்டி பையன் விரும்பி சாப்பிட்டானா…எங்கள் வீட்டிலும் அக்ஷ்தாவும் இதனை விரும்பி சாப்பிடுவாள்…இதனை அவளுக்காக அடிக்கடி செய்வேன்.
பின்னுடன் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

உங்கள் பால்கோவா ரெசிபி ஐ செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது.u r really great. thanks a lot for ur wonderful receipe

சுகி,
மிகவும் நன்றி .
இப்பொழுது தான் பா பின்னுட்டம் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி.
அன்புடன்,
கீதா ஆச்சல்