தேதி: January 4, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மில்க்மெயிட் - 1 டின்
சீனி - 1 டின்
தண்ணீர் - 1 டின்
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
மில்க்மெயிட்டையும், சீனி, தண்ணீர் சேர்த்து காய்ச்ச வேண்டும்.
கலவை திரண்டு வரும் போது வெனிலா எசன்ஸை சேர்க்கவும்.
ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் கொட்டி அழுத்த வேண்டும்.
மெல்லிய சூடாக இருக்கும் போது சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அடுப்பைக் குறைத்து வைத்து காய்ச்ச வேண்டும். அப்போது தான் அடிப்பிடிக்காமல் இருக்கும். அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
Comments
hii
hii pa...இன்று இதை செய்து பார்த்தேன்..சரியாவே வரலை...கஷ்டமாக பொச்சு....மில்க் மைட் பால் எல்லாம் கலவையும் வெரும் தன்னியாகவே இருந்தது..ஏன் என்று சொல்லுங்கலேன்
safinamubarak
வத்ஸ்
வத்ஸ் இவ்ளோ இனிப்பா சாப்பிட பயமா இருந்ததால பாதி அளவுகள்தான் எடுத்துச்செய்தனான்.ஆனாலும் விருப்பமா இருக்கிறதால மிச்சத்திலயும் செய்யப்போறன்.சூப்பர் டேஸ்ட் நன்றி வத்ஸ்
சுரேஜினி
சுரேஜினி
சுரேஜினி மிக்க நன்றி. இது இனிப்பு அதிகம் தான் பார்த்துச் சாப்பிடுங்கள். உங்களுக்கு இனிப்பு விருப்பமா அல்லது புளிப்பு விருப்பமா?
நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"