வெண்டைக்காய் மோர் குழம்பு

தேதி: January 4, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

வெண்டைக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 2 பல்
இஞ்சி - 1 துண்டு
அரைக்க தேவையானவை:
புளித்த தயிர் - 2 கப்
பச்சரிசி - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
சீரகம் - 1 தேக்கரண்டி
கருவேப்பில்லை - 5 இலை
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயம் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி


 

முதலில் பச்சரிசி மற்றும் துவரம் பருப்பினை 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
பின் ஊற வைத்துள்ள பச்சரிசி, துவரம் பருப்பு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, வெண்டைக்காயை வெட்டி வைக்கவும்.
பூண்டினை நசுக்கி வைக்கவும். இஞ்சினை நீளமாக அரிந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை வதக்கி வைக்கவும்.
பின் வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து பின் சீரகம் போடவும். அதன் பின் வெங்காயம், கறிவேப்பில்லை மற்றும் தக்காளி போட்டு வதக்கவும்.
வெங்காயம், தக்காளி வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மோரினை இதில் ஊற்றி வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயையும் சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விடவும்.
கொதி வந்தவுடன் பூண்டு, இஞ்சி, பெருங்காயம் தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் அடுப்பில் வைக்கவும்.
இப்பொழுது சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

கீதாச்சல் வெண்டைக்காய் மோர்க்குழம்பு செய்தேன். மிகவும் நன்றாகயிருந்தது. நாங்கள் பூண்டு அதிகமாகச் சேர்க்கமாட்டோம், அதனால் பூண்டு போடாமல் செய்தேன், இருந்தும் நன்றாகயிருந்தது. நன்றிப்பா.

அன்புடன்:-)......
உத்தமி:-)

மிகவும் நன்றி. பூண்டு சேர்க்கமாலும் இதனை செய்யலாம்…ஆனால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்…
அன்புடன்,
கீதா ஆச்சல்

வெண்டைக்காய் மோர்க்குழம்பு செய்தேன் நன்றாக இருந்தது,நான் வெறும் மோர்க்குழம்புதான் செய்வேன்,ஆனால் இந்த முறை வெண்டைகாயெல்லாம் போட்டு செய்தேன் நல்லா இருந்தது,நன்றி கீதா

மிகவும் நன்றி கவி. எங்கள் வீட்டில் அம்மா எப்பொழுதும் மோர் குழம்பு வைக்கும் பொழுது மட்டும் எதவாது ஒரு காயோ அல்லது வடையோ செய்து தான் வைப்பாங்க……(கேட்டால் அப்படி தான் வைக்கனும் என்று வேறு சொல்லுவாங்கா…)ஆனால் நான் காதில் வாங்கி கொள்ளவே மாட்டேன்…
அன்புடன்,
கீதா ஆச்சல்

HAI NAAN SAIDHU PARTHEN.ROMBA NAALA IRUNDHUTHU.BUT GREEN CHILLI ILLAI. RED CHILLI POTTU SAIDHAN NALLA IRUNDHUTHU.
THANK YOU.

ஜானு,
மிகவும் நன்றி . எங்கள் வீட்டில் அனைவருக்கும் மோர் குழம்பு என்றால் மிகவும் விருப்பம். அடிக்கடி இதனை வீட்டில் செய்வோம்.
காய்ந்த மிளகாய் போட்டு செய்தாலும் நன்றாக தான் இருக்கும். நானும் சில சமயம் பச்சை மிளகாய் இல்லாத பொழுது அப்படி தான் செய்வேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்